Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Chandi Saptha Sathi - 5

$
0
0
சண்டி சப்த சதி -5

சாந்திப்பிரியா 


சண்டி சப்த சதியை படிப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன. பதிமூன்று அத்தியாயங்களைக் கொண்ட சண்டி சப்த சதி மூன்று சரித்திரங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. பதிமூன்று அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூல் பிரதம சரிதம், மத்தியம சரிதம் மற்றும் உத்தம சரிதம்என மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.
பிரதம சரிதம் எனும் முதல் பாகத்தில் முதல் அத்தியாயத்தில் லோக மாயைப் பற்றியும் அத்கில் சிக்குண்டு தேவர்கள் முதல் மற்றவர் அனைவரும்  மாயையில் சிக்கி தவிப்பதையும் மாயையான அந்த லோக மாதாவை, அதாவது லோக மாதா எனும் மகா காளியையே  வழிபட்டு அவர்களது மாயையில் இருந்து விடுபட அவளைப் பிரார்த்திப்பதைக் கூறுகிறது. அதில் உள்ள லோக மாதாவான மாயைக்கு விஷ்ணுவே  உட்படுகிறார். இதில் பிரும்மா லோகமாதாவை துதிக்கும் ஸ்தோத்திரமே மிக முக்கியமானது. மதுகைடப சம்ஹாரம் இதில் வருகின்றது.  
மத்யம சரிதம்எனும் இரண்டாம் பாகத்தில் உள்ள அத்தியாயம் இரண்டு முதல் நான்குவரை  மகிஷாசுரமர்தனின் கொடுமையில் சிக்கித் தவிக்கும் தேவர்கள் தேவியை ஸ்தோத்திரம் செய்வது மற்றும் மகிஷாசுரனின் சைனியம் மற்றும்   மகிஷாசுரனின் வதமும் விவரிக்கப்பட்டு உள்ளது.  சகல தேவர்களின் உடல்களில் இருந்தும் பல தேவிகள் வெளிப்பட்டு மகாலஷ்மி எனும்  மகிஷாசுரமர்தினியான  ஒரே அம்பிகையாகிறாள். 
உத்தம சரிதம்எனும் மூன்றாவது பாகத்தில் அத்தியாயம் ஐந்து முதல் பதிமூன்றுவரை (5-13) உள்ளது.   இதில் ஆறாம் அத்தியாயத்தில் தும்ரலோசன வதம், ஏழாவதில் சண்ட-முண்ட அசுரர் வதம், எட்டாவதில் ரக்தபீஜ வதம், ஒன்பதில் நிசும்ப வதம், போன்றவை உள்ளன.   இது அனைத்து விருப்பங்களும் நிறைவேற பிரார்த்திக்கும் வகையில் உள்ளது.
இந்த உத்தம சரிதத்தின் பன்னிரண்டாவது அத்தியாயத்தில் சப்த சதியினைப் பாராயணம் செய்வதினால் ஏற்படும் நன்மைகளை தேவியே கூறுவது போல அமைந்துள்ளது.
அந்த பன்னிரண்டாம் அத்தியாயத்தில் தேவி கூறுகிறாள் '' இந்த துதிகளினால் யார் என்னைப் பிரார்த்தனை செய்கிறார்களோ அவர்களுடைய கஷ்டங்களை நான் போக்குவேன். அஷ்டமி, சதுர்த்தசி மற்றும் நவமி போன்ற தினங்களில் இதைப் படிப்பவர்களை பாவங்கள் அண்டாது.  இந்த மகாத்மியத்தைப் படித்த மட்டிலேயே அனைத்து கஷ்டமும் விலகும். இது எங்கு படிக்கப்படுமோ அங்கு நான் நிரந்தரமாக இருப்பேன். இதை பூஜை, ஹோமங்களில் படிக்கையில் எதிரிகள் ஓடி ஒளிவார்கள் . அவர்களது குலமும்  கோத்திரமும் மேன்மையாக  விளங்கும். அவர்களின் இல்லங்களில் மங்களம்  நிலைக்கும்.  எங்கெல்லாம் பூஜைகளும், அக்னி காரியங்களும் ( ஹோமம்) நடைபெறுமோ அங்கெல்லாம்  இந்த மான்மியம் படிக்கப்பட  வேண்டும்.  வருடம் முழுவதும் செய்யப்படும் கோதானம், அன்னதானம், தூபதீபம், மற்றும் புஷ்பதானம் போன்றவற்றினால் கிடைக்கும் பலனைக் காட்டிலும்,  ஒரே ஒரு தடவை  இந்த மான்மியத்தைப் படிப்பதின் மூலம் அதே பலன் கிடைக்கும்''.
சப்த சாதியின் பூர்வாங்க பாராயணங்களுக்குப் பிறகு மூன்று சரிதங்களைப் பாராயணம் செய்தப் பின் முடிவாக சப்த சாதியின் உத்திராங்கம் எனும் பகுதியைப் படித்து முடிக்க வேண்டும். அந்த உத்திராங்கத்தில் வருவதே தேவி  ஸுக்தம் எனப்படுவது.  இதை வாக் ஆம்ருணிய ஸுக்தம்  என்றும் கூறுவார்கள். இந்த ஸுக்தத்தை  அமைத்தவர் ஒரு பெண்  ரிஷியாவார். அவர் பெயர் வாக் தேவதை.
.............தொடரும் 

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>