கிராம தேவதைகள்- 5

புன்னை நல்லூர் மாரியம்மன்
புன்னை நல்லூர் மாரியம்மன்
[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]
தஞ்சாவூருக்கு அருகில் உள்ளதே புன்னைநல்லூர் என்ற இடம். சோழர்கள் ஆண்ட காலத்தில் இங்கு ஒரு மாரியம்மன் ஆலயம் இருந்துள்ளது. ஆனால் அது காலப் போக்கில் மறைந்து விட்டதின் காரணம் விளங்கவில்லை.
1680 ஆம் ஆண்டு தஞ்சாவூரை வெங்கோஜி என்ற மராட்டிய மன்னன் ஆண்டு வந்தார். அவர் சமயபுரம் மாரியம்மனை பெரிதும் போற்றி வணங்கியவர். ஒருநாள் இரவு அவர் சமயபுரத்துக்கு கிளம்பிச் சென்றார். நேரம் அதிகமாகி ஆலயம் மூடப்பட்டு விட்டதினால் சமயபுரம் ஆலயத்தின் வாசலில் படுத்து உறங்கி விட்டார். அவர் கனவில் மாரியம்மன் தோன்றி தன்னை வணங்க இனிமேல் அவர் சமயபுரத்துக்கு வரத் தேவை இல்லை எனவும், தான் புன்னை நல்லூரில் ஒரு புற்றில் புதைந்து இருப்பதாகவும் கூறினாள். அவர் காலையில் எழுந்து உடனேயே புன்னை நல்லூருக்கு கிளம்பிச் சென்று மாரியம்மன் கூறிய இடத்தில் இருந்த புற்றை கண்டு பிடித்து அதை தோண்டி மாரியம்மனை எடுத்தார். பிறகு அங்கேயே அவளுக்கு மாரியம்மன் ஆலயம் அமைத்து அவளை வழிபாட்டு வரலானார். அவர் மறைவிற்குப் பின் மெல்ல மெல்ல அந்த ஆலயம் நலிவுட்றது.
1738 ஆம் ஆண்டில் தஞ்சாவூரை துல்சா என்ற இன்னொரு மராட்டிய மன்னன் ஆண்டு வந்தார். அவருடைய மகளுக்கு அம்மை நோய் போட்டியதினால் அவளது கண் பார்வை போய் விட்டது. அவர் அழுது புலம்பினார். அன்று இரவு அவருடைய கனவில் ஒரு சிறிய பெண் உருவில் மாரியம்மன் தோன்றி தான் உள்ள இடத்தைப் பற்றிக் கூறியப் பின் அவர் மகளின் கண் பார்வையை தான் நிவர்த்தி செய்து விடுவதாகக் கூறியதினால் அவர் ஒரு ஆட்டு இடையனின் உதவியுடன் அவள் கூறிய இடத்தில் சென்று புற்றை தோண்ட அவருக்கு அங்கு ஒரு பனை ஓலை கிடைத்ததாம். அதில் அந்த புற்றின் மண்ணைக் கொண்டு கழுத்து வரையிலான மாரியம்மனின் ஒரு சிலையை செய்யுமாறும் அதன் பின் அந்தப் புற்றுக்குள் புதைந்து உள்ள தனது தலையை வெளியில் எடுத்து அதனுடன் அந்த களிமண்ணினால் செய்த சிலையையும் சேர்த்து முழுச் சிலையாக்கி விடுமாறும் எழுதப்பட்டு இருந்தது.
அவர் சதாசிவ பிரும்மேந்தர் என்ற மகானின் உதவியை நாடி அதில் கூறப்பட்டு உள்ளதைப் போலவே சிலையை செய்து அதை அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து வழிபடலானார். அதன் பின் தனது கண் குருடான மகளை அங்கு அழைத்து வர அவளுக்கு மீண்டும் கண் பார்வை திரும்பியது. அது முதல் தஞ்சாவூரை ஆண்ட அனைத்து மன்னர்களும் அந்த ஆலயத்தின் நிர்வாகத்துக்கு செல்வ தானம் செய்தனர். இன்று அந்த ஆலயம் அனைத்து மக்களுக்கும் அருள் தரும் ஆலயமாக மாறி உள்ளது.

----------
பின் குறிப்பு:
ஒரு காலத்தில் இந்த ஆலயம் புற்றம்மா எனும் பெயரில் சிறிய கிராம தேவதை ஆலயமாகவே இருந்துள்ளதாம். அப்போது அங்கு மிகப் பெரிய புற்று மட்டுமே இருந்துள்ளது. அதை உள்ளூரில் இருந்த மக்கள் தம்மைக் காக்கும் தேவதையாக வணங்கி வந்துள்ளார்கள். ஆனால் 18 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே தஞ்சாவூர் மன்னர்கள் காலத்தில் இந்த புற்றில் மறைந்திருந்த மாரியம்மன் வெளியில் வந்து ஒரு ஆலயத்தில் அமர்ந்து கொண்டாள். அந்த கிராம தேவதை ஆலயமான புற்று ஆலயமே பின்னர் புன்னைநல்லூர் ஆலயமாக மாறுதல் அடைந்தது. இந்த ஆலய மாரியம்மன் புற்று மண்ணினால் செய்யப்பட்டு உள்ளாள் என்பதினால் அதற்கு அபிஷேகம் செய்வது இல்லை. மாறாக புனுகு எனும் வாசனை திரவியத்தை தூவியே பூஜை செய்கிறார்கள். அங்கு செய்யப்படும் பூஜை மற்றும் அபிஷேகங்கள் அதன் ஆலயத்தின் உற்சவ மூர்த்திக்கே செய்யப்படுகின்றனவாம். தஞ்சாவூரில் இருந்து இந்த ஆலயம் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது - சாந்திப்பிரியா