Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Village Deities - 4

$
0
0
கிராம தேவதைகள்- 4

கற்குன்றின் மீதுள்ள மாவூத்து வேலப்பர் ஆலயம் செல்லும் முகப்பு 


 மாவூத்தூ  வேலப்பர்

[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]

தமிழ்நாட்டில் தேனீ மாவட்டத்தில் ஆண்டிப்பட்டியில் இருந்து பத்தொன்போது கிலோ தொலைவில் உள்ளதே மாவூத்தூ கிராமம். அங்குள்ள மலையில் வேலப்பர் ஆலயம் உள்ளது. அது மலை வாழ் மக்கள் வசிக்கும் பகுதியாகும். பலியார் என்ற இனத்தவர் அங்கு வந்து பூமிக்கு அடியில் வளரும் கிழங்குகளை எடுத்துச் செல்வது உண்டு. அப்படி ஒருமுறை அவர்கள் வந்தபோது அவர்களுக்கு பூமியில் ஒரு முருகன் சிலை கிடைத்தது. அதை அவர்கள் அங்கேயே பிரதிஷ்டை செய்து வைத்து பூஜை செய்து தமது குல தெய்வமாக வழிபட்டனர். அங்கு ஒரு மாங்காய் மரமும் உள்ளது. அதன் அடியில் இருந்து வழியும் ஊற்றினால் அங்கு தண்ணீர் பஞ்சமே இல்லை என்பதினால் அதை மாவூத்தூ என்று அழைகின்றனர். அந்த நீரில் குளித்தால் அனைத்து தோல் சம்மந்தப்பட்ட வியாதிகளும் விலகுமாம். அந்த ஊற்று தண்ணீரை ஆலயத்துக்கு மட்டுமே உபயோகிக்கின்றனர். அதனருகில் கருப்பண்ணஸ்வாமி ஆலயம் உள்ளது.  ஆலயத்துக்குச் செல்ல 167 படிகள் ஏற வேண்டும்.  ஆலயத்தின் பூசாரியாக பள்ளையார் உள்ளார்.
-------------------
பின் குறிப்பு:
தேனி மாவட்டத்தின் மாவூத்தூ கிராமத்தில் உள்ள வேலப்பர் ஆலயத்தினால்தான் அந்த ஊரே பெரும் சிறப்பைப் பெற்றுள்ளது. அற்புதமான இயற்கை காட்சிகளைக் கொண்ட மலை மீது இந்த கிராம தேவதையின் ஆலயம் உள்ளது. மழைக் காலங்களில் மழை நீர் மலை மீதுள்ள மாங்காய் தோட்டத்தில் நிரம்பி அங்கிருந்து நீர் ஊற்றுப் போல கீழே பாய்ந்து விழுகிறது. கோயிலுக்கு தெற்கே உள்ள ஓர் மாமரத்தின் அடியில் எப்போதும் வற்றாத தண்ணீர், ஊற்றாக பொங்கிக்கொண்டே இருக்கிறது.அதனால்தான் இந்த ஊரின் பெயரும் மா(மாமரம்) + ஊற்று = மாவூத்து என ஆகி உள்ளதாம். ஆலயத்துக்கு மலை மீது ஏறியே செல்ல வேண்டும். மலை அடிவாரம் வரை மட்டுமே வாகன வசதிகள் உள்ளன . ஆலயத்தின் பூஜை நேரங்கள் காலை 7.30 முதல் 8.30 வரை மற்றும் மாலையில் 4.30 முதல் 5.30 என்கிறார்கள் .மாவூற்று வேலப்பர் கோயில் கார்த்திகை, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் விஷேச பூஜைகள் நடைபெறும் -சாந்திப்பிரியா

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>