Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Naguleswara Puranam - 6

$
0
0

சாந்திப்பிரியா 



பாகம்-6

'வேடனே இன்னும் தொண்ணூறு  நாழிகைக்குள் நீ கீரிப்பிள்ளையின் முகத்தை அடைய உள்ளாய். அதற்குள் நீ கிளம்பிச் சென்றுவேதாரண்யத்துக்கு தென் பகுதியில் தெரியும் கடலில் பயணித்தால் நீண்டப் பயணத்துக்குப் பின்னர் பெரிய மலை பகுதியை நீ காண்பாய்.  எந்த இடத்தில் உன்னை அறியாமலேயே  உன் மனதில் இதுவே கர்ம யோகத்தை செய்ய வல்லமைக் கொண்ட பூமி எனத் தோன்றுகிறதோ அப்போது உன் பயணத்தை முடித்துக் கொண்டு அங்கு சென்று அந்த மலை அடிவாரத்தில் தங்கி நகுலனாக உள்ள சிவபெருமானை நீ துதித்து வந்தால் உனக்கு மீண்டும் சாப விமோசனம் கிடைக்கும்' என்றது.
அதைக் கேட்ட அந்த வேடனும் சற்றும் காலம் தாழ்த்தாமல் உடனே கிளம்பி வேதாரண்யத்துக்குச் சென்றான். அந்த தேவகணத்தின் உதவியினால் அவனால் பதினைந்து நாழிகைக்குள் வேதாரண்யத்தை பறந்து சென்று அடைய முடிந்தது.   வேதாரண்யத்தை அடைந்து கடலில் பயணிக்கத் துவங்கி இலங்கையின் யாழ்ப்பாணப் பகுதியில் இருந்த நகுல மலைப் பிரதேசத்தை அடைந்தான். அங்கு சென்று இறங்கியதுமே  அந்த வேடன் ஒரு முனிவராக மாறினார்.  ஆனால் அவர் முகம் மட்டும் கீரிப்பிள்ளையின் முகம் போல மாறி விட்டது. கீரிப்பிள்ளையின் முகத்தோடு இருந்த அந்த முனிவரைக் கண்ட மக்கள் அஞ்சினார்கள். அவருடன் நெருங்கிப் பேசவோ அல்லது அவர் அருகில் செல்லவோ பயந்தார்கள்.  அவரை சீண்டுவாரில்லை. மேலும் அவரை திட்டித் தீர்த்தார்கள்.  அதைக் கண்டு மனம் ஒடிந்து போன அந்த முனிவர்  அந்த ஊரை விட்டு ஒதுங்கி மலை அடிவாரத்தில் இருந்த வனப் பகுதிக்குச் சென்று அங்கு நகுலேஸ்வரரை வேண்டித் துதித்தபடி தவத்தில் இருந்தார்.
பல காலத்துக்கு தவத்தில் இருந்த அவர் தவத்தைக் கண்டு மகிழ்ந்து போன சிவபெருமான் அவர் முன் தோன்றி தானே அந்த இடத்தில் உருவமற்ற நகுலேஸ்வரராக தங்கி உள்ளதாகவும் அவர் வேண்டும் வரம் எது என்றும்  கேட்க சிவபெருமானிடம் நடந்த அனைத்தையும் கீரி முகத்தைக் கொண்ட முனிவர் கூறினார். அதைக் கேட்ட நகுலேஸ்வரர் அவருக்கு சாப விமோசனம் தந்து அவரை அழகிய முகம் கொண்ட முனிவராக்கினார்.  கீரிப்பிள்ளையின் முகத்தைக் கொண்ட முனிவர் அதி அற்புதமான அழகை அடைந்ததைக் கண்ட மக்கள் அவர் உண்மையிலேயே பெரும் மகானாக இருந்திருக்க வேண்டும், அவருக்கு தெய்வீக அருள் உள்ளது என்பதை உணர்ந்தார்கள்.  தாங்கள் அவரை உதாசீனப் படுத்தியதற்கு அவரிடம் வந்து மன்னிப்புக் கேட்டார்கள். அந்த முனிவரும் பல காலம் அங்கேயே தங்கி இருந்து நகுலேஸ்வரருடைய மகிமையை எடுத்துக் கூறி மக்களை நல்வழிப்படுத்தி வந்தார்.


காலப்போக்கில் அவர் மறைந்து விட அவருடைய பெயராலேயே அந்த மலை பகுதியை கீரிப்பிள்ளை மலை என்ற பெயரில் கீரி மலை என அழைத்தார்கள். அந்த ஊர் மன்னனும் அந்த முனிவரின் புகழைக் கேள்விப்பட்டு அங்கு வந்து அவரை தரிசனம் செய்தப் பின் அவர் விரும்பியபடி அங்கேயே ஒரு ஆலயத்தையும் நிறுவினார். இப்படியாக சாபம் பெற்று இருந்த முனிவர் சில பிறவிகளை எடுத்து இங்கு வந்து நகுலேஸ்வரரை ஆராதித்து மோட்ஷம் அடைந்தார்' என்று சூதக முனிவர் கூறினார்.
அவர் அதைக் கூறி முடிக்கவும், மாலைப் பொழுதும் துவங்கியது. சாயங்கால கடமைகளை அனைவரும் செய்ய வேண்டி இருந்ததினால் அனைவரையும் மீண்டும் மறுநாள் காலை அங்கேயே வருமாறும் அந்த நகுலேஸ்வர தலத்தை பற்றிய மேலும் சில மகிமைகளைக் கூறுவதாகவும் கூற முனிவர்கள் கலைந்து சென்றார்கள். மறுநாள் காலை சூதக முனிவர் வரும் முன் அங்கு வந்து மீண்டும் கூடினார்கள்.
.......தொடரும்

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>