Quantcast
Viewing all articles
Browse latest Browse all 460

Naguleswara Puranam - 4


சாந்திப்பிரியா 


பாகம்-4

நகுல மாதவர் பிரும்மாவிற்கு  கூறியது  : 

''முனிவர்களே , எல்லாப் பாவங்களையும் போக்கவல்ல இந்த தீர்த்தத்தின் மகிமையை குறித்து நகுல மாதவர் பிரும்மாவிற்கு கூறியதை இப்போது கூறுகிறேன். அதையும் கேளுங்கள்.  விஷ்ணு கூறினார் ' இந்த நதி  பிறக்கும் இடம் எது தெரியுமா? அது நகுல மலையில் இருந்தே உற்பத்தி ஆகிறது. அதன் பெயர் கன்னியா கங்கை என்பது. உலகத்துக்கு நன்மை பயக்க  தன்னிடம் வந்து ஸ்நானம் செய்தவர்களின் பாவங்களை தானே சுமந்து கொண்டு சென்று கடலில் கரைத்து விடுகிறது. அப்போது அந்த பாவங்கள் அனைத்தும் அழிந்து போகின்றன.  எந்த ஒருவர் இங்கு வந்து இந்த கன்னியா கங்கை  தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வானோ அப்போதே அவன் பாவங்கள் அனைத்தும் அழிந்து போகும். அவனும் சியவப்ரீதியைப் பெறுவான். பொன்னை களவாடியவர்கள், மதுபானம் பருகுபவர்கள், பிராமணனைக் கொன்றவர்கள் மற்றும் குருத்துரோகிகள், கணவனுக்கு துரோகம் செய்தவர்கள்  என அனைத்து பாவங்களையும் செய்தவர் எவராயினும் இந்த தீர்த்தத்தில் வந்து குளிக்கையில் அந்த பாவங்களில் இருந்து விமோசனம் பெறுகிறார்கள்.  எந்த மனிதர் இந்த தீர்த்தத்தில் வந்து ஸ்நானம் செய்து எள்ளும் நீரும் கொண்டு தர்ப்பணம் செய்வானோ அவனது பித்ருக்கள் அனைவரும் மேலான பதத்தை அடைவார்கள்.  இங்கு வந்து இந்த தீர்த்தத்தில் பிண்டதானம் செய்து விட்டு எவனொருவன் அன்னதானமும் செய்வானோ  அவன் கயாவிலும், கங்கையிலும், நர்மதையிலும், காவேரியிலும்  பித்ரு காரியம் செய்த பலனை விட அதிக பலனை அடைவார்கள். எவன் ஒருவன் இந்த தீர்த்தத்தில்  குளித்தப் பின் பசுவை தானம் செய்வானோ அவர்கள் அந்த பசுவின் மீது உள்ள ரோமத்தின் கணக்கான அளவு கற்பகாலம்வரை  அடுத்தப் பிறவி எடுக்காமல் ஸ்வர்கத்தில்  இருப்பார்கள். எவன் ஒருவன் இங்கு வந்து வேத விதிப்படி யாகம் செய்வானோ அவன் பிரும்ம லோகத்தை அடைவான். எவன் ஒருவர் இங்கு வந்து நகுல மாதவரை வணங்கித் துதிப்பாரோ அவன் விஷ்ணு லோகத்தை அடைந்து ஒரு கோடி கற்ப  காலம் வரை அங்கேயே வாழ்ந்து  கொண்டு  இருப்பான். எவன் ஒருவன் நகுல மாதவரை வணங்கியப் பின்  பக்தியோடு இங்கு சிவபூஜை செய்வானோ அவன் சிவப் பிராப்தியைப் பெறுவான்'.
இப்படியாக நைமிசாரண்யத்தில் கூடி இருந்த முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் நகுலேஸ்வரத்தைக் குறித்து கூறிய சூதக முனிவர் மேலும் அதன் மகிமையைக் குறித்துக் கூறலானார் '' உத்தமமான முனிவர்களே, நான் இன்னமும் நகுலேஸ்வரரின்  மகிமையை சொல்வேன். கேளுங்கள்.
 நகுலேஸ்வரம் சாதாரண தலம் அல்ல. இங்கு  ராமபிரான் வந்து பெரும் சிவபக்தனான ராவணனைக் கொன்ற தமது பிரும்மஹத்தி தோஷத்தைத் தொலைத்துக் கொண்டு சென்றுள்ளார். சனியினால் பீடிக்கப்பட்ட நளனும்  இங்கு வந்து நகுலேஸ்வரரையும், நகுலேஸ்வரியையும் வணங்கி நிவாரணம் பெற்று உள்ளார்கள். அது மட்டும் அல்ல பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனனிடம் தனது பசுக்களை களவாடிவிட்ட திருடர்களிடம் இருந்து தனது பசுக்களை மீட்டுத் தருமாறு ஒரு பிராமணன் வேண்டிக் கொண்டபோது,  அந்த திருடர்களை துரத்திக் கொண்டு அர்ஜுனன் போனான். திருடர்களோ  தருமனின் வீட்டில் புகுந்து பின் வழியே ஓடி விட அவர்களை துரத்திக் கொண்டு சென்ற அர்ஜுனன், அந்த வீட்டுக்குள் நுழைய அப்போது தன்னை மறந்த நிலையில்  திரௌபதியுடன்  தருமபுத்திரர் தனிமையில் இருந்தது தெரியாமல் அவர்கள் இருந்த அந்த அறைக்குள்  நுழைந்து அவர்கள் இருந்த அலங்கோல கோலத்தைப்  பார்த்து விட்ட பாவத்தைத் தொலைக்க இங்கு வந்து சிவபெருமானை வணங்கி நிவாரணம் பெற்றுள்ளார்''.
இப்படியாக சூதக முனிவர் கூறிக்கொண்டு இருந்த கதையைக் கேட்ட முனிவரில் ஒருவர் தனது சந்தேகத்தை சூதகரிடம் கேட்டார் ' மா முனிவரே, இது அனைத்தும்  கேட்கவே  மிக அற்புதமாக உள்ளது.   ஆனால்  நகுல முனிவர் என்றொருவர் இருந்ததாகவும் அவர் இங்கு வந்து தவம் செய்து சாப விமோசனம் பெற்றதினால்  நகுல மலை என்று இந்த இடத்துக்கு பெயர் வந்ததாகவும் சிலர் கூறுகிறார்களே. அதுவும் உண்மையா?  நகுலேஸ்வரரின் மகிமையை கூறும் மேலும் சில கதைகள் உண்டெனில் அவற்றையும் எமக்குக் கூறுவீர்களா ?' என்று கேட்க  சூதக முனிவர் அந்த தலத்தின்  மகிமையை   எடுத்துக் காட்டும் மேலும் சில கதைகளை தொடர்ந்து  கூறலானார்.
............தொடரும் 

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>