சாந்திப்பிரியா
பாகம்-2
''ராவணனின் ராஜ்யத்திலே வாழ்ந்திருந்த யாழ்ப்பாணி எனும் கந்தர்வனின் பெயராலேயே நகுலேஸ்வரமும் யாழ்ப்பாணம் என ஆயிற்று. அனால் அதற்கு முன்னரே அந்த பூமி புண்ணிய பூமியாக, சிவபெருமான் தங்கி இருந்த பூமியாக, சிவபெருமான் திருமணம் செய்து கொண்ட பூமியாக இருந்துள்ளது என்பதைக் கேட்க உங்களுக்கெல்லாம் அதிசயமாக இருக்கும். இனி அந்தக் கதையையும் சொல்வேன். நன்கு கேட்டு மகிழுங்கள் '' எனக் கூறிய சூதக முனிவர் அந்தக் கதையைக் கூறலானார்.
''பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் அகஸ்திய முனிவர் கதிர்காமனுக்கு வந்து அங்கு முருகப் பெருமானை வழிபட்டுக் கொண்டு இருந்தார். சிவபெருமானின் திருமணக் கோலத்தை கண்டு களிக்க விரும்பிய அகஸ்திய முனிவர் சிவபெருமானின் ஆணைப்படி பூமியின் பாரத்தை சமனாக்க இந்த பூமியில் வந்து தங்கி இருந்த நேரம் அது. கதிர்காமத்தில் இருந்த நேரத்தில் அகஸ்திய முனிவர் சிவபெருமானை வேண்டினார் 'உமாபதியே.........சங்கரா..........உமது நடன பேரிகை உலகெங்கும் உள்ள கடல் அலைகள் ஒரே நேரத்தில் ஆர்ப்பரிக்கும் முழக்கம் போல உள்ளதே. அப்படிப்பட்ட உனது உன் திருமணக் காட்சியை ஆவலுடன் கண்டு களிக்க அல்லவா நானும் உன்னைத் தேடி அலைகிறேன். ஐயனே, கருணை மணாளா, எனக்கு உன் திருமணக் கோலத்தைக் காட்டி அருள் புரிவாயா?'.
பல காலம் தொடர்ந்து சிவபெருமானை வேண்டிக் கொண்டு இருந்த அகஸ்திய முனிவரின் வேண்டுகோளை கேட்ட சிவபெருமானும் அகஸ்திய முனிவர் முன் தோன்றி அவரை கடல் சேர்ந்த பிரதேசமான நகுலத்துக்கு வந்து தம்மை தரிசிக்குமாறும், அங்கு தனது திருமணக் கோலத்தைக் காட்டுவதாகவும் அகஸ்திய முனிவருக்கு உறுதி தந்தார். அதை ஏற்றுக் கொண்ட அகஸ்திய முனிவரும் சற்றும் தாமதிக்காமல் நகுலேஸ்வரரை நோக்கி பயணித்தார். காலம் கடந்தது. நகுலேஸ்வரத்தை சென்றடைந்த அகஸ்தியர் அங்கு கங்கரசாகரசங்கமம் கடலில் குளித்துவிட்டு அதன் கரையிலேயே அமர்ந்து கொண்டு சிவபெருமானை துதிக்கலானார்.
இன்னும் காலம் ஓடியது. அன்று சித்ரா மாதம், பூச நட்சத்திரம், சோம வாரம் ஆகும். மதிய நேரத்தில் திடீரென ஆகாயத்தில் இருந்து பேரிகை முழக்கம் கேட்டது. வானம் முழுவதும் பூமாரி பொழிந்தவண்ணம் இருக்க, எங்கெங்கு நோக்கினாலும் வானமே வண்ணமயமாக ஜொலிக்க பவழமும், வைடூரியமும், ரத்தினக் கற்களும் பூமாரி விழுந்து கொண்டு இருந்த ஒரு பெரிய சிம்மாசனம் ஆகாசத்தில் இருந்து பூமியை நோக்கி இறங்கி வந்து கொண்டு இருந்ததை அகஸ்திய முனிவர் கண்டார்.
அந்த சிம்மாசனம் பூமிக்கு அருகில் வந்தபோதே நாதஸ்வர இசைகளும், நாத ஒலிகளும் தம்மை மயக்குவதை உணர்ந்தார். அந்த சிம்மாசனத்தை சுற்றி மறைத்தவாறு பலகோடி தேவர்களும் முனிவர்களும் வந்து கொண்டு இருந்தார்கள். ஆகா....அந்த காட்சியை எப்படி விவரிப்பது....அந்த காட்சியைக் காண ஆயிரம் கோடி கண்கள் அல்லவா வேண்டும்.
அடுத்து அங்கே ஒரு பெரிய திருமண மண்டபமே இறங்கி வந்திருக்க அந்த மண்டபத்திற்குள் அனைவரும் நுழைந்தார்கள். தேவேந்திரன் பொன்னையும் பொருளையும் வழி நெடுக தூவிக்கொண்டு வர சிவபெருமானின் இரு புறத்திலும் பிரும்மாவும், விஷ்ணுவும் ஆடிப் பாடிக் கொண்டு வர, அவர்களுக்கு முன்னால் ஒரு கை தடியை தட்டிய வண்ணம் நந்தி தேவர் சென்று கொண்டு இருக்கையிலேயே, ஓரக்கண்ணால் அகஸ்திய முனிவரைக் கண்ட சிவபெருமான் அவரை உள்ளே வருமாறு செய்கை தந்ததும், அதைக் கவனித்த விஷ்ணுவும், பிரும்மனும் ' மா முனிவா....... வருக...வருக...உம் வரவு நல்வரவாக....வாரும்...உள்ளே வாரும் 'என அவரை அழைக்க ஆனந்தக் கூத்தாடியபடி அகஸ்திய முனிவரும் அவர்களைத் தொடர்ந்து உள்ளே சென்றார்.
அடுத்த சில கணங்களில் இமயமலையின் அதிபதி அங்கு தனது மகள் பார்வதியை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு தனது பரிவாரங்களுடன் நுழைந்தார். வேத கானங்கள் முழங்கின. அங்கு வந்த இமயவன் சிவபெருமானின் பாதங்களைத் தொட்டு வணங்கி அதற்கு பாலும், தேனும், பன்னீரும் ஊற்றி அபிஷேகம் செய்தார். பலவண்ணப் புஷ்பங்களை பாதத்தில் போட்டு அர்ச்சித்தார்.
அடுத்து கண்களை பறிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டு இருந்த அவர் மகள் பார்வதி தேவியை அவர் மனைவி அழைத்து வர அவரை சிவபெருமானின் வலப்புறத்தில் நிற்க வைத்து அவர்களின் திருமணத்தை முறைப்படி துவக்கி வைத்தார். அங்கிருந்த பிரும்மனோ 'ஐயனே வேதகமங்கள் கூறிய திருமணக் கிரியைகளை இந்த திருக்கல்யாண வைபவத்திற்கு நான் ஓதி திருமணத்தை நடத்தி வைக்க அடியேன் என்னை அனுமதிக்க வேண்டும்' என்று சிவபெருமானிடம் வேண்டிக் கொள்ள அதற்கும் சிவபெருமான் அன்புடன் இசைந்தார். அதற்கேற்ப வாத்ய வகைகள் முழங்க மந்திரங்களை பிரும்மன் ஓதத் துவங்க, இமயமலை அரசனோ தனது பெண் பார்வதியின் கைகளை சிவபெருமானின் கரங்களில் ஒப்படைத்து அந்த திருமண வைபவத்தை நிறைவேற்றினார். அதைக் கண்டு அகத்தியர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். தனது ஆசையை இந்த பூமியில் சிவபெருமான் நிறைவேற்றி உள்ளாரே என்பதைக் கண்டு பலமுறை அவரை வணங்கி எழுந்தார். அவருக்கு பூஜைகளை செய்து மகிழ்ந்தார். சிவபெருமானும் அற்புதமாக அலங்கரிக்கப்பட்டு இருந்த சிம்மாசனத்தில் தனது மனைவியான பார்வதியுடன் அமர்ந்து கொண்டு அனைவரையும் ஆசிர்வதித்தார். அப்போது அவரை வணங்கிய அகஸ்தியர் சிவபெருமானை இவ்வாறாகப் புகழ்ந்து கூறினார். ' பரமபதியே இந்த நன்நாளில் உம் விவாகத்தை கண்டு களித்ததினால் நான் பிறவிப் பயனை முழுமையாக அடைந்து விட்டேன். கருணாகரனே, நகுலேஸ்வரா, இந்த கங்காசாகர சமுத்திரத்தின் மகிமையையும், நகுலத்தின் மேன்மையையும் இன்றுதான் உலகிற்கு தெரிய வந்துள்ளது. மற்றெல்லா தலத்திலும் கிடைக்காத ஆனந்தம் இங்குதான் எமக்கெல்லாம் கிடைத்துள்ளது. இந்த தலத்தில் நீங்கள் இன்று வந்துள்ளது அளவில்லா மகிழ்ச்சியை அனைவருக்கும் கொடுக்கட்டும். இந்த தலம் உங்களது திருமணத்தினால் பெரும் புகழ் அடைந்துள்ளது' என்று கூறத் துவங்க அதைக் கேட்டுக் கொண்டு இருந்த சிவபெருமான் புன்முறுவல் செய்து பிரும்மாவைப் பார்க்க அகஸ்தியரைப் பார்த்து பிரும்மா கூறலானார் 'அகஸ்தியா........ சிவபெருமானின் மீதான உமது பக்தியைக் கண்டு அனைவரும் மனம் மகிழ்கிறோம். இந்த இடம் இன்றல்ல, பல காலத்துக்கு முன்னரே சிவபெருமான் நகுலேஸ்வரராக வந்து தங்கி இருந்த இடம் ஆகும். இந்த இடம் இன்றைய மேன்மையை விட அன்றே இன்னும் பெரும் அதிகப் பெருமைப் பெற்ற இடமாகும். அதற்கான காரணம் இந்நாள்வரை ஒரு தேவ இரகசியமாகவே இருந்துள்ளது. அந்த இரகசியத்தை அனைவருக்கும் இன்று வெளிப்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. அதை இப்போது நான் கூறுகிறேன். அனைவரும் கேளுங்கள்' என்று கூறியப் பின் அந்த ரகசியத்தை அனைவருக்கும் கூறத் துவங்கினார். அந்த ரகசியம் என்ன?

............தொடரும்