Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Naguleswara Puranam - 1

$
0
0



சாந்திப்பிரியா 


பாகம்-1

ஒரு காலத்தில் ஆசியாவின் பகுதியான இந்தியாவும் இலங்கையும் ஒன்று சேர்ந்த ஒரே பூமிப் பிரதேசமாக இருந்துள்ளது என்ற நம்பிக்கை பலருக்கும் உள்ளது. அந்த பிரதேசத்தில் பல இடங்களிலும் பல மேன்மையான ஆலயங்கள் இருந்துள்ளன. ஆனால் காலப்போக்கில் இரண்டு பூமிகளும் கடலினால் பிளக்கப்பட்டு தனி பூமிகள் ஆகி விட்டதினால் அன்று இருந்த மேன்மையான ஆலயங்கள் இரு பூமியிலும் அங்காங்கே தங்கி விட்டன. அவற்றின் பலவற்றின் விவரம் நமக்கெல்லாம் தெரியும். ஆனால் அவற்றில் சில இந்த வெளி உலகில் அதிகம் தெரியப்படாமல் உள்ளது. அதில் சில தொன்மை வாய்ந்த ஆலயங்கள் இலங்கை பூமியில் உள்ளன. அவற்றின் புராணங்கள் அற்புதமானவை, மேன்மையானவை. ஆகவேதான் நான் இப்படிப்பட்ட ஆலயங்களைத் தேடிப் பிடித்து அந்த புராண வரலாற்றை பற்றி எழுதுகிறேன். அவற்றில் ஒன்றே நகுலேஸ்வரர் புராணம். இதை நகுலேஸ்வரர் மான்மியம் என்றும் கூறுவார்கள். நகுலேஸ்வரர் மான்மியம் என்பது ஸ்ரீலங்காவில் யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள நகுலேஸ்வரர் எனும் சிவபெருமானின் ஒரு ஆலயம் பற்றிய புராணக் கதை. அதைப் படித்து மகிழுங்கள். 
ஒரு காலத்தில் நைமிசாரண்யத்தில் முனிவர்கள் அமர்ந்து இருந்தது போல அன்றும் அனைவரும் அமர்ந்து இருந்தார்கள். அப்போது அங்கு வந்த சூதக முனிவரைப் பார்த்த மற்ற ரிஷி முனிவர்கள் '' மா முனிவரே எங்களுக்கு ஒரு சந்தேகம் உள்ளது. நேற்று நாங்கள் பேசிக் கொண்டு இருக்கையில் நாரத முனிவர் இந்தப் பக்கமாக போய்க் கொண்டு இருந்தார். அவரை பார்த்த நாங்கள் ஸ்வாமி , நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று கேட்டபோது அவர் தட்சிண கைலாயம் எனப்படும் நகுலேஸ்வரத்துக்கு தான் சென்று கொண்டு இருப்பதாகவும், அங்கு சென்று நகுலேஸ்வரரை வணங்கியப் பிறகு வந்து பேசுவதாகக் கூறி விட்டு அவசரமாகச் சென்று விட்டார். ஆனால் நாங்கள் யாருமே நகுலேஸ்வரர் எனும் தலத்தை பற்றிக் கேள்விப்படவே இல்லை. அது என்ன தலம்? அது எங்குள்ளது? அதன் மகிமை என்ன என்பதை விளக்குவீர்களா'' என்று கேட்டார்கள். உடனே சூதக முனிவரும் அங்கு அவர்கள் முன்பாக அமர்ந்து கொண்டு நகுலேஸ்வர தலத்தை பற்றிய மான்மியத்தைக் கூறலானார்.
'' முனிவர்களே, நீங்கள் அனைவரும் நகுலேஸ்வரத்தைப் பற்றிக் கேட்டதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்றுதான் உங்களுக்கும் அந்த தலத்தின் பெருமை தெரிய வேண்டும் என்று உள்ளது போலும். முதலில் நகுலேஸ்வரத்தைப் பற்றிய பெருமையைக் கூறியப் பின்னர் அது உள்ள இடத்தைக் கூறுகிறேன்.
முனிவர்களே, யாழ்ப்பாணம் என்ற இடத்தில் உள்ள மலை மீது உள்ள இந்த நகுலேஸ்வர ஆலயத்தைக் குறித்துக் கூறும் முன் அந்த ஆலயம் உள்ள யாழ்ப்பாணம் பிறந்த காரணத்தையும், அங்கு உள்ள ஆலயத்தில் நகுலன் என்ற பெயரை சிவபெருமான் தரித்துக் கொண்டதின் கதையையும் அனைவரும் கேளுங்கள்.
முன்னொரு காலத்திலே ராமனால் வதைப்பட்டு மரணம் அடைந்த இலங்கேஸ்வரன் எனும் ராவணன் இலங்கையை ஆண்டு வந்தான். பெரும் சிவபக்தனான அவன் யாழ் எனப்படும் வீணையை இசைத்து கானம் பாடி சிவபெருமானை பூஜித்தும் மகிழ்வித்தும் அவரிடம் இருந்து பல வரங்களை பெற்றிருந்தான். காலம் கடந்தது. ராமனின் மனைவி சீதையை கவர்ந்து வந்து, அதனால் ஏற்பட்ட பிரச்சனை பெரும் போராகி ராவணன் அந்த யுத்தத்தில் கொல்லப்பட்டது அனைவருக்கும் தெரியும். அப்போது இலங்கையில் ராவணனின் ஆட்சியில் இருந்த கந்தர்வனான சுசன்கீதன் என்பவன் நெடுநாளாகவே ராவணனின் வீணை மீது ஆசை கொண்டிருந்தான். ராவணன் யுத்தத்தில் மடிந்த சேதியைக் கேட்டவன் ராவணனின் அந்தப்புரத்துக்குப் போய் அந்த யாழ் எனும் வீணையை எடுத்து வந்து விட்டான். அதை எடுத்து வந்தவன் அப்போது பெரும் காடுகளும் மலைகளுமாக மட்டுமே இருந்த யாழ்ப்பாணத்திலே இருந்த கங்கரசாகரசங்கமம் எனும் தீர்த்தத்தில் சென்று குளித்தான். அங்கு குளித்தவன் யாழ் எனும் வீணையை எடுத்துக் கொண்டு போய் நாதத்தை மீட்டி அற்புதமான பாடல்களைப் பாடி நகுலேஸ்வரரை பூஜித்தான். அவன் இனிய கானத்தையும் மனம் உருகி செய்த தோத்திரங்களையும் கேட்ட நகுலேஸ்வரர் எனும் சிவபெருமான் அவன் முன் தோன்றி அவன் கேட்ட வரங்களை தந்ததும் அல்லாமல், அவனை யாழ்ப்பாணி அதாவது யாழ் இசைப்பவன் எனும் பெயரை தரிப்பான் என்று அருள் செய்து விட்டுப் போனார். அவர் அருள் புரிந்த சில நாட்களிலேயே அவர் கொடுத்த சக்திகளைக் கொண்டு அந்த கந்தர்வன் அந்த காடுகளையும், மலைகளையும் அழித்து ஒரு நகரை நிர்மாணிக்க பல இடங்களிலும் இருந்தும் பலரும் அங்கு வந்து தங்கலானார்கள். யாழ்ப்பாணி எனும் அவன் பெயராலேயே அந்த ஊரும் யாழ்ப்பாணம் என ஆயிற்று. இப்படியாக நகுலேஸ்வரர் எனும் ஆலயம் உள்ள இடம் யாழ்ப்பாணம் என பெயர் கொண்டது''.
இப்படியாக அந்த தலம் பிறந்தக் கதையை கூறிக் கொண்டு இருந்த சூதக முனிவர் மேலும் தொடர்ந்து கூறலானார்.
'' குலம் என்பதின் ஆன்மீக விளக்கம் சரீரம் எனப்படும். நகுலம் என்றால், அதாவது ந + குலம் = நகுலம், என்பது சரீரம் அற்றவன் என்று பொருள்படும். இந்தப் பிரபஞ்சத்தில் சரீரமே இல்லாமல் உள்ள சக்தியாக இருந்தவர் பராசக்தியின் ஒரு வடிவமான சிவபெருமான் என்பதினால் சிவபெருமானுக்கு நகுலன் என்ற பெயரும் உண்டு. அப்படிப்பட்ட சிவபெருமான் இங்கு எப்படி நகுலேஸ்வரராக வந்தார்? அதில் அகத்திய முனிவரின் பங்கு என்ன? இதையும் கேளுங்கள்''
...............தொடரும் 

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>