திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் மூதேவி எனும் ஜேஷ்டா தேவிக்கு சிலை உள்ளதைப் போலவே திருச்சி மாவட்டத்தில் உள்ள உய்யகொண்டான் மலையில் உள்ள உஜ்ஜீவனாதர் எனும் ஆலயத்திலும் மூதேவி எனும் ஜேஷ்டா தேவியின் சிலை வைக்கப்பட்டு வணங்கப்பட்டு வந்துள்ளது. எவர் ஒருவர் நீண்ட பயணம் மேற்கொள்வார்களோ அவர்கள் தமது பயணத்தின் போது எந்தவித விபத்தும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஜேஷ்ட தேவியை வேண்டிக் கொண்டு வழிபாடு செய்து உள்ளார்கள். அப்படிப்பட்ட வழிபாடு இன்றும் உய்யகொண்டான் மலையில் உள்ள உஜ்ஜீவனாதர் கோயிலில் தொடர்கிறது என்பதின் காரணம் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியை தரிசித்தால் விபத்துகளிலிருந்து நம்மை காப்பாற்றுவாள், பயணத்தின்போது எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்வாள் என்பது நம்பிக்கையாக உள்ளது. இங்குள்ள ஜேஷ்ட தேவி ஆதி பராசக்தி என வணங்கப்படுகிறாள். அவள் சிலையின் இருபுறங்களிலும் இரண்டு உருவங்கள் உள்ளன.
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் சன்னானலூரில் கொண்டீஸ்வரம் எனும் பசுபதீஸ்வரர் ஆலயத்திலும் மூதேவி எனும் ஜேஷ்டா தேவியானவள் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் சன்னதிகளுக்கு இடைப் பகுதியில் அமர்ந்து கொண்டு பக்தர்களுக்கு அருள் ஆசி புரிகிறாள். அவளை அனுக்கிரஹ தேவதையாக இந்த ஆலயத்தில் வழிபடுகிறார்கள். இங்கு உள்ள ஜேஷ்டா தேவியை மூதேவி என்று கூறுவார்கள். தமது வேண்டுதல்கள் நிறைவேற இந்த தேவிக்கு ஆடைகள் சாத்தியும் அபிஷேகம் செய்தும் வழிபடுகிறார்கள்.
தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் சப்த கன்னிகைகள் தமது சாபத்தை விலக்கிக் கொண்ட தலமான கடம்பவனேஸ்வரர் ஆலயத்திலும் ஜேஷ்டா தேவி வழிபடப்பட்டு வந்துள்ளாள். இந்த ஆலயம் சுமார் 1000 அல்லது 2000 வருடங்களுக்கு முற்பட்ட ஆலயம் ஆகும்.
அது போலவே 1000 அல்லது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ஹரி தீர்த்தேஸ்வரர் ஆலயத்திலும் சப்த மாதர்கள், அறுபத்தி மூன்று நாயன்மார்கள், ஐயனார், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சரஸ்வதி, மகாலட்சுமி, முருகன், நவகிரகங்கள், பைரவர், சூரியன், சந்திரன் போன்றவர்களுடைய சன்னதியைப் போலவே ஜேஷ்டா தேவிக்கும் சன்னதி உள்ளது என்பதில் இருந்து அவள் அந்த காலங்களில் வழிபடப்பட்டு வந்துள்ளது புரியும்.
ஜேஷ்டா தேவியின் சிலையை பிரதிஷ்டை செய்கையில் அவள் அநேகமாக மேற்கு பக்க மூலைகளிலேயே வைக்கப்பட்டு இருப்பதும், அவளை தனியே வைக்காமல் இருபுறமும் இரு உருவங்களுடன் அவளது சிலைகளை செதுக்கி உள்ளார்கள். இந்த ஆலயத்தில் காணப்படும் அவள் சிலையில் அவளது இருபுறமும் காணப்படும் இரு உருவங்கள் அவளது மகன் குளிகன் மற்றும் மகள் மாத்தி என்கிறார்கள். ஆனால் மற்ற ஆலயங்களில் அவளது சிலையின் இருபுறமும் செதுக்கப்பட்டு உள்ள இரு உருவங்களை நந்தி தேவர் என்றும், வாக் தேவதை என்றும் கூறுகிறார்கள்.
மாயவரத்தின் அருகில் உள்ள வழுவூரில் சூலை நோய்கள் (காலம் தவறி நிகழும் மாதவிடாயால் ஏற்படும் நோய் அல்லது வயிற்று வலி நோய்)குணமாக பக்தர்கள் ஆராதிக்கும் வீரட்டேஸ்வர் என்ற சிவன் ஆலயம் ஒன்று உள்ளது. அது பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த ஆலயம் ஆகும். அந்த ஆலயத்திலும் ஜேஷ்டா தேவி வணங்கப்பட்டு வந்து இருக்கிறாள்.
வட நாட்டில் பல இடங்களிலும் சீதள தேவி என்பவளை ஜேஷ்ட தேவியாக வணங்கி வருகிறார்கள். அவள் அம்மை போன்ற கொடிய நோய்களை குணப்படுத்துவதாக கூறப்படுகிறது.
சென்னையின் அருகில் திருக்கழுக்குன்றம் எனும் இடத்தின் அருகில் பல்லவ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு உள்ள வீராபுரம் என்ற சிவன் கோவிலை சேர்ந்த ஒரு ஆலயக் குளம் உள்ளது. அதன் படிக்கட்டுக் கரையிலும் ஜேஷ்டா தேவி வழிபடப்படுகிறாள்.
108 நாமங்களைக் கூறி லஷ்மி தேவியை ஆராதிக்கும் தோத்திரத்தில் ஜேஷ்டா தேவியும் இடம் பெற்று இருக்கிறாள். அதில் சில வரிகள் கீழே தந்துள்ளேன்:
1982 ஆம் ஆண்டில் தினமணி நாளிதழில் வெளியான ஒரு செய்தி கீழே தரப்பட்டு உள்ளது.
''.....மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் உள்ள சுப்பிரமணியர், ஜேஷ்டா தேவியின் திருவுருவே என்று பல அறிஞர்களும் ஆய்ந்துள்ளனர். தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் கிடைத்துள்ள பல நூற்றுக்கணக்கான ஜேஷ்டா தேவிகளிலிருந்து தனித்துவம் பெற்ற பழமையான ஜேஷ்டா தேவியின் சிலை ஒன்று வட ஆற்காட்டின் தெள்ளாறு கிராமத்தில் வழிபாட்டில் இருந்தது அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டது. பிற்காலப் பல்லவர்கள் அல்லது சோழர்கள் காலத்திய பாணியில் உள்ள இத்திருவுருவில் காக்கைக் கொடியும் துடைப்ப ஆயுதமும், கழுதை வாகனமும், கையில் கொம்புடன் நந்திமுகம் கொண்ட அழகற்ற வாலிபனும், அழகே ஓர் உருவான பெண்ணும், அக்னிக் கலசமேந்திய சேடியும் இருப்பது,சமகிருதத்தில் வருணிக்கப்பட்ட ஜேஷ்டா தேவியை அப்படியே நினைவூட்டுகிறது. புதுவையில் உள்ள பிரெஞ்ச் இன்டிடியூட் ஆப் இந்தோலஜி என்னும் ஆய்வகத்தில் உள்ள பல நூறு ஜேஷ்டா தேவிச் சிற்பங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது இதன் தனித்தன்மையும் சிறப்பும் தெரிந்தது. அச்சிறுபாக்கம் புலவர் தாமரைக்கண்ணனும், பாகூர் புலவர் சு.குப்புசாமியும் வழிபாட்டில் இருந்த இதன் சிறப்பைக் கண்டறிந்தனர்'' ..........- தினமணி 3.1.1982
இப்படியாக பத்தாம் நூற்றாண்டுவரை பரவலாக பல இடங்களிலும் வழிபடப்பட்டு வந்துள்ள மூதேவி எனும் ஜேஷ்டா தேவி வணங்கத்தக்கவளே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. யாரையும் இழிவாக திட்ட வேண்டும் என்றால் அவர்களை மூதேவி என்று கூறுவது தவறு. அது அவர்களை உயர்த்திக் கூறுவது ஆகும். முடிந்தவரை மூதேவியை ஆலயங்களில் சென்று வணங்குவோம். முடியாவிடில் அவளை இழிவுபடுத்தாமலும் இருப்போம் என்று புத்தாண்டு முதல் சபதமே மேற்கொள்ளலாம். அவள் இறுதியில் நன்மைகளை தருபவளே.
பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் மூதேவியின் வழிபாடு மெல்ல மெல்லக் குறையத் துவங்கியது என்பதின் காரணம் சமூகப் பிளவே. பத்தாம் நூற்றாண்டின் முடிவில் நிலவிய சைவ மற்றும் வைஷ்ணவ மதங்களின் போட்டியே இதற்கான அடிப்படை காரணம் என்று ஒரு கருத்து உள்ளது. ஒரு உண்மையை கூர்ந்து கவனித்தால் விஷ்ணுவினால் படைக்கப்பட்டதாகக் கருதப்படுபவளும், லஷ்மி தேவியின் மூத்த சகோதரி என்று கூறப்படுபவளான ஜேஷ்டா தேவி வைஷ்ணவத்தை சார்ந்தவளாக அல்லவா இருந்திருக்க வேண்டும். ஆனால் அவளது வழிபாட்டுக்குரிய சிலைகள் அனைத்துமே சிவபெருமான் ஆலயங்களில்தான் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது என்பதும் ஒரு ஆச்சர்யமான உண்மையாகவே உள்ளது. பத்தாம் நூற்றாண்டுவரை வணங்கப்பட்டு வந்துள்ள ஒரு தெய்வம் அதன் பின்னர் வணக்கத்துக்குரிய தன்மையை ஏன் இழந்துள்ளால்?

· ஓம் சௌந்தர்யா லக்ஷ்மியே போற்றி
· ஓம் சுவர்க்க லக்ஷ்மியே போற்றி
· ஓம் ஷைன்ய லக்ஷ்மியே போற்றி
· ஓம் ஜய லக்ஷ்மியே போற்றி
· ஓம் ஜகல் லக்ஷ்மியே போற்றி
· ஓம் ஜோதி லக்ஷ்மியே போற்றி
· ஓம் ஜேஷ்ட லக்ஷ்மியே போற்றி
· ஓம் ஷட்புஜ லக்ஷ்மியே போற்றி

............தொடரும் :8