- 8 -
அந்த காலங்களில் ஆட்சியில் இருந்த பாண்டிய மற்றும் பெரும்பாலான சோழ மன்னர்கள் அந்தணர்கள் அல்லாதவர்களே. ஆகவே அந்த மன்னர்களினால் ஊக்குவிக்கப்பட்டு வந்திருந்த தெய்வீக வழிபாட்டு முறைகள் ஒவ்வொரு கட்டத்திலும் வறுமையில் இருந்த பெருவாரியான சமூகத்தினரால் பெரிய அளவில் ஏற்கப்பட்டு வந்துள்ளது. பெரும்பாலான இடங்கள் கிராமப்புறங்களாகவே இருந்ததினால் மன்னர்கள் நிர்மாணித்த ஆலயங்கள் கிராமங்களில் அமைக்கப்பட்டன. இப்படியாக பல சக்தி மிக்க ஆலயங்கள் மிகச் சிறிய அளவிலேயே பல கிராமங்களில் இருந்துள்ளது. அவற்றை வழிபாட்டுத் தலம் என்ற பெயரில் போற்றி இருந்துள்ளார்கள். அந்த வழிபாட்டுத் தலங்கள் மரத்தடிகளில் இருந்துள்ளன. ஆற்றின் கரைகளில் இருந்துள்ளன. மேலும் அவற்றில் பலவிதமான தெய்வங்கள் வைக்கப்பட்டு வழிபடப்பட்டு இருந்துள்ளன. அந்த ஆலயங்களின் சிலவற்றின் சக்தியை உணர்ந்த மன்னர்கள் பின்னர் மிகப் பெரிய ஆலயக் கட்டடங்களை எழுப்பி அதில் அந்த சக்தி மிக்க தெய்வங்களின் சிலைகளை நிறுவினார்கள். கிராம தேவதை ஆலயங்களாக இருந்தவை பிற்காலத்தில் பெரிய ஆலயங்களாயின.
அந்த காலங்களில் கிராமங்களில் அந்தணர்கள் மற்றும் அந்தணர்கள் அல்லாதோர் என அவரவர்கள் கூட்டாக தங்கும் இடங்கள் அங்காங்கே அமைந்து இருந்தன. கிராமப்புறங்களில் இருந்த அந்தணர்களின் எண்ணிக்கையும் குறைவானது, அவர்களது ஆதிக்கமும் குறைவானதே. அந்தணர்கள் இருந்த பகுதிகள் அக்கிரஹாரம் எனக் கூறப்பட்டன. அவற்றில் ஆசாரங்கள் அதிகம் உண்டு. ஆனால் பிற சமூகத்தினர் ஆசாரம் என்பதை பெரிய பொருட்டாக கொண்டிருக்கவில்லை. கிராமப்புறங்களில் அந்தணர்களை விட அந்தணர்கள் அல்லாதவர்களே அதிகம். ஆகவேதான் அகம முறையிலான வழிபாடுகள் துவங்கிய காலத்தில் கிராமப்புறங்களில் மற்ற சமூகத்தினர் வணங்கி வந்திருந்த வேத முறையில் வழிபடாத தெய்வங்களை அந்தணர்கள் ஏற்க மறுத்தார்கள்.
முன்னர் கிராமங்களில் இருந்த ஆலயங்கள் பிராமணர்கள் அல்லாதோர் ஆலயம் என்றும், கிராமங்களுக்கு வெளியில் இருந்தவை பிராமணர்கள் ஆலயங்கள் எனவும் பார்க்கப்பட்டதினால் கிராம ஆலயங்கள் தெய்வீக ஆலயங்களாக கருதப்படவில்லை. அதில் வழிபடப்பட்டு வந்திருந்த தெய்வங்களும் தெய்வங்களாக ஏற்கப்படவில்லை. அது மட்டும் அல்ல கிராம ஆலயங்களில் மிருக பலிகள் தரப்பட்டன, வேத முறையிலான மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்யப்படவில்லை. மற்றும் அவற்றில் பூஜைகளை செய்ய பண்டிதர்களும் இருந்திருக்கவில்லை. கிராமங்களில் இருந்ததினால் கிராம தெய்வங்களை கிராம தேவதைகள் என அழைக்கலாயினர். கிராம தேவதைகள் என்பவர்கள் இரண்டாம் நிலைக் கடவுட்கள் என்றே பெரும்பாலானவர்கள் கருதும் அளவிற்கு கருத்துக்கள் பரப்பப்பட்டன. மூல தெய்வங்களின் அதாவது முதல் நிலைக் கடவுட்கள் எனக் கருதப்பட்ட சிவன், விஷ்ணு, பார்வதி போன்றவர்களின் பூத கணங்கள் அல்லது அவர்களுடைய பரிவார தேவதைகள்தான் கிராம தெய்வங்கள், அவர்களுக்கு தனித் தன்மையும், சக்தியும் கிடையாது எனக் கருதப்பட்டன. அதாவது கிராம தேவதைகளை இரண்டாம் அல்லது மூன்றாம் நிலைக் கடவுட்கள், அவர்கள் ஆலயங்களில் உள்ள தெய்வங்களுடைய படை வீரர்கள் என்று கூடக் கூறும் அளவிற்கு நிலைமை சென்றிருந்தது.
அப்படிப்பட்ட நிலையில் வேத வழிபாடும் மெல்ல மெல்ல தலை தூக்கத் துவங்கி இருந்துள்ளது. அந்த காலங்களில் இந்தியாவின் பல இடங்களிலும், முக்கியமாக தென் இந்தியப் பகுதிகளில் ஜாதி பிரிவினை மிக அதிகமாக இருந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஆரியர்கள், திராவிடர்கள் என்ற பிளவு ஏற்படத் துவங்கி அதுவே ஒரு கட்டத்தில் சமயப் பிரிவுகளாகி சமயப் பிரிவினால் பிளவுபட்ட சைவ மற்றும் வைஷ்ணவ மதங்களின் போட்டி, சமண மற்றும் புத்த மதங்களினால் ஏற்பட்ட மோதல்கள் என பல்வேறு சமூக பிளவுகளை ஏற்படுத்தியது.
தென் இந்தியப் பகுதிகளில் மூல தெய்வங்களைத் தவிர பிற தெய்வங்கள் முக்கியமாக அம்மன் வடிவிலும், பெயர்களிலும் இருந்த சக்தி தேவிகள் ஏற்கப்படவில்லை. வட இந்தியாவின் பல இடங்களிலும் ஆட்சியில் இருந்த மன்னர்கள் தம் ஆட்சி பலமாக இருக்க பல்வேறு முறையிலான தாந்த்ரீக வழிபாட்டைத் துவக்க அவை தாந்த்ரீக மற்றும் மாந்த்ரீக முறைகளில் ஆன வழிபாட்டை அதிகரித்தது. அதனால்தான் தென் இந்தியாவை விட வடநாட்டில் அதிக அளவிலான தாந்த்ரீக ஆலயங்கள் அமைக்கப்பட்டு அங்கெல்லாம் சக்தி தேவிகள் ஆராதிக்கப்பட்டார்கள். அந்த சக்தி தேவிகளில் ஒருவளாக தென் நாட்டில் லஷ்மி தேவியின் சகோதரி என்று கூறப்பட்டு வந்திருந்த மூதேவி எனும் ஜேஷ்டா தேவியும் ஒருவளாக இருந்தாள்.
மெல்ல மெல்ல வைதீக முறையிலான வழிபாட்டை (வேத வழிபாட்டு முறை)ஊக்குவிப்பதற்காகவே நகர்ப்புறங்களில் இருந்த (அதற்கு முன்னர் அதே ஆலயங்கள் இருந்த இடங்கள் கிராமங்களாக இருந்தன) ஆலயங்களில் வணங்கப்பட்டு வந்திருந்த தெய்வங்களை மேம்படுத்த, தாந்த்ரீக முறையில் அமைந்திருந்த ஆலயங்களில் இருந்த சக்தி தேவிகளையும் தெய்வங்களையும் தனித் தனியே பிரித்துப் பார்க்கலானார்கள். இந்த சர்ச்சையில் அகப்பட்டுக் கொண்டது தாந்த்ரீக வழிபாடுகளில் வணங்கப்பட்டு வந்த சக்தி ரூபமான மூதேவியும் ஆகும். அதே மூதேவி எனும் ஜேஷ்டா தேவி தென் இந்தியாவின் பல இடங்களில் மன்னர்களினால் ஊக்குவிக்கப்பட்டு பெருமளவில் ஆராதிக்கப்பட்டு வந்திருந்ததினால், அதனால் வைதீக முறைகளில் இருந்த மூல தெய்வங்களின் பெருமைகள் குறையத் துவங்கியதினால், அதை தடுக்க எண்ணிய சமூகத்தினர் மூதேவியை அமங்கலமானவள், அவள் உள்ள இடத்தில் தரித்திரமே இருக்கும் என்று தவறான கருத்துக்களைப் பரப்பி வந்து இருக்கிறார்கள். ஒரு கோணத்தில் பார்த்தால் இது அந்தணர், உயர் ஜாதியினர் மற்றும் அந்தணர் அல்லாதோர், கீழ் ஜாதியினர் என்பவர்கள் வணங்கி வந்திருந்த தெய்வங்களின் பிரிவினால் எழுந்துள்ள பிரச்சனையே என்பது புலனாகும்.

சில கிராம தேவதைகளின் உருவங்கள்
அந்தணர்களின் கடவுள் என்ற பிரிவில் (வேத முறையிலான வழிபாட்டுக்குறிய தெய்வங்கள்)மூல தெய்வங்கள் எனக் கருதப்பட்ட சிவபெருமான், விநாயகர், விஷ்ணு, ராமர், ஹனுமான், பார்வதி, லஷ்மி மற்றும் சரஸ்வதி (அம்பாள் எனப் பொதுவாக கூறினார்கள். ஆனால் அதில் பார்வதியின் அவதாரமான மாரியம்மன் குடும்ப வகையினரை சேர்த்துக் கொண்டது இல்லை) போன்றவர்களே அதிகம் வணங்கப்பட்டு வந்திருக்க அந்தணர் அல்லாதோர் பிரிவுக் கடவுட்களில் கிருஷ்ணர், முருகன், வள்ளி, மாரியம்மன், மகமாயி மற்றும் பலவித அம்மன்கள் போன்றவர் அதிகம் இருந்ததினால் அவர்களை வணங்குவதை அந்தணர்கள் தவிர்த்தே வந்திருந்தார்கள். அந்தணர்கள் வணங்கிய தெய்வங்களை அம்பாள் என்ற பெயரிலும், பிற சமூகத்தினர் வணங்கி வந்த அதே தெய்வங்களை அம்மன் என்றும் பெயரிட்டு உருவங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தி அதிலும் அபிப்பிராய பேதத்தை உருவாக்கினார்கள்.
இப்படிப்பட்ட நிலையில்தான் ஆரியர்கள், திராவிடர்கள் என்ற பிளவு அதிகரிக்கத் துவங்கி சமயப் பிரிவினால் பிளவுபட்ட பிளவுகளை அதிகரிக்கச் செய்து முக்கியமாக தென் இந்தியாவில் சைவ மற்றும் வைஷ்ணவ மதங்களின் போட்டியையும் மோதலையும் அதிகரித்தது. சிவபெருமானால் படைக்கப்பட்ட, பார்வதியினால் மற்றும் பிற தெய்வங்களால் படைக்கப்பட்ட பல கிராம தேவதை/ தெய்வங்களைக் கூட சிவன் பார்வதி, விஷ்ணு, மகாலஷ்மி மற்றும் சரஸ்வதி போன்ற தெய்வங்களை வணங்கி வந்திருந்த அந்த கால அந்தணர்கள் வணங்கியதில்லை (கிராம தேவதை/தெய்வங்கள் போன்றவற்றில் கிராமங்களில் வீர செயல்கள் புரிந்தவர்கள், அபலைப் பெண்கள், கணவனுடன் உடன்கட்டை ஏறியவர்கள் எனப்பட்டவர்களின் சிலைகள் சில இருந்தன. அவர்களையும் கிராம தேவதையாக வழிபட்டாலும், பெரும்பாலான கிராம தேவதைகளை படைத்தது சிவன் மற்றும் பார்வதி என்றே அதனதன் வரலாற்றுக் கதைகள் கூறுகின்றன). சிவன்-பார்வதி மூலம் படைக்கப்படவர்களாக கருதப்படும் கருப்பசாமி, மாடசாமி, வீரபத்திரர், காளி தேவி, ரேணுகா தேவி, மாரி அம்மன், மற்றும் சப்த கன்னிகைகள் என பலரையும் தெய்வங்களாக ஏற்கப்படாமல் இருந்திருந்த காலம் அது. அதனால்தான் லஷ்மியை ஏற்றுக் கொண்ட சமூகத்தினரால் அவலட்ஷணமாக இருந்த மூதேவியை ஏற்க முடியவில்லை. முன் காலங்களில் பெரும்பாலான அந்தணர்கள் அம்மன் மற்றும் மாரியம்மனின் ஆலயங்களுக்கு செல்வதை தவிர்ப்பார்கள். இது வரலாற்று உண்மை ஆகும். அதனால்தான் மூதேவி எனப்பட்ட ஜேஷ்டா தேவியும் அந்தணர் அல்லாதோர் பிரிவுக் கடவுட்களில் ஒன்றாக பார்க்கப்பட்டு மெல்ல மெல்ல ஒதுக்கப்பட்டு இருக்கிறாள். அவற்றையும் மீறி மூதேவி எனும் ஜேஷ்டா தேவி வைஷ்ணவத்தை சேர்ந்தவளா இல்லை சைவப் பிரிவை சேர்ந்தவரா என்ற கண்ணோட்டம் தலையெடுத்துள்ளது. அவள் தாந்த்ரீக வழிபாட்டு முறையில் வரும் தேவி என்பதினால் வைதீக வழிபாட்டு தேவியாக ஏற்கப்படவில்லை. அவள் லஷ்மி தேவியின் சகோதரி என்றாலும் வைஷ்ணவ ஆலயங்களில் அவள் சிலைக் காணப்படவில்லை என்பதி இதில் ஒரு முக்கிய செய்தியாகும்.
இப்படியாக குழப்பமாக இருந்த நிலையில் அவரவர்கள் அதாவது சைவ மற்றும் வைஷ்ணவப் பிரிவை சேர்ந்தவர்கள் அவரவர் பிரிவுக் கடவுட்களை போற்றிப் புகழ்ந்து அதை நியாயப்படுத்தும் வகையில், இரண்டு பிரிவுகளிலும் வணங்கப்பட்டு வந்திருந்த மூல தெய்வ வழிபாட்டுக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தார்கள், மற்ற அவதார தெய்வங்கள் உதாசீனப்படுத்தப்பட்டார்கள். ஏன் ஒரு கட்டத்தில் கிருஷ்ணர் கூட யாதவர்களின் தெய்வமாகவே பார்க்கப்பட்டு வந்துள்ளார்.
முதலில் ஒரு அடிப்படை உண்மையை புரிந்து கொள்ள மறுத்தார்கள். அதை எடுத்துரைக்க சரியான தலைமையும் காணப்படவில்லை. பிரபஞ்சம் படைக்கப்பட்டபோது வைஷ்ணவம் என்றோ, சைவம் என்றோ எந்த பிரிவும் கிடையாது. இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டது யாரால்? அது படைக்கப்பட்டது பரப்பிரும்மன் எனும் பராசக்தியினால்தான் என்பதை அனைத்து சமூகத்தினரும் ஒப்புக் கொள்வார்கள். பரப்பிரும்மம் சைவமோ இல்லை வைஷ்ணவ சமூகத்தை சேர்ந்ததோ இல்லை. அப்படிப்பட்ட பரபிரும்மத்தில் இருந்து வெளிவந்தவர்களே மும் மூர்த்திகளான சிவன், விஷ்ணு மற்றும் பிரும்மா என்பதாகும். அதாவது ஒரு வயிற்றில் உருவான கடவுட்கள். அனைத்து பிரிவினரும் வணங்கி வரும் வெவேறு ரூபத்திலான கடவுளும், பல்வேறு நற்காரியங்களை செய்ய அவ்வப்போது அவர்கள் படைத்த மற்ற துணை கடவுட்களும் இவர்கள் மூலம் வந்த துணை அவதாரங்களே. ஆண் தெய்வங்களின் மனைவிமார்களும் கூட அவரவர் கணவன்மார்களுக்கு உதவி செய்திட பல அவதாரங்களை எடுத்து உலகைக் காக்க வந்துள்ளார்கள் என்பது பல புராணக் கதைகள் மூலம் தெரியவரும்.
ஒரு கட்டத்தில் தெய்வங்களிலேயே மூத்தவராக கருதப்படும் சிவபெருமானை விஷ்ணுவும், பிரும்மாவும் வணங்கி துதித்து இருக்கிறார்கள் என்பது பல பிரபலமான விஷ்ணு ஆலயங்களின் வரலாற்றில் இருந்து விளங்கும். அவர்கள் சைவ மற்றும் வைஷ்ணவ பேதங்களை வைத்திருக்கவில்லை. ராமர், கிருஷ்ணன், பரசுராமன், போன்று பல அவதாரங்களை எடுத்த, வைஷ்ணவர்கள் போற்றி வணங்கும் விஷ்ணுவே தனது சகோதரி என சைவர்கள் போற்றி வணங்கும் சிவபெருமானின் மனைவியான பார்வதியை குறித்துக் கூறி உள்ளார். அது போலத்தான் பல நிலைகளில் சிவபெருமானுக்கு விஷ்ணுவே பல உதவிகளை செய்து அவரை சங்கடங்களில் இருந்து காப்பாற்றி இருந்துள்ளார். மும்மூர்த்திகளின் மனைவிகளான பார்வதியும், லஷ்மியும், சரஸ்வதியும் இருந்துள்ளார்கள். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சிவன்-விஷ்ணு மற்றும் பிரும்மா போன்றவர்கள் இடையே சண்டை ஏற்பட்டு அவர்களுடைய சண்டை அவரவர்களின் அழிவிற்கு காரணமாக இருந்தது இல்லை. அவர்கள் ஒற்றுமையுடன் இருந்துதான் இந்த உலகம் படைக்கப்பட்டதின் காரணத்தை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் ஒரே தாயின் வயிற்றில் இருந்து, அதாவது பரப்பிரும்மனில் இருந்து வெளிவந்த வந்த தெய்வங்களையும், அவர்கள் மனைவிகளின் மூலம் வெளிவந்த அவதாரங்களையும் நாம் ஏன் வேற்று பேதத்துடன் பிரித்து வைக்க வேண்டும் என்பதை சரியான முறையில் எடுத்துரைக்க எவரும் முன்வரவில்லை? தெய்வீகத்தில் ஒரு குறிப்பிட்ட காரியத்தை நிறைவேற்றவே குறிப்பிட்ட அவதாரம் உருவாக்கப்பட்டது. அதில் ஒரு முக்கிய நிகழ்விற்காகவே மூதேவியும் அவதரித்து இருக்கிறாள். அதுவும் முக்கியமான தேவலோக நிகழ்வில் அவள் அவதாரம் வெளிவந்துள்ளது.
உலகம் வேகமாக மாறி வருகிறது. இன்றைக்கு உண்மையான நிலைமை என்ன? மனிதர்களின் கண்ணோட்டம் மாறத் துவங்கி உள்ளது. மூதேவி போன்ற தெய்வீக அவதாரங்களில் மறைக்கப்பட்டு வந்துள்ள உண்மைகள் வெளிவரத் துவங்கி உள்ளன. சாதி பேதம் இன்றி அனைவரும் அவரவர் மனதுக்கு பிடித்த தெய்வங்களை, அது வைஷ்ணவமோ, சைவமோ இல்லை ஏன் கிராம தேவதையோ இருந்தாலும் கூட அவரவருக்கு கிடைக்கும் சொந்த அனுபவங்களின் காரணத்தைக் கொண்டே அந்தந்த தெய்வங்களை வழிபடுகிறார்கள். ஆலயங்கள் கிராமங்களில் இருந்தாலும் சரி, நகரங்களில் இருந்தாலும் சரி அவரவருக்கு ஏற்படும் அனுபவங்களைக் கொண்டே அந்தந்த தெய்வங்களை நம்புகிறார்கள், வணங்குகிறார்கள். அதற்குக் உதாரணம் வைதீக பிராமணர்கள் பலர் இன்று மாரியம்மனை வணங்குவதும், பல்வேறு அவதார அம்மன் ஆலயங்களுக்கு சென்று பொங்கல் படைத்து பிராத்தனைகளை செய்வதை, பரிகாரம் செய்வதை ஒரு வழிமுறையாகவே கொண்டுள்ளார்கள் என்பதையும், அது போலவே ஆலயங்களில் நடைபெறும் முக்கிய விழாக்களிலும் பண்டிகைகளிலும் அந்தணர்கள் மட்டும் அல்ல அந்தணர்கள் அல்லாதோர் பெருமளவில் பக்திபூர்வமாக கலந்து கொண்டு சிறப்பிப்பதை கூற வேண்டும் .
வேடர்களின் பிரிவை சேர்ந்த வள்ளி தேவி, மாரியம்மனின் அவதாரங்களான ரேணுகா தேவி, கருமாரி, சமயபுர தேவி, முருகப் பெருமான், வீரபத்திரர், போன்ற பல தெய்வங்கள் இன்றைக்கு பிராமணக் குடும்பங்களின் குல தெய்வமாக இருக்கிறார்கள். அது போலவேதான் பிராமணர்கள் அல்லாதவர்களே இன்றைக்கும் அநேக ஆலயங்களின் அறங்காவலர்களாக இருக்கிறார்கள் (தமது கூட்டுக் குடும்ப ஆலயங்களாக சில சமூகத்தினர் வைத்து உள்ள ஆலயங்களை தவிர்த்து பிற ஆலயங்கள்). எந்த பிரிவை சேர்ந்த ஆலயம் ஆயினும் ஆலய மேம்பாடுகளில் அந்தணர்களை விட பிற சமூகத்தினரே அதிக ஆர்வம் கொண்டு அதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். தெய்வீகம் என்பது ஜாதி மற்றும் மதங்களுக்கு அப்பாற்பட்டது.

ஆகவே வணங்கத்தக்க மூதேவியை இழிவு படுத்தும் வகையில் மூதேவி.... மூதேவி என பிறரை நிந்திப்பது தடுக்கப்பட வேண்டியவை. அவளும் வணக்கத்துக்குரிய ஒரு தெய்வீக அவதாரமே என்பதே உண்மை.
- முற்றும்-