- 4 -
மூதேவி குடியிருக்கும் இடங்கள் அசுத்தங்கள் உள்ள இடங்கள் என்பது எதைக் காட்டுகிறது? அசுத்தம் என்பதும் சுத்தம் என்பதும் ஒருவரின் மனதிலும் இதயத்திலும் உள்ள நன்மை மற்றும் தீமைகளைக் குறிப்பன. ஆகவே எங்கெல்லாம் அசுத்தம் என்கின்ற தீமைகள் உள்ளனவோ அங்கெல்லாம் மூதேவி சென்று அமர்ந்து கொண்டு உள்ளுக்குள் இருந்தவண்ணம் (மனதிலும், இதயத்திலும் இருந்தவாறு) தீய எண்ணங்களை அழித்து அந்த இடத்தில் தூய்மை எனப்படும் தெய்வீகத்தை கொண்டு வருவாள் என்பது தத்துவமாக இங்கு காட்டப்பட்டு உள்ளது. அதாவது மனித குலத்தில் உள்ள தீய எண்ணங்களையும், தீய செயல்களையும் அழிப்பதற்கும், முடிவாக தெய்வீகத்தை சென்றடையவும் அவளே ஒரு காரணமாக இருந்து வருகிறாள். மூதேவி மூலம் செல்வம் தரும் லஷ்மியை நாடுவது என்பது மனித குலத்தில் வாழ்வதற்குத் தேவையான பொருளை ஈன்றுவது மட்டும் அல்ல, புண்ணிய பலாபலன்களை அடைவதற்கு ஒரு வழிமுறை ஆகும். அதையே லஷ்மியை சென்றடையும் முன்னர் மூதேவி வழி வகுத்துத் தரும் பாதை என்றும் கூற வேண்டும்.
மூதேவியின் கையில் முறமும் ஒரு துடப்பமும் உள்ளது. அந்த முறத்தில் சில தானியங்களும் காணப்படும். சில சிற்பங்களில் அவள் முறத்தில் இருந்து தானியங்களைக் கொட்டுவதைப் போல காட்சி தருகிறாள். அந்த தானியங்களை உணவு தரும் அரிசிக்கான நெல் தானியம் என்பார்கள். பக்குவமான நெல்லில் இருந்து வெளிப்படும் அரிசியை சமைத்து உண்டே பாதி மனிதர்களும் உயிர் வாழ்கிறார்கள். பக்குவப்படாத நெல்லை தூக்கி எறிந்து விடுவார்கள். அவற்றை அடுப்பில் இருந்து எழும் நெருப்பில் போட்டு தணலாக மாற்றி அதைக் கொண்டே அரிசியை சமைத்து உண்பார்கள் (முன் காலங்களில் காஸ் அடுப்புக்களோ, இல்லை மின்சார அடுப்புக்களோ கிடையாது. அப்போதெல்லாம் வயல்வெளியிலும் வீட்டின் உள்ளேயும் பூமியை தோண்டி சிறு குழி உண்டாக்கி அதில் விறகுகளையும், அடுப்புக் கரியையும் போட்டு தீ மூட்டி அதனால் கிடைக்கும் தணலை கொண்டே சமைப்பார்கள். அதன் பின் பல காலம் பொறுத்தே சின்ன சின்ன மண்ணினால் ஆன சமையல் செய்யும் அடுப்புக்கள் வந்தன).
முறம் எனும் சின்னம் எதைக் காட்டுகிறது? அனைத்து தானியங்களையும் முறத்தில் போட்டு புடைத்து உமி, மண், தவிடு, கல் போன்றவை மற்றும் நல்ல தானியங்களை பிரித்து எடுப்பார்கள். ஆகவே மூதேவியின் கையில் உள்ள முறம் என்பது காட்டும் தத்துவம் என்ன என்றால் அந்த தேவியிடம் சென்று சேரும் ஆத்மாக்களில் எவை தீமைகளை அகற்றிக் கொண்டு நல்ல வழியில் நடக்கத் துவங்கியவை, எவை இன்னும் பக்குவமாக வேண்டும் என்பவற்றை பிரித்து முறத்தில் நல்ல அரிசியை வைத்துக் கொள்ளும் பாவனையில் தன்னுடன் வைத்துக் கொள்ளும் ஆத்மாக்களை மேலுலகம் அனுப்புகிறாள். இன்னமும் பக்குவம் அடைய வேண்டும் என்பவற்றை மீண்டும் பூமிக்கே மறு ஜனனம் எடுக்க ஏற்பாடு செய்து அனுப்புகிறாள். வேறு எந்த கடவுட்களின் கையிலும்- அது ஆண் கடவுளானாலும் சரி, பெண் கடவுளானாலும் சரி- முறத்தைப் பார்க்கவே முடியாது.

இரண்டாவதாக அந்த முறத்தில் ஏன் அரிசி தானியம் காணப்படுகிறது ? அரிசி தெய்வீகத் தன்மை பெற்றது என்பதினால்தான் வீட்டில் நடைபெறும் பண்டிகையிலும் அரிசியில் செய்யப்பட்ட உணவே பிரதானமாகிறது. மரணம் அடைந்தவர்களுடைய வாயில் கூட வாய்க்கரிசி போடுவது என்பது அரிசியின் முக்கியத்துவத்தைக் காட்டும். தென் நாடாக இருந்தாலும் சரி, வட நாடாக இருந்தாலும் சரி, எங்கு மரணம் நிகழ்ந்தாலும் அங்கெல்லாம் மரணம் அடைந்தவர் வாயிலே கடைசியாக உணவினர் போடுவது அரிசி தானியமே அல்லாது பருப்புக்களோ, கோதுமையோ அல்லது பிற தானியமோ இல்லை. அது மட்டும் அல்ல அனைத்து சடங்குகளிலும் செய்யப்படும் ஹோம குண்டத்தில் போடப்படும் தானியமும் அரிசியே தவிர, மற்ற தானியங்கள் இரண்டாம் பட்சம்தான். வேறு எந்த தானியத்துக்கும் அப்படிப்பட்ட தெய்வீக நிலை இல்லை.
நெல் விதைகள் உள்ளே உள்ள அரிசி ஒவ்வொருவருடைய ஆத்மாவைப் போலத்தான் உள்ளது. பெண்ணின் கர்பப்பையைப் போன்றது நெல். அதற்குள் உள்ள அரிசி தானியம் மெல்ல மெல்ல வளர்ந்து நன்கு முற்றியதும் அதை சாகுபடி செய்து அரிசியை பிரித்து எடுப்பார்கள். நெல்லின் உள்ள இருந்து முற்றிய அரிசி தானியம் வெளிவரத் துவங்கும் காலத்தை தானியத்தின் செடி கர்பமுற்றுள்ள காலம் எனக் கருதுகிறார்கள். ஆகவே செடிகளிலும் உயிர் உள்ளது என்ற தத்துவத்தை நம்புகிறார்கள். அதனால்தான் இறந்தவர்களது உடலில் இருந்து வெளியேறும் ஆத்மாக்களைப் போன்ற அரிசியே மூதேவியின் கையில் உள்ள முறத்தில் காணப்படுவது அரிசி தானியமாகும் (அரிசி தானியத்துக்கு இத்தனை மகத்துவம் ஏன் தரப்படுகிறது? அரிசியை பெண் இனம் என்பது ஒரு கருத்து என்பதின் காரணம் இந்த உலகிலேயே அரிசியின் தோற்றமே தேவிஸ்ரீ எனும் ஒரு பெண் தேவதை ஒன்றுடன் சம்மந்தப்பட்டதாகும். காம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து, கிரேக்க தேசம் என உலகின் பல்வேறு நாடுகளிலும் அரிசி தேவதை என்பவள் போற்றி வணங்கப்படுகிறாள். அவளை 'தேவி ஸ்ரீ' (Dewi Shree) என்கிறார்கள். உயிருள்ள அனைத்திலுமே ஆத்மா எனும் ஜீவன் உள்ளது, ஒரு மரணம் நிகழும்போது அதற்குள் உள்ள ஜீவன் பறந்துவிடும். அது திரும்ப வருவது இல்லை. அது போலவே ஒருமுறை நெல்லில் இருந்து அரிசியை வெளியில் எடுத்து விட்டால் அந்த நெல் எதுவுமற்ற நிலையில் இருக்கும். அதுவே உயிரினமும் ஆத்மாவும் போல உள்ள நிலை என்பது).
முறம் இதயத்தைப் போல காட்சி தருவதாகும். நெல்லைப் போன்ற அந்த ஆத்மாக்களை இதயம் போன்ற முற்றத்தில் போட்டு நல்லவற்றை சமைப்பதற்கு இதமாக பக்குவம் அடையாததை கீழே தள்ளி விடுவார்கள், நல்லதை மட்டும் சமையல் பாத்திரத்தில் போட்டு சமைத்துக் கொள்வார்கள். இந்த முறத்தை கையில் வைத்துள்ள மூதேவி எனும் தேவியானவள் அவளை ஆராதிப்பவர்களது இதயத்தில் அமர்ந்து கொண்டு அங்குள்ள தீய எண்ணங்கள் எனும் தீமைகளை அகற்றி, இதயத்துக்குள் இயற்கையாகவே மெல்ல மெல்ல துளிர்விட்டபடி இருக்கும் தெய்வீகம் எனும் நல்லவற்றை இன்னும் பக்குவப் படுத்துகிறாள் என்பது அது காட்டும் தத்துவம். அரிசி உணவை உண்பது தென் இந்தியா மற்றும் மேற்கு இந்தியப் பகுதிகளில் (ஒரிஸ்ஸா, வங்காளம், மத்தியப் பிரதேசம், திரிபுரா போன்ற பல இடங்கள்) அதிகமானது. அதனால்தானோ என்னவோ எதேச்சையாக மூதேவியின் வழிபாடு (அவளை தூமா தேவி, சீதளா மற்றும் ஜேஷ்டா தேவி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள்) இந்த பகுதிகளில் அதிகம் உள்ளது என்பதும் வியப்பாகவே உள்ளது.
இடதுபுறத்தில் மூதேவி எனும் ஜேஷ்டா தேவி மற்றும்
வலதுபுறம் அரிசி தேவதை எனப்படும் தேவி ஸ்ரீ
....... தொடரும் :5