Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Mayil Ravanan - 12

$
0
0
அவள் ஏன் அப்படி அழுது கொண்டிருக்கிறாள் என்பது அனுமானுக்கு புரியவில்லை. ஆனால் நடப்பது அனைத்தையும்  மரத்தின் மீதிருந்த அனுமார் பார்த்துக் கொண்டே இருந்தார். அவர் கவலையெல்லாம் கோட்டைக்கு உள்ளே எப்படிப் போவது? உள்ளே போனால்தானே வெளியில் உள்ள அசுரர்களை அழிக்க முடியும். அவர் மனதுக்குப் புரிந்தது வெளியில் வந்து புலம்பிக் கொண்டிருக்கும் பெண்மணி கெட்டவள் அல்ல என்பது. 'இவள் மூலமாவது நமக்கு ராம லஷ்மணர்கள் சிறை வைக்கப்பட்டு உள்ள இடம் தெரியவாராதோ. இவளை நம் கைக்குள் போட்டுக் கொண்டு காரியத்தை முடிக்கலாமே' என எண்ணிக் கொண்டு மரத்தின் மீதிருந்து ஆசிரி கூறுவது போல அவளுக்கு மட்டுமே கேட்கும்படி கூறலானார்.

'இங்கே பாரும் பெண்ணே....அபலைப் பெண்ணே, நீ ஏன் வருந்தி அழுகிறாய்? அழுதழுது ஏன் வாடி வதங்குறே? உன்னையும் சேத்தே உன் மகனையும் காப்பாட்டறலாம். அதற்கும் உபாயமுள்ளது. அதுக்கும் நீ சரீன்னு சொன்னா அதையும் நாம் செய்வோம். ஆனா அதுக்கு உன் உதவியும் தேவையாகுமே' என்றார். 'இதென்ன மனிதக் குரலா இருக்குதே. ஒருவேளை மயில் ராவணனே என்னை சோதிக்க இப்படி ஒரு நாடகம் ஆடுவானோ? சரி நமக்கேன் வம்பு. தண்ணீ கொண்டு போய் குடுத்து யாசகமாக என் மகன் உயிரையாவது விட்டுடூன்னு கேட்கலாம்' என்று எண்ணியவளாக தண்ணீர் எடுக்க தங்கக் குடத்தோடு குளத்தில் இறங்க அதுதான் தக்க தருமணம் என நினைத்த அனுமாரும் ஓடிப்போய் அவளருகில் நின்று கொண்டு கூறலானார் 'அபலைப் பெண்ணே...உனக்கென்னம்மா  அத்தனை சோகம்? ஆசிரி குரலில் உன்னிடம் பேசியதும் நாந்தானம்மா......ராம-லஷ்மணர்களைக் காப்பாற்ற வந்துள்ள நீ நினைக்கும் அந்த அனுமானும் நானேதானம்மா ...... தயை செய்து இப்போ கூறு, ராம லஷ்மணர்களை மயில் ராவணன் எங்கே ஒளிச்சு வச்சிருக்கான்?. அங்கே எப்படிப் போவது என்று உனக்கு வழி தெரிந்தா அதையும் தயை செய்து கூறி அவர்கள் உயிரைக் காப்பாற்ற சீக்கிரமா உதவம்மா' எனக் கெஞ்சினார்.

அவர் தன் அருகில் வந்து நின்றதுமே அவள் பயந்து போனாள். 'வானரமே, நீர் யாரையா? மனிதக் குரலில் பேசுகிறீர்கள்...உம்மை மயில் ராவணன் அனுப்பி என்னை சோதிக்க சொன்னாரோ?' ஆனால் அவள் பயத்துடன் தன்னைக் கேட்டதை அனுமான் தவறாக நினைக்கவில்லை. அவர் சொன்னார் 'பெண்மணி....நீயும் நல்ல அம்மணிதான்.... நான்தானம்மா அந்த ராமதூத அனுமான். இதுவும் சத்தியம்....என்னை நம்பம்மா....அவாளயெல்லாம் மீட்கணோம்னே நானிங்கு வந்தேன். கோட்டைக்குள் போகோணும்..... மயில் ராவணனையும் தேடோணும்........... அதான் அந்த இடத்தை தேடி அலையறேன். அதனால்தானம்மா  உன்னிடமும் இத்தனையும் கேட்கூறேன் '

ஆனால் அவளோ அவரை இன்னமும் நம்பாதது மாதிரி சிறுது நேரம் அவரையே உற்று உற்றுப் பார்த்தப் பின் அனுமாரிடம் கூறலானாள்  'வானரமே, நீர் உம்மை ராம தூதனான அனுமான் என்கிறீர். நீரோ குரங்காக இருக்கையில் எப்படி மனிதக் குரலில் பேசுவதெப்படி சாத்தியமாகும் என்பதினால்தான் நான் உம்மையும் சந்தேகப்படுகிறேன். உம்மை மயில் ராவணன் மாற்று உருவில் என்னை வேவு பார்க்கவே அனுப்பி உள்ளதாகவே நெனைக்கிறேன். அதனால் முதலில் குரங்கான நீர் எப்படி மனிதக் குரலில் பேசுகிறீர் என்பதை எனக்கு தெளிவு படுத்தி, உம்முடைய உண்மையான உருவைக் காட்டும். அனுமானாக இருந்தால் நீர் விஸ்வரூபமும் எடுத்து அனுமான் சொரூபத்தையும் காட்ட முடியும் அல்லவா?'.

அதைக் கேட்ட அனுமானும் கூறினார் 'அபலைப் பெண்ணே, ராக்ஷசர் வம்சத்தில் அவதரித்த நல்ல குணவதியே. எனக்கு மனித குரலில் பேச மட்டும் அல்ல எனக்கு அனைத்து சாஸ்திரங்களும், அறுபத்தி நாலு பாஷையும், நீதி நூலின் தர்க்கமும், ஈ எறும்புகளின் பாஷைகளும் கூட புரியும் அம்மா. இப்போ அதெல்லாம் கூற எனக்கும் நேரமில்ல. என் நிஜ சொரூபத்தைப் பார்த்தால் நீ பயந்துடுவாய் என்பதால்தான் உனக்கு அதைக் கட்ட தயக்கமாக உள்ளது. ஆகவே முதலில் ராம லஷ்மணர்கள் எங்கு உள்ளார்கள் என்பதை விரைவாகக் கூறம்மா' என்று சொன்னதும் தூரதண்டி அவரை இன்னும் நம்பாமல் கூறினாள் 'வானரமே, நீர்தான் உண்மையான ராம தூதன் என்ன்பதை எனக்குக் காட்டினால்தான் நான் மேற்கொண்டு பேச முடியும். எனக்கும் நேரமாகி விட்டது. அதிக நேரமானால் அங்கே மயில் ராவணனும் என்னை சந்தேகிப்பான்' என்று கூற வேறு வழி இன்றி அனுமான் தன் நெஜ ரூபத்தை அவளுக்குக் காட்ட அவள் அவர் கால்களில் விழுந்து நமஸ்காரம் பண்ணி தன்னை மன்னிக்குமாறு கூறி விட்டு, அவரிடம் முகமெல்லாம் ஆறு போல கண்ணீர்  வழிய தன் கதையையும் சொல்லலானாள்.

'அனுமானே, என்னை முதலில் மன்னியும். என்கதையைக் கூறரேன்  கேளும். காலதத்தன் என்பவனே என் புருஷன். மயில் ராவணன் என் புருஷன் காலதத்தனை கொன்று விட்டு என்னையும், நீல மேகன் என்ற என் ஒரே பிள்ளையையும் சிறையில் அடைத்து விலங்கு போட்டு பூட்டி வைத்து உள்ளான். அதுக்கெல்லாம் காரணமும் ஒன்றுண்டு. முன்னாலே என் புருஷன் மயில் ராவணனுக்கு அனைத்து விதத்திலும் நம்பிக்கையானவரா இருந்தார். அதுக்கும் காரணம் மயில் ராவணன் எனக்கு உடன் பிறந்த அண்ணன் முறை. மயில் ராவணன் தும்பினால் என் கணவர் இருமுவார். மயில் ராவணன் 'ஹா' என்றால் என் கணவர் 'ஈ' என்பார். அத்தனை நெருக்கம் இருவருக்கும் உண்டு.
....தொடரும்

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>