சாந்திப்பிரியா - 3 -
![]()
பகலாமுகி தோன்றிய வரலாறு
இந்த தேவி தோன்றிய வரலாறு குறித்து இங்குள்ள பண்டிதர்களினால் கூறப்படும் இன்னொரு கதை இது. சத்யுகத்தில் ஒரு முறை பிரளயம் ஏற்பட்டு உலகமே அழிந்து விடும் நிலைக்குச் சென்று விட்டது. அதன் கோர தாண்டவத்தைத் தாங்க முடியாமல் போன விஷ்ணு பகவான் சௌராஷ்டிராவில் இருந்த ஒரு தனிமையான இடத்தில் சென்று தவத்தில் அமர்ந்து கொண்டார். அதன் விளைவாக அவருடைய நாபியில் இருந்து வெளிவந்த ஜோதியும் ஆகாயத்தில் இருந்த நட்சத்திரங்களின் ஒளியும் ஒன்று சேர அந்த ஒளி வெள்ளத்தில் தோன்றினாள் பகலாமுகி தேவி. இப்படியாகத் தோன்றிய பகலாமுகி மகாவிஷ்ணுவின் தவத்தை மெச்சி இயற்கையின் சீற்றத்தை அடக்கி உலகை அழிவில் இருந்து காப்பாற்றினாள்.
முன்னர் மதன் என்றொரு அசுரன் அளவிடமுடியாத சக்திகளை, முக்கியமாக வாக்கு சித்தியை பெற்று இருந்தான். அதனால் அனைவருடைய சித்திகளும், பூஜை மந்திர ஒலிகளும் நின்றன. எவர் எதை ஒதினாலும் அவன் அவற்றை தன் வாக்கு வலிமையினால் தடுத்தான். தேவர்களை கொடுமைபடுத்தினான். ஆகவே அவர்கள் பகலாமுகி தேவியை சந்தித்து தம் இன்னலைக் கூறி தம்மை காத்தருளுமாறு அவளிடம் வேண்டிக் கொள்ள பகலாமுகி தேவி அந்த அசுரன் மீது படையெடுத்து அவனுடன் சண்டையிட்டு அவன் நாக்கைப் பிடுங்கி எறிந்து அவனுடைய வாக்கு சக்தியை அழித்தாள். நாக்கு இருந்தால்தானே எதையும் உச்சரிக்க முடியும். அதனால்தான் அவன் நாக்கைப் பிடுங்கி எரிந்து அவனை பேச இயலாதவனாக்கி அவன் சக்தியை அழித்தாளாம். அதனால்தான் அவளது உருவத்தை மகாவித்தியாவில் அதே தோற்றத்தில் காட்டி உள்ளார்கள். மதனை அழித்தப் பின் அவள் பூமியில் சென்று சில காலம் மறைந்து இருந்து பின்னர் தற்பொழுது ஆலயம் உள்ள லகுந்தார் நதிக்கரையில் இருந்த நல்கேடாவில் ஸ்வயம்புவாக எழுந்தருளினாளாம்.

தேவியின் ஸ்வரூபம்
ஆலயத்தில் காணப்படும் தேவிக்கு மூன்று கண்கள் உள்ளன. அந்த சிலை மூன்று தலைகளைக் கொண்டதாகவும் உள்ளது. அந்த மூன்று தேவிகள் சரஸ்வதி, மகாலஷ்மி மற்றும் பார்வதி அதாவது சாமுண்டா என்கிறார்கள். நடுவில் உள்ள தேவியின் உருவில் மூன்று கண்கள் உள்ளதினால் அவளை மூம்மூர்த்திகளை உள்ளடக்கிய முக்கண்ணராகிய சிவபெருமானின் அவதாரமே என்றும் அர்தநாரீஸ்வரரைக் குறிக்கும் சிலையே அது எனவும் கூறுகின்றனர்.
மந்திர தந்திர சக்திகளின் தெய்வமான அவள் மேனி பொன்னிரமானது. அவளுக்கு பிடித்த வண்ணம் மஞ்சள் நிறம். மஞ்சள் நிற பூக்களின் மஞ்சத்தில் அமர்ந்து கொண்டு இருப்பவள் என அவளுடைய ரூபத்தை வர்ணிக்கின்றனர். நல்கேடாவில் உள்ள சிலையோ கழுத்துவரைதான் காணப்படுகிறது.
வாக்கு சாதுர்யம், வாக்கு வலிமை பெற்றிட எதிரிகளை அடக்க, மன வலிமை பெற்றிட, தம்மீது எழும் அவதூறுகளை களைந்திட என பல காரணத்தினால் அவளை ஆராதிக்கிறார்கள். அவள் அனைவரது அறியாமையையும் விலக்குகிறாள். முக்கியமாக மந்திர தந்திர சித்திகளைப் பெற்றிட அவளை பூஜித்து ஆராதிக்கின்றனர். பகலாமுகி தேவியை வணங்கி ஆராதித்தால் எதிரிகள் அடங்குவர். தடைகள் விலகும். பில்லி சூனியங்களினால் ஏற்படும் அபாயங்கள் விலகும் என நம்புவதால் பலரும் இங்கு வந்து வேண்டுதல்கள் செய்கின்றனர். நாங்கள் மறுநாள் சென்றது ஓம்காரீஸ்வரர் ஆலயம். ஆனால் அதற்கு முன்னால் உஜ்ஜயினி மற்றும் நல்கேடாவிற்கு இடையில் உள்ள ஆகர் என்ற கிராமத்தில் ஒரு ஆங்கிலேயர் கட்டி இருந்த சக்தி வாய்ந்த சிவன் ஆலயம் சென்றோம். ஸ்ரீ பைஜியநாத் மகாதேவ் எனும் அந்த ஆலயத்தின் வரலாறு சுவையானது.

நல்கேடா ஆலயத்தின் படங்கள்
நல்கேடா ஆலய சன்னதியின் முன்மண்டபத்தில்
காணப்படும் மந்திர சக்தி வாய்ந்த பதினெட்டு தூண்கள்
ஆலய நுழைவாயிலில் திறந்த
வாயுடன் காணப்படும் உருவ சிலை
ஆலயத்தின் பின்புறத்தில் உள்ள சுவற்றில்
வேண்டுதல்களுக்காக மருதாணியினால்
பக்தர்கள் போட்டு உள்ள கோலம்மற்றும் தமது
கோரிக்கைகளையும் சுவரில் எழுதி
வைத்துவிட்டுப் போகிறார்கள்
கோரிக்கைகளையும் சுவரில் எழுதி
வைத்துவிட்டுப் போகிறார்கள்
சன்னதியின் இடதுபுறத்தில் தனி
சன்னதியில் காணப்படும் பைரவர்
ஆலயத்தின் பின்புறத்தில்
ஓடும் லகுந்தார் எனும் நதி
...........தொடரும்