Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Temples in Malwa Region - 2

$
0
0
சாந்திப்பிரியா                                             -  2  -

கைலா  தேவி ஆலயம், தேவாஸ் 

நல்கேடாவில் இருந்த பகலாமுகி ஆலயத்துக்கு  செல்வதற்கு முன்னர்  தேவாஸ் நகரில் இருந்த புதிய ஆலயமான கைலா தேவி  ஆலயத்துக்கும்  சென்றோம். அது  முன்னாள் கட்டப்பட்டு  உள்ள ஆலயம். அதன் விவரம் கிடைக்கவில்லை. ஆனால் அதில் மிக உயரமான ஹனுமான் சிலை வைக்கப்பட்டு உள்ளது  . ஆலயத்தில் சாமுண்டா தேவியை பிரதிபலிக்கும் சிலையும்,  லிங்கமும் உள்ளது.  படங்கள் கீழே உள்ளன.

 மிக உயரமான ஹனுமான் சிலை
(சுமார் 50 அடி இருக்கும்)

 சன்னதியில்  கைலா  தேவியின் சிலைகள்

 சன்னதியில்  சிவலிங்கம்  

பகலாமுகி ஆலயம் , நல்கேடா

அடுத்து நாங்கள் சென்ற  ஆலயம்   நல்கேடாவில் இருந்த பகலாமுகி ஆலயம் ஆகும்.  அந்த ஆலயத்தின் செய்தி கீழே உள்ளது.

பகலாமுகி என்றால் கொக்கு முகம் என்று பொருள்படும். உலகிலேயே மூன்று இடங்களில்தான் கொக்கு முகத்தைக் கொண்ட பகலாமுகி தேவிக்கு ஆலயங்கள் உள்ளன. இதை சக்தி பீடம் என்று கூறுகிறார்கள்.  தசவித்யா எனப்படும் பத்து தேவிகளின் ரூபங்களில் ஒன்றே பகலாமுகி தேவி ரூபம் ஆகும் .

மத்தியப் பிரதேசத்தில் தந்திர மந்திர சக்தியை உள்ளடக்கிய ஆலயங்கள் பல உள்ளன. பொதுவாகவே மன்னன் விக்ரமாதித்தியன் ஆண்ட இடங்களில் மந்திர தந்திர சக்திகள் அடங்கிய ஆலயங்களை அவர் நிறுவியதாக ஒரு கருத்து உண்டு. ஏன் எனில் அவர் அப்படிப்பட்ட ஆலயங்களுக்குச் சென்று பூஜைகள் செய்து சக்தியை அதிகரித்துக் கொள்வது அவருடைய வழக்கமாம். அதனால்தான் அவர் ஆண்டு வந்த மத்தியப் பிரதேசத்திலும்  தந்திர மந்திர சக்திகளைக் கொண்ட பல ஆலயங்கள் நிறையவே அமைந்து உள்ளன. அவற்றில் ஒன்றான பகலாமுகி ஆலயம் உஜ்ஜயினியில் இருந்து சுமார் 90 கி.மீ தொலைவில் உள்ள நல்கேடா என்ற சிற்றூரில் நர்மதாவின் கிளை நதியான லகுந்தார் என்ற  நதியின் கரையைத் தொட்டபடி உள்ளது. அந்த ஆலயத்தைப் பற்றி சிறு வரலாறு அங்குள்ள ஒரு கல்வெட்டில் இருந்து தெரிய வருகின்றது. மற்றபடி ஆலயம் எப்பொழுது கட்டப்பட்டது என்ற விவரம் இல்லை. அனைத்து செய்திகளுமே அங்குள்ள பண்டிதர்கள் தரும் வாய்மொழிச் செய்திகளே.   இந்த ஆலயத்தின் புராணக் கதையும் மகத்துவமும் அந்த கிராமத்தினரிடையே வம்சாவளியாக பரவி வந்துள்ளன.

ஆலயம் பல ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டது என்பதற்கு ஆதாரமாக அங்குள்ள தேவியை பாண்டவர்கள் வந்து பூஜித்த செய்தி மூலம் அறிய முடிகிறது. புராணச் செய்திகளின் அடிப்படையில் மகாபாரதப் போரின் பொழுது குருஷ்ஷேத்திரத்தில் நடைபெற்ற யுத்தத்தில் கௌரவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தர்மர் பகலாமுகி தேவியை இந்த இடத்தில் வந்து இங்கு வழிபட்டார் எனக் கூறுகின்றனர்.  அதனால்தான் மகாபாரத யுத்தத்தின்போது  பாண்டவர்கள் யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கு அருள் தந்து சக்தி கொடுத்த இந்த தேவிக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு கிருஷ்ண பகவான் கூறியதினால் யுதிஷ்டிரர் இந்த  தேவிகை இங்கு பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைத்ததான கதை உள்ளது. தற்போது இங்குள்ள ஆலய பண்டிதர் இந்த ஆலயத்தில் பூஜைகளை செய்து வந்த பண்டிதர் குடும்பத்தின் பத்தாவது பரம்பரையை சேர்ந்தவர்.  அவர்களைத் தவிர வேறு யாரும் இங்கு பூஜைகளை செய்வதில்லை. பல இடங்களில் இருந்து சாதுக்களும் சன்யாசிகளும் இங்கு வந்து சித்த சாதனாக்களை செய்து சித்த சக்தி பெறுகிறார்களாம். நாங்கள் சென்றிருந்த சமயத்தில் அங்கிருந்த ஆலய மண்டபத்தில் பலர் ஹோமங்களையும் யக்னங்களையும் செய்து கொண்டு இருந்ததைக் காண முடிந்தது.

 சன்னதியில் பகலாமுகி  தேவி 

 சன்னதியில் பகலாமுகி  அருகில் 
உள்ள சாமுண்டா தேவிகள் (சகோதரிகள்) 

பகலாமுகி  ஆலயப் பெருமை
இந்த ஆலயத்தின் மகத்துவம் என்ன என்றால் ஆலயத்தின் நான்கு பக்கங்களிலும் நான்கு மயானங்கள் அமைந்து உள்ளததுதான். ஆலயத்தின் எதிர்புறத்தில் முகமதியர் இடுகாடு ஒன்று இருக்க, வலது பக்கத்தில் குழந்தைகளின் இடுகாடு உள்ளது. மற்ற இருபுறமும் இரண்டு மயானங்கள் அமைந்து உள்ளன. அதனால்தான் இந்த ஆலயம்  அதிக தாந்திர சக்தி வாய்ந்த ஆலயமாக உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. இங்கு வந்து தீய காரியங்களுக்காக  சாதனாக்களையும், யக்னங்களையும் செய்து சக்தியை உருவேற்றிக் கொள்ள முடியாதாம். மனித குலத்துக்குத் தேவையான நன்மைகளை பெறுவதற்கு மட்டுமே தேவி  உதவுவாளாம். ஒருவருக்கு ஏவப்பட்டு உள்ள  தீய சக்திகளை அழிக்கவும், எதிரிகளின் கொட்டத்தை அடக்கவும் சாதனாக்களை செய்ய முடியும் என்கிறார்கள்.

இங்குள்ள  ஆலயத்தில் காணப்படும் மூன்று முகங்களைக் கொண்ட தேவியின் சிலை 2500 ஆண்டுகளுக்கு  முற்பட்டது எனவும் பூமியில் இருந்து தானாக வெளி வந்தது எனவும் கூறப்படுகின்றது. 1815 ஆம் ஆண்டில் ஆலயத்தில் உள்ள தேவியின் பிராகாரத்தைச் சுற்றி பதினாறு தூண்கள் எழுப்பப்பட்டு உள்ளதாக கல்வெட்டு செய்தி கூறுகின்றது. குறிப்பிட்ட எதோ ஒரு காரணத்திற்காக மந்திர தந்திர சாஸ்திரத்தின் அடிப்படையில் பதினாறு தூண்கள் எழுப்பப்பட்டு இருந்திருக்க வேண்டும் என ஒரு சாஸ்திர பண்டிதர் கூறினார்.  தேவியின் ஸ்வரூபம், தேவியின் அவதார வரலாறு மற்றும் பண்டிதர்கள் கூறிய மேலும் பல தகவல்கள்  மற்றும் படங்கள் அடுத்த பாகத்தில்.
.................தொடரும்

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>