Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Temples in Malwa Region - 3 A

$
0
0
சாந்திப்பிரியா                                                       -  3 A -

........நல்கேடா ஆலயம் 
பகலாமுகி  செய்திகள் சில விட்டுப் போய் விட்டன.  விடுபட்ட செய்திகளை கீழே தந்திருக்கிறேன் .

இந்த ஆலயத்தின்  ஒரு சிறப்பு அம்சம் என்ன என்றால் இங்கு வில்வம், வேப்பிலை, சம்பா மற்றும் அரச மரங்கள் ஒன்றாக ஒரே இடத்தில் உள்ளன. இதைப் போன்ற காட்சியை வேறு எந்த ஆலயத்திலும் காண முடியாது. மஞ்சள் நிற பூக்கள் குலுங்கும் மரம் மன அமைதியை தரும் என்பதின் காரணம் பகலாமுகிக்கு பிடித்த நிறம் மஞ்சள் நிறமாகும். சம்பா பூக்கள் இனிமையைத் தரும் வகையில் உள்ளது.  பிரும்மா அந்த ஆலயத்தில் காவலில் இருப்பதைக் குறிப்பதே அவரை சார்ந்த  அரச மரம். அரச மரம் ஒருவரது உயிருக்குத் தேவையான ஆக்சிஜனை தருவதால் அரச மரத்தை பிரும்மாவின் மரம் என்பார்கள்.  அது போலவே ருத்ரனைக் குறிக்கும் விலவ மரம் சிவபெருமான் அங்கு உள்ளதைக் காட்டுகிறது. பலவிதமான வியாதிகளைக் குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்ட வேப்ப மரம் அந்த தேவியை துதிப்பவர்களது  தீராத நோய்களை அந்த தேவி குணப்படுத்துவாள் என்பதைக் குறிக்கிறது.

பாண்டவ சகோதரர்கள் வனவாசம் சென்று இருந்தபோது அவர்கள்  யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும் எனில்  கொக்கு முகத்தைக் கொண்ட பகலாமுகிக்கு பூஜை செய்ய வேண்டும் என கிருஷ்ணர் அவர்களுக்குக் கூறியதினால் அவர்கள் யதுஷ்ராரின் தலைமையில் இங்கு வந்து கொக்கு ரூபத்துடன் இங்கு எழுந்தருளி இருந்த பகலாமுகியை பல காலம் பூஜித்தார்கள். அவளும் அவர்களது பூஜையை மனதார ஏற்றுக் கொண்டு அவர்கள் இழந்த நாட்டை மீண்டும் பெறுவார்கள் என்ற வரத்தை தந்ததும் அல்லாமல் அவர்களுக்கு எதிரிகளை அடக்குவதற்காக தனது சக்தியும் அந்த யுத்தத்தில் கிடைக்கும் என்று கூறினாள். அது போலவே அவர்கள் யுத்தத்தில் வெற்றி அடைந்ததும் கிருஷ்ண பகவான் கூறியது போலவே பகலாமுகிக்கு இங்கு ஆலயம் அமைத்தார்கள் என்று ஒரு புராணக் கதையும் நிலவுகிறது. அதனால்தான்  இந்த ஆலயத்தை பல்லாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட ஆலயம் என்கிறார்கள்.

தக்ஷன் யாகத்தில் கலந்து கொள்ள சிவபெருமான் பார்வதிக்கு தடை போட்டதை  ஏற்க  முடியாமல் போன பார்வதி பயங்கர ரூபம் கொண்டாள். அவளுடைய பயங்கர ரூபத்தைக் கண்ட  ருத்ரன் எனும் சிவபெருமான் பயந்து கொண்டு அங்கிருந்து  ஓடத் துவங்கினார். ஆகவே அவரைப் பிடிக்க பார்வதி பத்து உருவங்களை எடுத்து அவரை துரத்தினாளாம்.  அந்த பத்து ரூபங்களில் ஒன்றே பகலாமுகி ஆகும். சுகபோகம் உள்ள இடத்தில் மோக்ஷம் கிடைப்பது இல்லை. மோட்ஷம் கிடைக்கும் இடத்தில் சுகபோகத்துக்கு வேலை இல்லை. ஆனால் இந்த தேவியை ஆராதிப்பவர்களுக்கு அவை இரண்டுமே பிராப்தி ஆகுவதாக கூறுகிறார்கள். 

இங்குள்ள தேவியை அர்த்தனாரீஸ்வரரின் அவதாரம் என்றும் த்ரீநேத்ரி என்றும்  கூறுகிறார்கள். அதற்குக் காரணம் அந்த தேவியின் தலைப் பகுதியில் மூன்றாவது கண் உள்ளதாகவும், அதனால் அவள் ருத்ரனின் அம்சம் என்றும் சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ளதாம். அந்த மூன்று கண்களும் இறந்த காலம், தற்காலம் மற்றும் வரும் காலங்களில் நிகழ்வதை பார்த்தபடி இருக்கும் கண்களாம். 

 பகலாமுகி   ஆலய தனி 
சன்னதியில் ஹனுமான் 

 
பகலாமுகி யந்திரம்
.........தொடரும்


Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>