Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Mayil Ravanan- 14

$
0
0
'யாரவன் வருகிறான், உள்ளே ஓடுடி பெண்ணே... சீக்கிரமா ஓடி வந்துடுடி 'எனக் கத்திக் கொண்டே பாய்ந்தது பாய்ந்து ராக்ஷசர்கள் வாயிலுக்கு வருவதற்கு முன் தூரதண்டியும் அனுமான் கூறியது போலவே குடத்துடன் இருந்த மாவிலைக் கொத்தோடு நுழை வாயிலின் உள்ளே தடுக்கி விழுவது போல பாசாங்கு செய்தாள். அவ்வளவுதான். அரண்மனைக்கு உள்ளே சென்று விழுந்த மாவிலைக் கொத்தில் சிறு பூச்சியாக இருந்த அனுமானும் மாவிலையில் இருந்து வெளியில் குதித்து, தன் விஸ்வரூபத்தை எடுத்து அதி பலம் கொண்டு அத்தனை வீரர்களையும் அடித்து, துவைத்து துவம்சம் செய்து கொன்றார். பாதாளத்திலே நடந்ததையெல்லாம் ஆனந்ததுடனே வானத்தில் இருந்த தேவர்கள் பிரமித்தபடி பார்த்து, பார்த்து பரவசம் அடைந்து மகிழ்ந்தார்கள். ' ராம லஷ்மணர்களை அனுமான் காப்பாற்றி விடுவார்' என்ற நம்பிக்கை அவர்களுக்கெல்லாம் இப்போ வந்து விட்டது.

அதையெல்லாம் பார்த்த தூரதண்டி பெரும் மகிழ்ச்சி அடைந்து 'ஐயா அனுமனே இப்போ நீங்கள் செய்ய வேண்டியது கடகன் மற்றும் விருசிமுகன் என்ற இரண்டு அசுரர்களையும் அழிக்க வேண்டும். அவர்களே காளி கோவிலுக்கு காவலில் உள்ள பெரும் தளபதிகள். அவர்களை வதம் பண்ணாலே பாதி காரியம் ஆனது போலாகிடும். அதோ தெரிகிறதே அதுதான் கடகன் வீடு. அதுக்கு பக்கத்தில் உள்ளதுதான் விருசிமுகன் வீடும்' என்று அவர்கள் வீட்டை அனுமானுக்குக் காட்டிவிட்டு அங்கிருந்து வேக வேகமாக சென்று விட்டாள். அவளை அங்கு பார்த்து விட்டால் உடனே  தயங்காமல் மயில் ராவணன் அவளையும் அவள் பிள்ளையும் வெட்டிப் புதைத்துடுவான்.

தூரதண்டி அடையாளம் காட்டிய வீட்டை அனுமானும் அதி வேகமாக சென்றடைந்து அந்த இருவரும் தத்தம் மனைவிகளுடன் சல்லாபித்துக் கொண்டு இருக்கையிலேயே தன் வாலை அவர்கள் வீட்டுக்குள் செலுத்தி அவர்கள் படுத்திருந்த கட்டிலோடு சேர்த்து வாலால் அவர்களைக் கட்டி வெளியில் இழுத்து துவம்சம் செய்தார். விருமுகனோ 'சுவாமி என்னை விட்டுடு....என்னை விட்டுடு.. இத்தனையும் செய்தது அந்த மகாபாவி மயில் ராவணன்தான்....அதோ அங்குள்ள வீட்டில் அவன் இருக்கான். அவனை வதம் செய்யுங்கோ...அவனை செய்யுங்கோ' என அலறினாலும் அவனையும் அனுமான் அழித்தார்.  ஆனால் அந்த குழப்பத்தில் கடகன் மட்டும், தப்பித்தோம் பிழைத்தோம் என எப்படியோ தப்பியோடினான்.

அதெல்லாவற்றையும் ஆனந்ததுடனே பார்த்துக் கொண்டிருந்த தூரதண்டியை அழைத்துக் கொண்டு சென்ற அனுமானும் அவசரமவசரமாக அவள் பிள்ளை விலங்கிட்டு வைக்கப்பட்டு இருந்த வீட்டையும் அடைந்து அவன் விலங்குகளையும் ஒடித்து அவனையும் விடுதலை செய்தப் பின் அவனுக்கு உறுதி மொழி கொடுக்கலானார். அவனோ பயந்து நடுங்கியபடி 'ஐயகோ...யாரிவர் இங்கு வந்து என் கால் விலங்கை, கை விலங்கை, மார் விலங்கை ஒடித்து உள்ளார்? வந்துள்ளவர் மயில் ராவணனின் ஆளோ? என்னை வெட்டி காளிக்கு பலி கொடுக்க வந்துள்ளாரோ?? என்றெல்லாம் பீதியோடு நடுங்கி அனுமனைக் கண்டு ஓடி ஓடி ஒளியத் துவங்க அனுமானும் கூறினார் 'இளம் பிள்ளாய், உடனே இங்கிருந்து கிளம்பி வா....நானுனக்கு பட்டம் சூட்டரேன். என்னைப் பார்த்து பயப்படாதே. இங்கு உன் தாயோடுதான் வந்திருக்கேன்' என கூறி விட்டு அவன் தாயாரான தூரதண்டியை அழைக்க உள்ளே வந்த அவளும் தன் மகனிடம் சொன்னாள் ' நீலமேகா, என் அருமை புத்ரனே, இன்றோடு நம் துயருக்கு விடுதலை தரத்தானடா ராம தூதரான இவர் வந்திருக்கார். சீக்கிரமா வெளியில் வாடா. இல்லைனா மயில் ராவணன் வந்து உன்னை வெட்டிடப் போறான்' என்று கூற பயம் தெளிந்த நீலமேகன் வெளியில் வந்தான்.

தாயும் மகனும் அனுமார் காலில் வீழ்ந்து ' ஐயா, ராமபக்தரே, தயை செய்து நீங்கள் இங்கிருந்து ராம லஷ்மணர்களை விடுதலை செய்து கொண்டு போகும் முன் என் மாமன் முறை மயில் ராவணனையும் வதம் செய்துவிட்டுப் போங்களேன். இல்லை எனில் அவன் வந்து எங்களை சுக்குநூறாக் கிழித்துப் போட்டு ஹிம்சை செய்து கொலை பண்ணிடுவானையா ...எங்களை நீர்தான் காப்பாத்த வேணுமையா ' என கண்ணீர் விட்டழுதுக் கேட்டப் பின் அவர் ஆசிகளை வாங்கிக் கொள்ள அனுமானும் 'நீங்கள் எங்காவது பத்திரமா இருங்கோ. ஆபத்து என்றால் என்னை உரத்த குரலில் அழைத்தால் எங்கிருந்தாலும் அது எனக்குக் கேக்கும். உடனே வந்து உம்மைக் காப்பாற்றுவேன். கவலைக் கொள்ளேல். என் வேலையை முடித்து விட்டு உன் மாமா மயிலையும் வதம் செய்து விட்டு உனக்கு முடி சூட்டுறேன்' என்று கூறி விட்டு அங்கிருந்து கிளம்பி காளி கோவிலுக்குப் போனார்.
...........தொடரும்

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>