Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Mayil Ravanan - 10

$
0
0
வேற வழியே இல்லை என்பதால் அனுமான் மச்சவல்லபனை மயக்கமடையச் செய்த பின்னால் அடுத்து அவன் காவல் காத்திருந்த கோட்டைக்குள் குதிக்க அந்தக் கோட்டையோ செங்கலினால் கட்டப்பட்டு இருந்ததைக் கண்டார்.  'அட....இது வெறும் வெறும் செங்கல் கோட்டைத்தானே இது என நினைத்து அதன் அருகில் சென்றால் அதை சுற்றி  நாலாயிரம் லட்ஷ வீரர்கள் காவலில் இருந்ததைக் கண்டார். அத்தனை பேரையும் ஒரேடியாகக் கண்ட அனுமானுக்கு வேர்த்து வியர்த்தது. 'இதென்னடா, இத்தனை பேரையும் சமாளித்து உள்ளே போவதற்குள் காரியம் கேட்டுடுமே' என நினைத்தவர் கண்ணில் அரண்மனை உயரத்துக்கு அங்கிருந்த பிரும்மாண்டமான பெரிய மரம் ஒன்று கண்ணில் பட்டது. 'இது போதும் நமக்கு' என எண்ணிக் கொண்டே விஸ்வரூபம் எடுத்து அந்த மரத்தை வேரோடு பிடுங்கி அசுரர்கள் சுதாரிக்கும் முன்னேயே அவர்களை அதைக் கொண்டு அவர்களை  தாக்கத் துவங்க அங்கிருந்த பாதி அசுரர்களும் அடுத்தகணமே மாய்ந்து வீழ்ந்தார்கள். மிச்சமிருந்த அசுரர்கள் வாளையும், கதையையும், ஈட்டியையும் கொண்டு வந்து அனுமானை தாக்கத் துவங்க அத்தனை பேரையும் அந்த மரத்தாலேயே நாலு பக்கமும் தாக்கிக் தாக்கி அழித்தார். அவர்களை சமாளிப்பதற்குள் அறுபது லட்சம் யானை, அறுபது லட்சம் குதிரை, நூறாயிரம் லட்சம் சேனைகள் என பலதும் கடல் அலைப் போல வந்து கொண்டே இருக்க நாலு பக்கமும் சுழன்று, சுழன்று மரத்தாலே அடித்த அடியில் அத்தனைபேரும் கொத்துக் கொத்தாய் செத்து  விழுந்தார்கள். எங்கிருந்து வந்ததோ பலம் அனுமனுக்கு! அத்தனை வேகமாக சுற்றி, சுற்றி ஒரு சூறாவளிக் காற்றுப் போல அடிக்க அடிக்க அனைவரும் செத்து விழுந்தார்கள். அவர்கள் அனைவரும் யமலோகம் போனதும் அரண்மனைக்குள் நுழைந்தால் அடுத்து தென்பட்டது  பித்தளையிலான   கோட்டை!!

அதை சுற்றியும் லட்ஷ லட்சமாக அசுர சேனை. அடுக்கடுக்காக ஆயுதம் கொண்டு அவையனைத்தையும் தலையாணி போல தலைக்கு அடியில் வைத்துக் கொண்டு காவலில் இருக்க அவர்களையும் சமாளிக்க வேண்டி இருந்ததது அனுமனுக்கு. அடுத்து சில நொடிகளில் சுழன்று, சுழன்று அத்தனை பேரையும் துணியைக் கிழிப்பது போல கந்தல் கந்தலாக்கி அழித்தப் பின் உள்ளே சென்றால் அங்கு செப்பிலான உலோகத்தில் கட்டப்பட்டு இருந்த கோட்டை வந்தது. 'இதென்னடா அடுத்தடுத்து உலோகக் கோட்டையாக இருக்கிறதே' என நினைத்தவாறு அதையும்  நோக்கிச் சென்றால் அங்கு இருபது லட்சம் அசுரப் படையினர் காவலில் இருப்பதைப் பார்த்தார். மெல்ல மெல்ல நகர்ந்து போய் தொப்பென அவர்கள் மத்தியில் குதித்தவர் விஸ்வரூபம் எடுத்து  அனைவரையும் மிதித்தே அழித்தார். அவராலே அடிக்கடி விஸ்வரூபம் எடுக்க முடியாது.  நிஜமான காரணம் இருந்தால், அதிலே நியாயமும் இருந்தால் மட்டுமே விஸ்வரூபத்தை எடுக்க முடியும் என்ற விதியும் அவருக்கிருந்தது. அதனாலேதான் நிஜமாவே வேணுமென்றால் மட்டுமே விஸ்வரூபத்தை எடுக்க முடியும் என்பதால் அதுவரை அவர்  விஸ்வரூபத்தை எடுக்கவில்லை. இப்போ களைத்துப்  போய் இருந்ததினாலேயும், அடுத்தடுத்து லட்ஷ அரக்கர்களைக் கொன்றதினாலே உடல் பலமும் குறைந்திருந்ததாலும்  இப்போ அவருக்கு தேவையாயிருந்தது விஸ்வரூபம். அதை எடுத்ததினால் அசுரர்களை எளிதாக அழித்து விட்டு இன்னும் உள்ளே செல்லலானார்.

அடுத்து வந்த வெங்கலக் கோட்டையில் காவலில் இருந்த இருபத்தி எட்டு லட்சம் அசுரப் படையினரையும் அவ்விதமே துவம்சம் செய்தப் பின் சென்றால் வந்தது பொன் கோட்டை. இப்படி அடுக்கடுக்காய் கோட்டை வந்து  கொண்டே இருக்க அனுமானும் களைத்தே போனார். பொன் கோட்டைக்குக் காவலில் இருந்ததோ அறுபது லட்சம் அரக்கர்கள். அவர்களையும் அழித்தப் பின் வந்த பவழக் கோட்டையில் இருந்த முப்பது லட்சம் அசுரர்களையும் கொன்று குவித்தப் பின் சென்றால் தூரத்தில்  தெரிந்தது தங்கக் கோட்டை.

பவழக் கோட்டைக்கு தள்ளி பல கஜதூரத்தில் ஒரு நந்தவனத்தின் மத்தியில் இருந்தது அந்த தங்கக் கோட்டை. அதற்குள்ளேதான் மயில் ராவணனும் இருக்கிறான். காளி பீடமும் உள்ளது. கோட்டையை  சுற்றி வெளிப்புறத்தில்  நந்தவனம். மனதுக்கே ரம்யமாக இருந்த அதில் ஒரு மரத்தின் உச்சியில் சென்று சிறு உருவில் அமர்ந்து கொண்டார் அனுமார். அந்த கோட்டைக்குள் நுழைவது அத்தனை சாத்தியம் இல்லை. அங்கிருந்த அரக்கர்கள் சாமர்த்தியசாலிகள்.  கோட்டை வாசலிலும் பல யந்திரங்களும் வைக்கப்பட்டு இருந்தன. அந்த வனம் முழுவதுமே தந்திர மந்திர சக்திகளால் படைக்கப்பட்டு இருந்தன போலும். அதனால்தான் அனுமானுக்கும் தனது சக்தி குறைந்து உள்ளது தெரிந்தது. அங்கு தம்மால் அசுரர்களை நேரடியாக மோதி யுத்தம் செய்ய முடியாது என்பதும் அரண்மனைக்குள் சென்று அங்கிருந்து அவர்களை பின்புறமாக தாக்கினால் மட்டுமே அவர்களைக் கொல்ல முடியும் என்பதையும், அதற்குக் காரணம் அரண்மனையின் வெளிப்புறத்தில் இருந்த பூமி முழுவதும் மந்திரங்களினால் கட்டி வைக்கப்பட்டு உள்ளது என்பதினால் அதில் காலை வைத்தாலே பாதி பலமும் போய் விடும் என்பதையும் முதலிலேயே மச்சவல்லபன்  ஜாடைமாடையாகக் கூறி இருந்தது மூலம் அறிந்திருந்தார். ஆகவே அரண்மனைக்கு உள்ளே எப்படி செல்லலாம் என யோசனை செய்யலானார்.
...........தொடரும்

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>