Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Village Deities - 31

$
0
0
கிராம தேவதைகள் - 31

சமண மலை ஐயனார் ஆலய முகப்பு

கீழகுயில்குடி சமணமலை 
ஐயனாரும் கருப்பசாமியும் 
[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]

மதுரை தேனீ சாலையில் மதுரையில் இருந்து பத்து கிலோ தொலைவில் உள்ளதே கீழ்குயில்குடி கிராமம். சமண மலையின் அடிவாரத்தில் உள்ளது இந்த ஊர். அங்கு ஒரு காலத்தில் ஜைன மதம் தலை தூக்கி நின்றது . அவர்கள் சித்திரங்களை கொண்ட பல குகைகளை செய்து உள்ளனர். அதன் அருகில் உள்ளதே வடிவேல்கரை என்ற கிராமம்.

ஒரு காலத்தில் அந்த மலை அடிவாரத்தில் ஐயனார் ஆலயமும், மலைக்கு மேல் கருப்பண்ணசாமி ஆலயமும் இருந்தது. அந்த காலத்தில் மதுரையில் முகாமிட்டு இருந்த ஆங்கிலேயர்கள் தினமும் குதிரையில் ஏறிக்  கொண்டு செல்லும்போது அந்த ஆலயத்தை பற்றி அநாகரீகமாக எதையாவது உரக்கக் கூவிக் கொண்டு ரவுடிகளைப் போலச் செல்வார்கள். அதைக் கண்ட கருப்பண்ணசாமிக்கு கோபம் வந்தது. ஆகவே ஒருநாள் அவர்கள் குதிரையில் செல்லும்போது மலை பக்கத்தில்   அவர்களை வழுக்கி விழ வைத்து அடிபட வைத்தார் .

முதலில் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்ட ஆங்கிலேயர்கள் அந்த நிகழ்ச்சி தினமும் நடக்கத் துவங்க  அதைப் பற்றிய காரணத்தை தெரிந்து கொள்ள ஒரு ஜோதிடரைக் அணுகினார்கள்.  அவரும் கருப்பசாமியை மலை உச்சியில் இருந்து கீழே இறக்கி வைக்குமாறு ஆலோசனைக் கூறினார்கள். ஆகவே கருப்பண்ணசாமியை மலைக்கு கீழே உள்ள ஐயனார் ஆலயத்தின் எதிரில் வடக்கு நோக்கி அமைத்தனர். அதை வேளர்கள் என்ற இனத்தினர் (குயவர்கள்) செய்தனர்.

வைகை ஆற்றின் பக்கத்தில் இருந்த கீழ்குடில் குடி மற்றும் வடிவேல்கரை கிராமத்தில் சரியான மழை இல்லாததினால் தண்ணீர் இன்றி வைகை நதிவற்றிப் போக அந்த ஊர்களில் பஞ்சம் ஏற்பட்டது. ஆகவே அங்கிருந்து பலரும் பிற கிராமங்களில் சென்று குடியேறலாயினர். அதில் சிலர் கருமாத்தூர் என்ற இடத்துக்கு முனுசாமி ஆலய பூஜாரிகளாகச் சென்றனர். அடுத்த சில மாதங்களில் மழை பெய்ததினால் அந்த இரு கிராமங்களும்  மீண்டும் செழிப்பு அடைய கருமத்தூருக்குச் சென்றவர்கள் தம் ஊருக்கு திரும்பச் செல்ல தயார் ஆனார்கள்.  ஆனால் அவர்கள் திரும்பிப் போகக் கூடாது என அவர்கள் கருமாத்தூரில் வழிபட்டு வந்த விருமப்பசாமியும், காசி மாயனும் அவர்களை தடுத்தனர். ஆகவே அவர்கள் முனுசாமி ஆலயத்தில் இருந்து மண்ணை எடுத்து வந்து கருப்பண்ணசாமி ஆலயத்தின் அருகில் விருமப்பசாமிக்கும், காசி மாயனுக்கும் சிலைகளை அமைத்தனர். அவர்கள் இருவருக்கும் உதவியாக இருக்க கழுவனாதன், கருப்பாயி அம்மாள், இருளப்பன், சங்கிலி கருப்பசாமி, சோனைசாமி, வீரபத்ரசாமி போன்றவர்களுக்கும் சிலைகள் அமைத்து  அவர்கள் அனைவரையும் அங்கு வழிபடத் துவங்கினார்கள்.  


மலை மீது இருந்து கருப்பண்ணசாமியை கீழே கொண்டு வருவதற்கு முன்னால் பிராமணர்களே ஐயனார் ஆலய பூசாரிகளாக இருந்தனர்.  கருப்பண்ணசாமியும் அங்கு வைக்கப்பட்டப் பின்னர் வேளாளர்கள் என்பவர்கள் ஆலய பூசாரிகள் ஆயினர். ஆலயத்துக்கு பூசாரிகளாக  வந்து கொண்டு இருந்த பூசாரிகள் அந்த ஊரில் இருந்து ஐந்து  கிலோ மீட்டர்  தொலைவில் இருந்த விலாசாரி என்ற கிராமத்தில் இருந்து தினமும் வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் வந்த வழி நெடுகிலும் புதர்களாக இருந்தது. திருடர்கள் வந்து தாக்கக்கூடும் என்பதினால் அவர்களுக்கு துணையாக கரடிகள் வந்தன. ஆகவே அவர்கள் கருப்பர்தான் கரடி உருவில் தம்முடன் வந்து கொண்டு பாத்துகாப்பை தந்து கொண்டு உள்ளதாக நினைத்தனர். அவர்களின் குழந்தைகளுக்கு சமண மலை கரடி என்று கூட பெயரிட்டனர்.

மார்கழி மாதத்தில் பிராமண பூசாரிகள் ஐயனார் ஆலயத்தில் பாவாடை பூஜை நடத்துவார்கள். கீழ்குடிக்குயில் கிராமத்து மக்களிடம் இருந்து பெறும் நன்கொடையில் அதை வாங்குவார்கள். 160 படி அரிசி வாங்கி சாக்கரை பொங்கல் செய்து ஐயனார் ஆலயத்தின் எதிரில் மலை போல குவித்து வைப்பார்கள். அனைத்து கிராமத்தினரையும் தண்டோரா போட்டு அழைப்பார்கள். அனைவரும் வந்ததும் ஐயனார் சாமியாடிகள்  தீ குண்டத்தில் குதிப்பார்கள். மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள். அதன் பின் பொங்கல் அனைவருக்கும் தரப்படும்.

அது போல புரட்டாசி மாதத்தில் முப்பது நாளும் பொங்கல் படைக்கப்படுகின்றது. இரு கிராமத்திலும் பதினைந்து பதினைத்து நாட்கள் திருவிழா நடைபெறும். மண்ணினால் செய்த முத்தாலம்மனுக்கு மாவிளக்கு போட்டு பூஜை செய்வார்கள்.  அதன் பின் முத்தாலம்மனை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஊரில் உள்ள குளங்களில் அதைக் கரைத்து விடுவார்கள். அதற்கு மறுநாள் குதிரை ஊர்வலம் நடைபெறும். வெளிச்சேரியில் ஆறு குதிரைகள் செய்யப்பட்டு இரண்டு கிராமத்திற்கும் மூன்று, மூன்று என எடுத்து வரப்படும். அவைகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். அதன் பின் அனைவர் வீட்டிலும் பொங்கல் செய்யப்படும். ஒரு ஆடு கருப்பருக்கு பலியாக தரப்படும்.

ஊரில் உள்ள ஒரு தாமரை குளத்தை புனிதமானதாக கிராமத்தினர் கருதி வருகிறார்கள். ஒரு முறை அங்கு மீன் பிடிக்க வந்தவர் அதை அசுத்தப்படுத்தி விட்டார். அதன் பின் அந்த குளத்தில் பிடிக்கப்பட்ட மீன்களில் உணவு தயாரிக்கப்பட்டபோது உணவில் ரத்தம் வந்ததாம். ஆகவே கிராமத்தினர் ஐயனாரிடம் சென்று அது குறித்து  முறையிட அதன் பின்னனரே நிலைமை சரியாயிற்று. அந்த குளத்தில் உடல் சுத்தமில்லாதவர்கள் மற்றும்  பெண்கள்  குளிக்கக் கூடாது என்ற நியதி உள்ளது.

அந்த கிராமத்தில் உள்ளவர்கள் முக்கியமான முடிவு எடுக்க வேண்டும் எனும் பொழுது ஆலயத்தில் சிவப்பு, பச்சை, வெள்ளை பூக்களை குலுக்கிப் போட்டு அவற்றை எடுத்து அதன்படி கிடைக்கும் முடிவை எற்பார்கள். சிவப்பு பூ வந்தால் காரியம் செய்யக் கூடாது, பச்சை என்றால் சில நாட்கள் பொறுத்து செய்ய வேண்டும், வெள்ளை என்றால் உடனே செய்யலாம் என்பதாக எண்ணிக் கொண்டு செயல்படுவார்கள்.

-----------------------
பின் குறிப்பு 
இந்த ஆலயத்தின் அருகில் அருகில் உள்ள குகையில் பல சிற்பங்கள் ஜைன மதத்தினரால் செதுக்கப்பட்டு இருக்கிறது.  கீ. பீ பத்தாம் நூற்றாண்டில் இங்கு பெருமளவில் ஜைன மதத்தினர் வந்து தங்கி தமது மதத்தைப் பரப்பி வந்துள்ளார்கள். ஒரு விதத்தில் பார்த்தால் இங்குள்ள சமணக் குகைகள் பல்கலைக் கழகங்கள் போல செயல்பட்டு மத மாற்றத்தை  செய்வதில் பெரும் பங்காற்றி உள்ளன. மதுரையிலிருந்து நாகமலை புதுக்கோட்டை செல்லும் வழியில் கீழக்குயில் குடி உள்ளது. இந்த சமண மலைக்குறித்த ஒரு புராணக் கதையும் நிலவுகிறது.  பெற்றோர்களிடம் கோபித்துக் கொண்டு கைலாயத்திலிருந்து  பூமிக்கு வந்த முருகப் பெருமான்முதன் முதலில் இந்த மலையில்தான் வந்து இறங்கியதாகவும், அவருக்குத் துணையாக ஐயனாரும் வந்ததாகவும், அவர்களுடைய பாரம் தாங்காமல்  அந்த மலை ஆடத் துவங்கியதினால் முருகப் பெருமான் ஐயனாரை அங்கேயே இருக்குமாறு கூறிவிட்டு  தான் மட்டும் தனியே சென்று  திருப்பரம்குன்றம் மலையில் குடி கொண்டதாகவும் கிராமியக் கதை உள்ளது.  

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>