கும்பகோணத்து அருகில் ஒரு கிராம தேவதை
ஆலயத்தில் காணப்படும் சிலைகள்
(படம் நன்றி:www.indiamike.com )
வத்தலக் குண்டு இடுமலை மகாலிங்க மாயக் கருப்பு

[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது வத்தலக் குண்டு எனும் கிராமம். அங்குள்ள ஆலயத்தில் உள்ள மாயக் கருப்பு முதலில் தேனீ மாவட்டத்தில் உள்ள எட்டூர் கொட்டக் குடி என்ற கிராமத்தில் இருந்தவர் . அவரை அந்த ஊரில் இருந்தவர்கள் வணங்கி வந்தாலும் அவரை சரி வர வணங்கவில்லை என்ற கோபத்தினால் அவர் அவர்களுக்குப் பல தொல்லைகளைத் தந்தார். ஆகவே கோபமுற்ற மக்கள் அவரையும் அவரை சார்ந்த இருபத்தி ஒரு சிறு கடவுட்களையும் , அதாவது சின்னக் கருப்பு, முன்னோடி கருப்பு, கழு உதயான், கனவே கருப்பு, அலத்திக்காரி, போன்றவர்களை ஒரு சிறிய பெட்டியில் வைத்து மூடி நதியில் தூக்கி எறிந்து விட்டார்கள். நதியில் மிதந்து வந்த அதை பார்த்த கட்டக்காமன்படியை சேர்ந்த ஒரு பிராமணன் அதை தனது வீட்டிற்கு எடுத்து வந்தார். அன்று இரவு அதில் இருந்து கலகல என்ற சப்தம் கேட்டது. அந்த ஓசையை எழுப்பிய மாயக் கருப்பு அவரிடம் தான் மிருகங்களின் ரத்தத்தைக் குடிப்பவர் என்பதினால் தம்மை மலை மீது உள்ள நதிப் பக்கம் வைத்து விடுமாறும் கூறினார். அதனால் அந்த பிராமணரும் அந்தக் கூடையை ஜாக்கிரதையாக எடுத்துப் போய் மாயக் கருப்பை மலை மீது இருந்த நதிக்கரையில் விட்டு விட்டப் பின் மற்ற கடவுட்களை பிராமணர் அல்லாதவர்கள் கையில் தந்து விட்டார். மலை மீது மாயக் கருப்பிற்கு ஒரு வழிபட்டுத் தலம் அமைந்தது. மாயக் கருப்பு மலை மீது ஒரு ஆலயத்தில் அமர விரும்பியதினால் அங்கிருந்த ஒரு சுவற்றை இடுமலை மகாலிங்கக் கருப்பு என அழைத்து அதையே மாயக் கருப்பாக கருதி வணங்கத் துவங்கினார்கள். அவருடைய உருவத்தை அந்த மலையில் இருந்த ஒரு சுவரில் சித்திரமாக வரைந்து வைத்து இருக்க மற்ற கடவுட்களை சிறிய சுவற்றில் வரைந்து வைத்து வணங்குகிறார்கள். சின்னக் கருப்பருக்கு மட்டுமே சிலை உள்ளது.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கலரி எனும் விழாவைக் கொண்டாடுகிறார்கள். அது ஆடி மாதமாகும். அந்த மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமையில் மாயக் கறுப்பர் ஆலயத்தில் அனைவரும் வந்து கூடி அந்த ஆண்டு பண்டிகை கொண்டாடலாமா எனக் கேட்பார்கள். பல்லி இடது புறத்தில் இருந்து சப்தம் போட்டால் பண்டிகைக் கொண்டாடக் கூடாது என்பது அர்த்தம் ஆகும். ஆனால் பள்ளியின் ஒழி வலப்புறத்தில் இருந்து ஒலித்தால் அது அவருடைய சம்மதம் கிடைத்ததற்கான அறிகுறி என எடுத்துக் கொண்டு உடனடியாக விழாவை அடுத்த வெள்ளிக் கிழமையில் இருந்து செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை அன்று அந்த கிராமத்தில் உள்ள அனைவரது இல்லங்களும் சுத்தப்படுத்தப்பட்டு புதிய பானையில் பொங்கல் செய்யப்படும். அந்த கடவுட்களை பிரதிபலிக்கும் இருபத்தி ஒரு சாமியாடிகள் நதியில் எந்த இடத்தில் அவை கிடைத்தனவோ அந்த இடத்திற்கு பொங்கல் பானைகளை தலை மீது வைத்துக் கொண்டும், பூஜையில் அடிக்கும் மணியையும் எடுத்துச் செல்வார்கள். அங்கு அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டதும் சாமி ஏறியவர்களை மக்கள் வணங்குவார்கள். அதன் பின் அந்த சாமியாடிகள் மக்களுக்கு குறி கூறுவார்கள். அதன் பின் அந்த மணியையும் பானையையும் மீண்டும் ஆலயத்தில் கொண்டு போய் வைத்தப் பின் வீட்டுக்குச் சென்று விடுவார்கள். அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அன்றைய விழா முடிந்து விடும். அடுத்த வெள்ளிக் கிழமை ஆலயத்தில் உள்ள அனைத்து சிலைகளும் பெட்டியில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டு சுத்தமாக துடைக்கப்பட்டு எண்ணை பூசப்பட்டு வணங்கப்படும். அதன் பின் அவை மீண்டும் பெட்டிக்குள் வைக்கப்படும். அன்று மாலை மீண்டும் இருபத்தி ஒரு சாமியாடிகளும் வருவார்கள். சின்னக் கருப்பு சாமியாடி மட்டும் ஐந்து அடி நீளமான அரிவாள் மீது நின்று இருக்க மற்றவர்கள் இடா எனும் மலைக்கு செல்வார்கள். அங்கு பொங்கல் படைக்கப்பட்டு மாயக் கருப்பிடம் கேள்விகள் கேட்கப்படும். மாயக் கருப்பு தனக்கு பசிக்கின்றது எனக் கூறும்போது ஆடுகள் பலி தரப்பட அவற்றின் ரத்தத்தை மாயக் கருப்பு குடிப்பார். விடியற்காலை பிறந்ததும் அந்த இறைச்சியையும் பொங்கலையும் வைத்து உணவு தயாரிக்கப்பட்டு அவற்றை அனைவரும் உண்பார்கள்.
மாயக் கருப்பிடம் தன்னுடைய எதிரியை நாசம் செய்யுமாறு மக்கள் வேண்டுவது உண்டு. பிள்ளை பிறக்கவும், வியாதிகள் தீரவும் அவரை வேண்டுகிறார்கள்.