கிராம தேவதைகள்
Image may be NSFW.
Clik here to view.
படம் பற்றிய விளக்கம் : கும்பகோணத்துக்கு அருகில் உள்ள சித்தாடி எனும்
கிராமத்தில் கத்தாயி அம்மன் எனும் ஆலயம் உள்ளது. பலருக்கும் குல தெய்வ
ஆலயமான அது முருகனின் மனைவியான வள்ளி தேவியின் ஆலயம் . அந்த ஆலயத்தின் வெளிப்பிராகாரத்தில் உள்ள கிராம தேவதைகளின் சிலைகள்
மேலே உள்ளவை.
Image may be NSFW.
Clik here to view.

படம் பற்றிய விளக்கம் : கும்பகோணத்துக்கு அருகில் உள்ள சித்தாடி எனும்
கிராமத்தில் கத்தாயி அம்மன் எனும் ஆலயம் உள்ளது. பலருக்கும் குல தெய்வ
ஆலயமான அது முருகனின் மனைவியான வள்ளி தேவியின் ஆலயம் . அந்த ஆலயத்தின் வெளிப்பிராகாரத்தில் உள்ள கிராம தேவதைகளின் சிலைகள்
மேலே உள்ளவை.
முன்னுரை
கேரளாவின் சேலக்காரா எனும் ஊரை சேர்ந்த திரு P.R. ராமச்சந்தர் என்பவர் Indian Institute of Horticultural Research என்ற அலுவலகத்தில் விஞ்ஞானியாக பணியில் இருந்தப் பின்னர் 2000 மாவது ஆண்டில் ஒய்வு பெற்றுள்ளார். அவருடைய வயது 70துக்கும் அதிகம். எழுதுவது அவருடைய ஒரு பொழுதுபோக்கு.தற்போது அவர் கர்நாடகாவின் பெங்களூரில் வசித்து வருகிறார். பல ஸ்தோத்திரங்கள், கர்நாடக கீர்த்தனைகளின் அர்த்தங்கள், கேரளாவின் ஆலயங்கள், குழந்தைகளுக்கான கதைகள் மற்றும் கிராம தேவதைகள் என பல படைப்புக்களை ஆங்கிலத்தில் தந்துள்ளார்.
கிராம தேவதைகளைப் பற்றி அனைவரும் அறிந்திட வேண்டும் என்ற எனது ஆசையினால் அவற்றை நான் என்னுடைய இந்த வலை தளத்தில் வெளியிடுகிறேன் . ஆனால் அவர் எழுதி உள்ள கட்டுரைகளில் படங்கள் இல்லை என்பதினால் நான் கட்டுரைகளுடன் பிரசுரித்து உள்ள கிராம தேவதைகளின் படங்கள் அந்தந்த கட்டுரைகளுடன் சேர்ந்தவை அல்ல என்பதை தெரியப்படுத்த விரும்புகிறேன். எவை அந்த கட்டுரையுடன் சம்மந்தப்பட்டதாக இருக்குமோ அவற்றை அதில் குறிப்பிட உள்ளேன். ஆனால் கிராம தேவதைகளின் உருவங்களை அனைவரும் அறிந்திட வேண்டும் என்ற விருப்பத்தினால் ஒவ்வொரு கட்டுரையின் துவக்கத்திலும் சில கிராம தேவதைகளின் படங்களையும் வெளியிட்டு வர எண்ணி உள்ளேன்.
- சாந்திப்பிரியா