Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 10

$
0
0
10
அப்படி என்றால் பிற ஆலயங்களில் சென்று வழிபடும் பக்தர்களுடைய பாபங்கள் அகலுவதில்லையா?
 
 நான் அப்படிக் கூறவில்லை. எந்த ஒரு ஆலயத்திலும் சென்று வழிபட வேண்டியதில்லை என்பது அர்த்தம் அல்ல.  மானிடர்களாகப்  பிறந்த அனைவருக்கும் குல தெய்வம் உள்ளது என்பதும் அர்த்தம் அல்ல. பல பரம்பரைகள் குல தெய்வங்கள் இல்லாதவை. அவர்கள் எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் அல்லது எந்த ஆலயத்திலும் சென்று வழிபடலாம். அவர்களுடைய பூர்வ ஜென்ம கர்மாக்களின் தாக்கத்தை ஓரளவுக்கு அந்தந்த தெய்வங்கள் நிவர்த்தி செய்யலாம். ஆனால் அவற்றையும் அந்த தெய்வங்களினால் முழுமையாக நிவர்த்தி செய்ய இயலாது என்பதின் காரணம் அவரவர் செய்துள்ள பூர்வ ஜென்ம பாவ புண்ணியங்களுக்கேற்ப அவற்றின் பலனை அவரவர் அனுபவித்தே தீர வேண்டும் என்பது நியதி.
 
அந்த காலத்தில் எந்த ஒரு பரம்பரையிலும் முதல் ஐந்து  பரம்பரையினர்  எந்த தெய்வத்தை வழிபட்டு வந்துள்ளார்களோ அந்த தெய்வமே அந்த பரம்பரையின் குல தெய்வம் ஆகும் என்பதை ஏற்றுக் கொண்டு இருந்தார்கள். ஐந்து என்பதின் காரணம் ஐந்து விரல்களைக் கொண்டதே ஒரு முழுமையான கை ஆகும். அருள் பொழியும் அந்தக் கையின் சைகை மூலமே தெய்வங்களின் ஆசி கிடைப்பதினால் முதல் ஐந்து பரம்பரையினர் என்ற நியதி வந்திருந்தது. சாதாரணமாக எந்த ஒரு பரம்பரையினருமே 13 வம்சங்களுக்கு மேல் வம்சாவளியினரைக் கொண்டிராது என்பது ஒரு நடைமுறை உண்மையாக உள்ளது. யாருக்கு குல தெய்வம் இருக்கும், யாருக்கு குல தெய்வம் இருக்காது என்பது கீழே உள்ள அட்டவணைப் பார்த்தால் புரியும்.



ஆனால் குல தெய்வம் என ஒரு தெய்வத்தை ஏற்றுக் கொண்டுள்ள பரம்பரையினர் அவரவர் குல தெய்வங்களை உதாசீனப்படுதும்போது குல தெய்வத்தின் அனுமதி இல்லாமல் பிற தெய்வங்களினால் அந்த பரம்பரையினருக்கு  நேரும் கஷ்டங்களில் எந்த ஒரு முழுமையான நிவர்தியையும் தர இயலாது.

ஒவ்வொருவருக்கும் இரண்டு விதங்களிலான பூர்வ ஜென்ம கர்மாக்கள் அமைத்துள்ளன அவை:
  • மூதையோர் செய்திருந்த பாப புண்ணியங்களின்  விளைவினால் எழும் நன்மை தீமைகள்.
  • அவரவர் வாழ்கையில் செய்திருந்த பாவ புண்ணியங்களின் விளைவினால் ஏற்படும் நன்மை தீமைகள்.
மூதையோர் செய்திருந்த பாப புண்ணியங்களுக்கு  பின் வழி சந்ததியினர் எப்படி பொறுப்பாக முடியும்? மூதையோர் செய்திருந்த பாப புண்ணியங்களுக்கு பின் வழி சந்ததியினர்களுக்கு ஏன் தண்டனை தர வேண்டும் ?  அதற்கான காரணத்தை தத்தாத்திரேயர் தன்னை நாடி வந்த யதுகுல மன்னன் ஒருவனுக்கு கொடுத்த விளக்கத்தில் காண முடியும்.

கிருஷ்ண பரமாத்மாவின் முந்தைய காலத்திலேயே  தெய்வ வழிபாடுகள் இருந்துள்ளன என்பதற்கு  தத்தாத்திரேயர் அவதாரம் ஒரு உதாரணம்.  அவர் யோக புருஷராக வாழ்ந்திருந்து பலராமர் முதல் பலருக்கும் அருள் பாலித்து இருக்கிறார் என்பது அவர் வாழ்க்கை சரித்திரத்தைப் படித்தால் தெரியும்.  அவர் கிருஷ்ணருக்கும் முற்பட்ட காலத்தை சார்ந்தவர்.  ஒருமுறை அவர் தனது பக்தரின் வீட்டில் நடைபெற்ற வருடாந்தர திவசத்தில் ஒரு புரோகிதராக சென்று போஜனம் செய்து அந்த அந்தணரின்  முன்னோர்களின் ஆத்மா  சாந்தி அடைய அருள் புரிந்தவர் . 

அவர் அவதரித்து இருந்த  காலத்தில் யதுகுல மன்னன் ஒருவன் வாழ்ந்திருந்தான். அவன் ஆழ்ந்த ஆன்மீக ஞானம் கொண்டவன். சில காலம் ஆட்சியில் இருந்தவனுக்கு காரணம் இன்றி  மனதில் அமைதி இல்லை. அவன் குடும்பத்திலும் அமைதி இல்லை. அவன் ஆண்ட ராஜ்யத்திலும் குழப்பம். யாராவது ஒருவர் எனக்குள்ள சங்கடங்களுக்கான காரணத்தைக்  எடுத்துரைக்க மாட்டார்களா என யோகிகளை தேடி அலைந்தான். அவனை குரு தத்தாத்திரேயரை தேடி அலைந்து அவரிடம் சரணடைந்து அவன் படும் வேதனைகளுக்கான காரணத்தை தெரிந்து கொள்ளுமாறு அவனது ராஜ குருக்கள் கூற அவன் தத்தரை தேடி பல காலம் இடம் இடமாக அலைந்தான். பார்வதியின் அவதாரமான ரேணுகா தேவி என்பவளே அவனது மூத்தோர்கள் வணங்கி வந்திருந்த தெய்வம்.  அவளே லோக மாதா. ஸ்தூலம், நிராகாரம் மற்றும் ஜேஷ்ட எனும்  மூன்று சரீரங்களைக்  கொண்டவள்.  அவளை தத்தத்திரேயரை படைத்தவளுமான சக்தி தேவி. முடிவாக பெரும் சோதனைக்குப் பிறகு தத்தாத்திரேயரை கண்டுபிடித்து அவரிடம் முழுமையாக சரண் அடைந்து தனது மன அமைதிக்கு வழி கேட்டான்.


தத்தர் கூறலானார் 'யதுகுல மன்னனே, நீ யார் என்பதை   முதலில் புரிந்து கொள். உன்னுடைய  மன அமைதிக்குக் காரணம்   என்ன?  உள்ளுக்குள்ளே உள்ள அந்தராத்மாவும், அதை இயக்கும் சக்தியான எண்ணங்களையும் தவிற மற்ற அனைத்தும்  தசைகளுடன் கூடிய ஒரு  உடலே.  அந்த  தசைப் பிணமோ  மேலும் மேலும் பல உடல்களை தேடி ஓடிக் கொண்ட வண்ணம் உள்ளது.  இன்னமும் வேண்டும், இன்னமும் வேண்டும்  என  ஜடப்  பொருட்கள் மீது வைத்து  விட்ட அளவற்ற பற்று, அளவற்ற ஆசை அதன் கடமையை மறக்க வைத்து விட்டது.  இதுவே உனக்குள்ளும் உள்ளது, உன் மூதையோர்களிடமும் இருந்தது. ஒவ்வொரு வம்சத்துக்கும்  ஒவ்வொரு தெய்வக் கடமை உள்ளது. உலகப் பற்று அதைக் கூட மறக்கடித்து விடுவதினால்தான் அந்த தெய்வங்களின் சாபத்தினால் அவர்கள் பிற்கால சந்ததியினர் மகிழ்ச்சியற்ற வாழ்கையை மேற்கொள்ள வேண்டி உள்ளது.

முதியோர் பாவ புண்ணியங்கள் செய்திருந்தாலும் அவரவர் வம்சாவளியாக வழிபட்டு வந்திருந்த தெய்வங்களை வழிபடாமல் அவர்களை  அவமதிப்பது போல உதாசீனப்படுத்தினால் அந்த தெய்வங்களின் சாபத்துக்கு ஆளாகும் அவர்களின் மரணத்துக்குப் பிறகு அவர்களது சந்ததியினர் தண்டிக்கப்படுவார்கள். அதற்கு  தண்டனையாக அந்த தெய்வங்கள் தருவது என்ன தெரியுமா? அவர்களது சந்ததியினரின் வாழ்க்கையில்  முன்னோர்களின் தெய்வ அவமதிப்பிற்கான பாவச் சுமையை அது ஏற்றும்.

உன் மன அமைதிக்கு  காரணமும்  உன்னுடைய மூதையோர்களான யதுகுல மன்னர்கள் என் அன்னையான ரேணுகா தேவியை வணங்க மறுத்து  அவமதித்ததுதான். உதுகுல மன்னனே, உன்னுடைய நல்ல கர்ம வினையினால் நீ என்னை நாடி வந்துள்ளாய். நான் யார் என்பது உனக்கு தெரிய வேண்டுமா....இப்போது கூறுகிறேன் கேள்....'என்று கூறியபடி அவர் தன்னை பற்றிக் கூறத் துவங்கினார்.

அவர் காலடியில் அமர்ந்து கொண்டு அவர் கூறக் கூற அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்தவன் தன்னை மறந்தான், தன மூத்கையோர் செய்திருந்த பிழைகளை உணர்ந்தான். தனது அமைதியின்மைக்கான காரணமும் புரிந்தது.  இனி அதை தன்னால் நிவர்த்திக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது.  மனதில் மெல்ல மெல்ல அமைதி தோன்றியது.

இது எடுத்துக் காட்டுவது என்னவென்றால் ஒவ்வொரு சந்ததியினரும் அடையும்  மன வேதனை, வாழ்க்கைத் துயர் மற்றும் எண்ணற்ற சோதனை மற்றும் வேதனைகளின் பாதி காரணம்   அவர்களது முன்னோர்கள் செய்த தெய்வப் பிழையினால் வந்தவைதான்.  தம் குடும்பத்தினர் அவதிப்படும்போது எப்படி தாய் மற்றும் தந்தையினால் அந்த கொடுமையை பார்த்துக் கொண்டு இருக்க முடியும்? அதனால்தான் மரணம் அடைந்து விட்டவர்களின் ஆத்மாக்கள் தாம் செய்த தெய்வ அவமதிப்புக் குற்றத்தினால் தம் சந்ததியினர் அனுபவிக்கும் வேதனைகளைக் கண்டு, அவர்களது குடும்ப மகிழ்ச்சிக்காக தம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என  யமலோகத்தில் நரக வேதனையில் மனம்  புழுகியபடி  கிடப்பார்கள்.

அவரவர் செய்த பாவ புண்ணிய  பலன்களோடு
முதையோர்  மூலம் வந்த கர்ம வினைகளையும் 
சுமந்து  செல்பவர்கள் எண்ணற்ற 
துன்பங்களை அனுபவிக்க  நேரிடுகிறது

சோதனையிலும் வேதனையிலும் உழலும் மரணம் அடைந்து விட்ட ஆத்மாக்களின்  சந்ததியினர் வாழ்க்கையில் வெறுப்புற்று தமது முன்னோர்களுடைய ஆத்மா சாந்தி அடைந்து நல்ல கதி அடைய வேண்டும் என்ற நினைப்பை தன்னுள் வளர்த்துக் கொள்வது இல்லை, அவர்களது வேதனையில் முதியோர் நினைவு கூட அவர்கள் உள்ளத்தில் இருந்து மறையத் துவங்கும்.  அவரவர் தமது வாழ்க்கைப் போராட்டத்திலேயே இருந்து வருவார்கள். வருடாந்திர திதிகளைக் கூட எதோ ஒரு தீராத கடமை போல செய்வதினால், அந்த திதியின் பயன் கூட அந்த ஆத்மாக்களின் நற்கணக்கில் போய்  சேருவதில்லை என்பதினால் யமதேவன்  அந்த ஆத்மாக்களை நல்ல விதமாக நடத்துவதில்லை. 

இதனால் மரணம் அடைந்து மறு பிறப்பு எடுக்கும்வரை அல்லது தேவகணமாகும்வரை   அந்தரத்தில் ஆத்மாக்களாக  சுற்றி அலைந்து கொண்டிருப்பவை  தமது சந்ததியினர் மன வேதனையுடன் வாழ்வில் வசந்தம் இன்றி துடிக்கும்போது அவர்கள் படும் வேதனையை  துடைக்க தம்மால் உதவிட முடியவில்லையே, அதனால் தமக்கும் அவர்களால் உதவி கிட்டவில்லையே  என அலறித் துடிக்கும்.

 தமது சந்ததியினர் படும் வேதனையை 
துடைக்க  முடியவில்லையே  என 
மேல் உலகில் சுற்றித் திரியும்  மூதையோர் 
ஆத்மாக்கள் துடிதுடிக்கும் 

அகவே யமவதை தாங்க முடியாமல் துடிக்கும் ஆத்மாக்கள்   தாம் உயிருடன் இருந்தபோது உதாசீனப்படுத்திய தெய்வத்திடமே தமது பிழையை மன்னித்து அருளுமாறு வேண்டிக் கொள்ளும். தாம் உதாசீனப்படுத்திய அந்த தெய்வங்களை  தமது சார்ப்பில் தமது சந்ததியினர் வழிபட்டு தாம் செய்த பாபங்களுக்கு பிராயச்சித்தம் செய்ய அவர்களுக்கு  அருள் புரிய வேண்டும் என  வேண்டி நிற்கும்.

தொடர்ந்து அந்த ஆத்மாக்கள் வேண்டிக் கொண்டே இருக்கும்போது அதைக் கண்டு அந்த தெய்வங்களும்  மனம் இறங்கி அவர்களுக்கு கருணைக் காட்டும் விதத்தில் துடிதுடித்து அலையும் ஆத்மாக்களின் சந்ததியினருக்கு சில சமிக்கைகளை அனுப்பி அவர்களுக்கு நல் வழிப்பாதையை காட்டி தம்மை சரணடையுமாறு கூறும். அதைப் புரிந்து கொண்டு  அந்த  சந்ததியினர் தம் முன்னோர்கள் உதாசீனப்படுத்தி வந்திருந்த அவர்களது   வம்ச தெய்வத்தை மீண்டும் வணங்கத் துவங்கி ஆராதிக்கும்போது  அந்த வம்சத்து தெய்வமும் மனம் இறங்கி வந்து அவர்கள் சுமக்கும் முன்னோர்களின் கர்ம வினையை அவர்கள் வாழ்வில் இருந்து அகற்றும். அதன் மூலம் அந்தந்த சந்ததியினருக்கு முன்னோர்களினால் ஏற்பட்ட   பாவ பளுக்கள் குறையும்.

முன்னோர்கள் பெற்றிருந்த தெய்வ சாபங்களினாலும், அவர்களது கர்மாக்களினாலும் ஏற்படும் பாவச் சுமைகள் ஒருவர் வாழ்வில் குறைந்தாலே வாழ்க்கையில் ஏற்படும் பாதி துன்பங்களும் துயரங்களும் குறைந்து விடும். மீதி பாதி வாழ்வு  நிம்மதியில் அமைந்திருக்கும்.

அதே நேரத்தில் அந்தந்த ஆத்மாக்களின் சந்ததியினர் செய்யும் குல தெய்வ பிரார்த்தனை அவர்களது முன்னோர்களின் ஆத்மாவுக்கும் யமதேவனால் தரப்படும் வேதனைகளை குறைக்க வைக்கும்.  அந்தந்த ஆத்மாக்களின் குல தெய்வங்களின் கட்டளையை மீற முடியாத யமதேவரும் அந்த ஆத்மாக்களை அவர்களுக்குள்ள விதிப்படி  மீண்டும் மறுபிறவி எடுக்கச் செல்ல அனுமதிப்பார், அல்லது அவை தேவகணமாகி அவர்களது வம்ச தெய்வங்களின்   சேவையில் ஈடுபடச் செல்ல அனுப்பி வைப்பார்.

அதனால்தான்  மேலுலகில் திரியும் மூதையோரின் சந்ததியினர் அவர்களது வம்ச குல தெய்வங்களை அந்தந்த ஆலயங்களில் சென்று வணங்கித் துதிக்கும்போது அங்கு சுற்றித் திரியும்  முன்னோர்களது ஆத்மாக்கள் அவர்களை  சூழ்ந்து கொண்டு அவர்களுடைய தீய கர்மாவெனும் அணுக்களை கிரகித்துக் கொண்டு, தம்மிடம் உள்ள நல்ல அணுக்களை அவர்களுக்குள்  செலுத்த அந்த ஆத்மாவின் சந்ததியினர் வாழ்வில் ஆனந்தம் அடையத் துவங்குவார்கள்'.   
மூதையோர் மூலம் ஏற்பட்டிருந்த பாவ மூட்டைகளை 
குல தெய்வம் முழுமையாக  அகற்றி விடுகிறது.  அதன்  பின் 
அவரவர்  செய்திருந்த பாபா புண்ணியங்களுக்கு ஏற்பவே 
வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் நேரிடும் 

குல தெய்வத்திடம் சென்று பிரார்த்தனை செய்து கொண்டால் அத்தனை பாப அணுக்களும் ஒரேடியாக அழிந்து விடும் என்பது நிச்சயமானதா? அப்படி என்றால் குல தெய்வ ஆலயம் சென்று வழிபடுபவர்களுக்கும் தொடர்ந்து சிக்கல்கள் ஏற்படுகிறதே, அது ஏன்?

குல தெய்வ ஆராதனை செய்கையில் முன்னோர்களினால் ஏற்பட்டிருந்த பாவச் சுமைகள் முற்றிலும் அழியும். ஆனால் அதை பிற தெய்வங்களினால் செய்ய முடியாது என்பது தெய்வ நியதியாகும்.  பிற தெய்வங்களை சென்று ஆராதிக்கையில் அவரவர்  துன்பங்கள்  குறைவது  போல உணரலாம்.  மனதில் அமைதி கிடைக்கலாம். சில கர்மாக்கள் விலகலாம்.   ஆனால் அவை அனைத்துமே  தற்காலிகமான நிலையே. ஆனாலும்   மீண்டும் மூதையோர்களின் தெய்வ அவமதிப்பினால் ஏற்பட்ட  பாவச் சுமை அவர்களது  வாழ்க்கையில் அவர்களை துரத்திக் கொண்டே இருக்கும். முன்னோர்களினால் ஏற்பட்டிருந்த பாவச் சுமைகளை குலதெய்வ வழிபாட்டினால் மட்டுமே அகற்ற முடியும்.  அதே நேரத்தில் குல தெய்வ ஆராதனை செய்தாலும் அவரவர் செய்திருந்த பூர்வ ஜென்ம கர்மாக்களின் பலனை இந்த ஜென்மாக்களில் அவரவர்  அனுபவித்தே ஆக வேண்டும்.

அவரவர் செய்துள்ள பாவ புண்ணியங்களுக்கேற்ப நேரிடும் துன்பங்களைக் குறைத்து குடும்ப அமைதி நிலவுவதற்கு குல தெய்வத்திடம் சென்று முறையிடும்போது அவை அந்த கர்மாக்களின் விளைவாக ஏற்படும் துன்பங்களை குறைக்கும், அவற்றை எளிதாக ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை தரும். அந்த கர்மாவின் விளைவினால் உடல் நலம் பாதிக்கப்பட்டால், உடல் ரோகமுற்றால் அவற்றின் அவதி காலத்தை தன் சக்தியைக் கொண்டு குறைத்திடும். அதற்கான விதி முறைகள் என்னென்ன, அவை எப்படி ஏற்படுகின்றன என்பதெல்லாம் புரிந்து கொள்வது மிகக் கடினம் என்பதினால் அதன் விளக்கத்தை   இதோடு முடித்துக் கொள்கிறேன். 
.............தொடரும்

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>