Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Guru Charithram - 60

$
0
0
 
அத்தியாயம் - 51

சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ''நமத்ஹரகா, தன்னுடைய வாழ்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்து விட்ட ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்ரீசைலத்துக்கு  கிளம்பிச் சென்றபோது அவர் தங்களை தவிக்க விட்டு செல்லக் கூடாது என்றும், அப்படி அவர் சென்று விட்டால் தாம் அனைவருமே தாய் தந்தை அற்ற குழந்தைகளைப் போல அநாதைகளாகி விடுவோமா   என்று கதறிக் கொண்டு அவர் போவதை தடுத்தார்கள். ஆனால் அவரை அங்கிருந்து செல்லக் கூடாது என்று நிர்பந்தம் செய்தவர்களிடம் கூறினார் 'பக்தர்களே, நீங்கள் யாரும் துக்கப்படத் தேவை இல்லை. நான் இங்கிருந்து ஒரேடியாக சென்று விடப் போகிறேன் என்று நான் எப்போது கூறினேன்? நான் இங்குதான் தங்கி இருப்பேன், ஆனால் உங்கள் கண்களுக்கு புலப்படாமல் இருப்பேன் என்றல்லவா சொன்னேன். என்னுடைய ரூபமாக என்னுடைய பாதுகைகள் இங்கு  இருக்கும். நான் தினமும் அதிகாலை அம்ரஜா நதிக்கு சென்று அங்கு குளித்தப் பின் கான்பூரில் உள்ள என்னுடைய மடத்துக்கு  வந்து நீங்கள் அளிக்கும் பிட்ஷைகளை ஏற்றுக் கொள்வேன். அதன் பின் அந்த நெல்லி மரத்தடியில் வந்து அமர்ந்து கொள்வேன். அங்கு வந்து என்னிடம் நீங்கள் கூறும் உங்களது குறைகளை விலக்கிக்  கொண்டுதான் இருப்பேன்.  நான் பகலில் பல வீடுகளுக்கும் பல உருவங்களில் சென்று பிட்ஷையைப் பெற்றுக் கொள்வேன். தினமும்  இது நடக்கும்.  ஆனால் நான் எந்த ரூபத்தில் வந்துள்ளேன் என்பதை அனைவராலும் புரிந்து கொள்ள முடியாது என்றாலும் என்னுடைய உண்மையான பக்தர்களின் உள்ளுணர்வு நான் வந்துள்ளதை அவர்களுக்கு மனபூர்வமாக காட்டும்.

எவர் ஒருவர் இங்கு வந்து சங்கம ஷேத்திரத்தில் குளித்து விட்டு கருநெல்லி மரத்தை மும்முறை பிரதர்ஷணம் செய்தப் பின் என்னுடைய பாதுகைகளை வணங்கித் துதிப்பார்களோ அவர்கள் கேட்டது கிடைக்கும், வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும். சிந்தாமணி கணேஷரை வணங்குபவர்களுக்கு அவர்கள் சங்கடங்கள் விலகும். அபிஷேக தீர்த்தத்தில் குளிப்பவர்களுக்கு என்னுடைய அருள் கிட்டும். என்னுடைய பாதுகைகளை தினம் மூன்று வேளை  இங்கு வந்து வணங்குபவர்களை  நான் நிச்சயமாக ஆசிர்வதிப்பேன். ஆகவே கவலைப்படாதீர்கள். நான் இங்குதான் என்றும் இருப்பேன்'.

இப்படியாகக் கூறியவர் ஸ்ரீசைலத்துக்கு கிளம்பிச் சென்றார். அவரை தொடர்ந்து சென்ற கிராமத்தினரை சற்று தூரம் சென்றதும் திரும்பிப் பார்த்த ஸ்வாமிகள் அவர்கள ஆஸ்ரமத்துக்குச் சென்று தன்னை தரிசிக்குமாறு கூறி திருப்பி அனுப்பினார். அவர்களும்   திரும்பி வந்து ஆசிரமத்தில் நுழைந்த பொழுது ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் அங்கு ஆசனத்தில் அமர்ந்து இருப்பது தெரிந்தது.  ஆனால் அடுத்த கணம் அந்த உருவமும் மறைந்து போனது.  

ஸ்வாமிகள் தன்னுடன் நான்கு சிஷ்யர்களை மட்டும் ஸ்ரீ சைலத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்று பாதாளகங்காவை அடைந்ததும் அவர்களிடம் தான் அந்தக் கரையில் உள்ள மல்லிகார்ஜுனத்துக்கு செல்ல உள்ளதினால் தான் நதியில் செல்ல வாழை இலையினால் ஆன ஒரு படகை செய்யும்படிக் கூறினார்.  அதன்படி அந்த நால்வரும் அவருக்கு வாழை இல்லை மற்றும் மலர்களினாலும் ஆன படகை  தயாரித்துக் கொடுத்தப் பின் அதில் ஏறிக்  கொண்ட ஸ்வாமிகள் அவர்களிடம் இனி அவரவர் அவரவர் வீடுகளுக்கு சென்று விடலாம் எனவும், தான் மற்றவர்களின் கண்களுக்கு புலப்படாமல் கனக்பூரில்  தங்கி இருந்து கொண்டு அருள் பாலிப்பேன் எனவும் கூறினார்.

ஆனால் அவருடைய சிஷ்யர்கள் அவரை அங்கேயே  விட்டு விட்டுச் செல்ல விரும்பவில்லை. அவர் திரும்பி வரும்வரை நதிக் கரையில் காத்து இருக்கப் போவதாகக் கூற அதற்கு அவர் அவர்கள் அனைவரையும் அங்கு நதிக்கரையில் காத்திருக்கக் கூடாது என்றும் உண்மையில் பகுதான்ய வருடத்தில் மக மாதத்தில் வெள்ளிக் கிழமை அன்று ஜுபிடர் கன்யா ராசியில் புகுந்துள்ள அந்த வேளையில் தான் தன்னுடைய இருப்பிடத்திற்கு செல்வதாகவும் தான் சென்ற பின் அவர்களுக்கு தான் தன்னுடைய இருப்பிடத்துக்கு சென்று விட்டதின் அடையாளமாக  அவர்களுக்குப் பிரசாதம் அனுப்புவதாகவும், அதைப் பார்த்தப் பின் தத்தம் வீடுகளுக்கு அவர்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கூறினார். அதோடு தன்னுடைய வாழ்கை சரித்திரத்தை எவர் ஒருவர் படிப்பாரோ அவர்களது வேண்டுகோள்கள்  நிச்சயமாக நிறைவேறும் என்றும் உறுதி கூறினார்.

அவர் சென்ற பல மணி நேரத்துக்குப் பிறகு மனதில் பாரத்தையும் இதயத்தில் வருத்தத்தையும் சுமந்தவாறு அந்த நதிக்கரையில் நின்று கொண்டு இருந்த சிஷ்யர்களிடம் அந்த நதியில் நீந்திக் கொண்டு கரைக்கு வந்த சிலர் தாங்கள் அவர்களுடைய குருவை நடு நதியில் தாம் சந்தித்ததாகவும் அதை நதிக்கரையில் நின்று கொண்டிருந்த அவருடைய சிஷ்யர்களான நான்கு பேர்களிடமும் கூறி விடுமாறு அவர் சொன்னதாக  கூறினர்.

அவர்கள் கூறி முடிக்க மறைந்து போன ஸ்வாமிகள் ஏறிச் சென்ற அதே படகும்  பழங்களையும், பூக்களையும் ஏற்றிக் கொண்டு கரைக்கு வந்து சேர அவர்கள் அனைவரும் அதை  ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள்  அனுப்பி வைத்துள்ள பிரசாதமாக ஏற்றுக் கொண்டார்கள்''. இப்படியாக ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளின் அற்புதக் கதையை நமத்ஹரகாவுக்கு தான் கூறி முடித்து விட்டதாக சித்த முனிவர் கூறியதும் நமத்ஹரகா ஆவலோடு சித்த முனிவரிடம் கேட்டார் 'குருவே ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் மறைந்து போகும்போது அவருடன் இருந்த அந்த நான்குபேர்கள் யார், யார் என அறிந்து கொள்ளலாமா'என்று கேட்டதும் சித்த முனிவர் கூறினார் அந்த நால்வரும் எவர்  என்றால் உன்னுடைய சந்ததியினரான சாயம்தேவா, நந்திவர்மா, நரஹரபட்ட காவீஷ்வரா மற்றும் நான்காவதாக நான்தான்'என்றார் (இப்படியாக அத்தியாயம்-51 முடிவடைந்தது​) 
..........தொடரும்

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>