Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Mayil Ravanan - 18

$
0
0
அவள் கூறியதைக் கேட்டுக் கொண்ட அனுமான் 'இந்த செய்தி மட்டுமே போதும் அம்மணி...இது எனக்கு உதவியா இருக்கும். அந்த மலையும் எங்குள்ளது என்றாவது தெரியுமா?' என்று கேட்க அவளும் அது உள்ள திசையைக் கூறி அதன் மீது ஒரு வெள்ளி மண்டபம் இருக்கும். அதுவே அந்த மலை என்பதின் அடயாளம்' என்றாள். அனுமானும் அதைக் கேட்டு தாமதிக்காமல் உடனடியாக யுத்தகளத்துக்குச் சென்றார். அங்கு மயில் ராவணன் அனுமானை தேடிக் கொண்டு இருந்தான். அவரைக் கண்டதும் அவன் கூவினான் 'ஹே வானரமே, உன்னைத்தான் நான் இத்தனை நேரமாகவும் தேடிக் கொண்டிருக்கிறேன். நீ எங்கே சென்று ஒளிந்து கொண்டாய் ? என் மாயத்தைப் பார்த்து பயந்து ஓடி விட்டாயா? வா....உன்னை எமலோகத்துக்கு அனுப்ப ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன். சீக்கிரம் வா...' என சூளுரைத்தான்.

அவன் உயிர் நிலை எங்குள்ளது என்பதை அறிந்து கொண்டு விட்ட அனுமாரோ முன்னைவிட அதிக உற்சாகத்தோடு யுத்தம் செய்யக் கிளம்பினார். 'வாருமையா ராட்சசப் பதரே, உம்மை வதைக்கவே நானிங்கு வந்துள்ளேன். யுத்தம் செய்வீர்' எனக் கொக்கரித்தபடி யுத்தம் செய்து கொண்டே மெல்ல மெல்ல மயில் ராவணன் உயிர் நிலை இருந்த மலை அருகில் வரை ஓடி ஓடி சென்று யுத்தம் செய்தார். மயில் ராவணனும் தனத்கு உயிர் நிலை உள்ள மலையை மறந்தே இருந்ததால் அனுமானை துரத்திக் கொண்டு ஓடினான். அதுதானே அனுமானும் எதிர்பார்த்ததும். அனுமானின் மன நிலையை அறியாத மயில் ராவணன் அவரது கண்களையும் கவனத்தையும் பலவாறு திசை திருப்பும் வண்ணம் மந்திர மற்றும் மாயாஜாலங்களை செய்தது அவரை தடுமாற்றினான். அவற்றை கண்ட அனுமார் உள்ளுக்குளே நிஜமாகவே தடுமாறினார். ஒருவிதத்தில் பயமும் கொண்டார். 'இதென்னெடா, இந்த மாயாஜாலக்கரன் என்னென்னமோ செய்கிறான்' என நினைத்துக் கொண்டே அவனிடம் கூறலானார்.

'பாதகனே, இதோ பார் நீங்களெல்லாம் செய்யும் பாவச் செயல்களை. உன்னுடைய தாயாதி தசகண்ட ராவணன் ராமனின் மனைவியை களவாடிக் கொண்டு வந்து இலங்கையில் சிறை வைத்துள்ளான். அவளை மீட்க வந்த ராமனை நீ சிறை பிடித்து வைத்துள்ளாய். உனக்கு துரோகம் செய்தவனை மட்டுமே நீ தண்டிக்கலாமே தவிர உனக்கு சம்மந்தமில்லாத விஷயத்தில் நீ ஏன் தலையிடுகிறாய்? ராமன் உனக்கென்ன பாவம் செய்தார்? தர்ம சாஸ்திரம், நீதி நெறி இவற்றை அறிந்துள்ளவன் என மார் தட்டிக் கொள்ளும் நீ கோழைப் போல மாயாஜாலத்தைக் காட்டி போரிடுவது என்ன நியாயம்? நீ வீரனாக இருந்தால், தைரியசாலியாக இருந்தால், பலசாலி என நினைத்தால், வா நேருக்கு நேர் வந்து மோது. மூடனே, இதை மட்டும் அவசியம் நியாபகத்தில் கொள்ளு. இன்னும் சிறிது நேர அவகாசம் தருகிறேன், நியாயத்தை உணர்ந்து ராம லஷ்மணர்களை எம்மிடம் ஒப்படைத்து விடு. இல்லையேல் உன்மீது நின்று கொண்டு நான் உன் உயிர் நிலைகளை கசக்கிக் கொள்ள உள்ளேன் என்பதை மறவாதே' எனக் கூற மயில் ராவணன் சற்றே கலக்கமுற்றான்.

அனுமானோ ராம லஷ்மணர்களை பெட்டியோட எங்கோ கொண்டு சென்று மறைத்தும் வைத்து விட்டார். இருந்தாலும் மயில் ராவணனிடம் ஏன் அவர்களை விடுவிக்குமாறு கொரோணும்? அதுக்குமொரு காரணம் உண்டு. பிரும்மாவிடம் இருந்து வரம் பெற்றுள்ள மயில் ராவணன் நிறைய புண்ணியமும் காளி பூஜையும் செய்துள்ளான் என்பதனால் அவனுக்கு சொர்கத்துக்கு செல்ல வாய்ப்பும் உள்ளது. இப்போ தன் தப்பையும் உணர்ந்து வைகுண்டரின் அவதாரமான ராம லஷ்மணர்களையும் விடுதலை செய்து இன்னொரு நல்ல காரியத்தை செய்தால் அவன் செய்த அனைத்து பாபங்களும் அழிந்து போக ஒரு வாய்ப்பும் இருக்கும். வைகுண்டமும் அவனுக்குக் கிடைக்கும். அதுக்காகவே அவர் அப்படியொரு வாய்ப்பையும் அவனுக்குக் கொடுத்தார்.

அதற்கிடையில் மயில் ராவணன் யோசனை செய்தான் 'இதென்னடா சாமி, நம் ரகசியம் யாருக்கும் தெரியாதேன்கிறபோது இந்த வானரத்துக்கு எப்படி தெரிந்தது? யார் சொல்லி இருப்பா? ஒருவேளை நான் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்டு விட்ட அந்தப் பாதகி தூரதண்டி தண்ணீர் எடுக்கப் போகும்போது இவருக்கு கூறி விட்டாளோ ? இனி தாமதித்தால் இந்த வானரம் நம்மைக் கொன்று விடும்' என யோசனை செய்தவன் இன்னொன்றையும் அப்போதுதான் கவனித்தான். 'அடடா யுத்தம் செய்து கொண்டே இந்த வானரம் ஓடிக் கொண்டே இருக்க அதனை துரத்திக் கொண்டு என் உயிர் நிலை மறைந்துள்ள இந்த மலைக்கருகே அல்லவா அந்த வானரம் என்னை அழைத்து வந்துவிட்டது. இங்கிருந்து முதலில் என் அரண்மனைப் பகுதிக்கே செல்வோம்' என யோசனை செய்து கொண்டிருந்தபோதே அவன் மனதில் உள்ளதை உணர்ந்து கொண்ட அனுமான் ஆகாயத்துக்குச் பறந்து சென்று அங்கிருந்து மயில்ராவணன் எதிர்பாராத நேரத்திலே அவர் மீது தொப்பென குதித்து அவனை பூமியோடு அழுத்தினார். ஆனால் அதி மாயாவியான மயில் ராவணனோ இனியும் தாமதிக்கலாகாது என மனதில் முடிவு செய்து அங்கிருந்து மாயமாகிப் போய் முதலில் ராம லஷ்மணர்களை கொல்லும் காரியத்தை செய்யலானான். 'முடிவா என்னிடமுள்ள கடைசி அஸ்த்ரமான வீராண யாகம் செய்து அதில் வெளி வரும் பூதத்தையும் ஏவினால் அது அனுமானையும் கொன்று போட்டுடும். ராம லஷ்மணர்கள் எங்கிருந்தாலும் அவர்களும் அப்படியே மாண்டு போவார்கள் என எண்ணினான்.
.........தொடரும் 

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>