Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Thirupathi Sree Venkateswarar -17

$
0
0
சாந்திப்பிரியா 


பத்மாவதி மீது காதல் கொண்டார்  ஸ்ரீனிவாசர் 

 ஆடிப்பாடிக் கொண்டு வந்தவளைக் கண்டதுமே ஸ்ரீனிவாசருக்கு அவள் மீது தன்னை அறியாமலேயே காதல் பிறந்தது. எத்தனைப் பேரழகியாக இருக்கிறாள், இவள் எனக்கு மனைவியாகக் கிடைத்தால் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும் என்று எண்ணினார். அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவரை பத்மாவதியும் நோக்கினாள். யாரது அரண்மனைத் தோட்டத்தில் வந்து அமர்ந்து உள்ளார் என்பதைப் பார்ப்பதற்காக தனது தோழிகளுடன் அவர் அருகில் சென்றதும் அவர் வேற்று மனிதர் என்பது புரிந்தது.   அவள் அவரிடம் கேட்டாள் 'ஐயா, நீங்கள் யார்? இங்கு எப்படி வந்தீர்கள்? இது அரண்மனை தோட்டம் ஆயிற்றே' என்று கேட்க அவர் எழுந்து நின்று கொண்டு தான் சேஷாசலம் என்ற ஊரில் இருந்து வருவதாகவும் ஒரு மதம் பிடித்த யானையை துரத்திக் கொண்டு தனது குதிரையில் வந்து கொண்டு இருந்தபோது, அந்த யானை அந்த இடத்தில் வந்தப் பின் எங்கோ மறைந்து ஓடி விட்டது. வேண்டும் என்றே தான் அங்கு வரவில்லை. ஆனால் வழி தவறி வந்து விட்டாலும், தாகமாக இருந்ததினால் அந்த தாடகத்தில் இருந்து தண்ணீரைக் குடித்தப் பின் இளைப்பாறிக் கொண்டு இருந்ததாகவும், அப்போதுதான் பேரழகு மிக்க அவளைக் கண்டதாகவும் , அவள் யார் என்றும்  கேட்டார்.


 ஆடிக்கொண்டும் பாடிக் கொண்டு வந்த பெண்களை 
வேடன் உருவில் இருந்த விஷ்ணு பார்த்தார் 

அதைக் கேட்ட அவள் கூறினாள் ' ஐயா, தவறாக வந்ததுதான் வந்து விட்டீர்கள். ஆனால் வந்ததும் இல்லாமல் என் அழகைக் குறித்து விளக்குவது நியாயமல்ல. ஒரு பெண்ணைப் பார்த்து முதல் எடுப்பிலேயே அவள் அழகை விமர்சிப்பதா?  நான் யார் என்பதை அறியாமல் இப்படிக் கேட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன். என் தந்தை இந்த நாட்டு மன்னனான ஆகாசராஜன் என்பவர். நான் அவருடையப் பெண்ணான பத்மாவதி ....ஆகவே உடனே இங்கிருந்து கிளம்பி ஓடி விடுங்கள்' என்றாள் . 
ஆனால் அவரோ விடாக் கொண்டன், கொடாக் கண்டன் என்பதினால் கேட்டார், 'அழகு வதனியே, உன்னைக் கண்டதுமே என்னை அறியாமல் உன் மீது மோகம் வந்து விட்டது. நான் என்ன செய்வேன்? தவறாக எண்ணாதே. நான் வேடன் ஆனாலும் உன்னை மணந்து கொண்டு உன்னை தக்க பாதுகாப்போடு வைத்திருப்பேன். என்னை மணக்க நீ சம்மதிப்பாயா?' என்று  எடுத்த எடுப்பிலேயே தன் மனதில் இருந்த எண்ணத்தை   கூறி விட்டார்.
அதைக் கேட்ட பத்மாவதி நாகமாக சீறினாள்  'அற்பப் பதரே....நீ என்ன பைத்தியமா?. ...என்ன ஆணவம் இருந்தால் வேடனான நீ  ராஜகுமாரியான என்னை திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்பாய். உன்னைப் போன்றவர்களுக்கு பாபம் பரிதாபப்படுவது தவறு. இங்கிருந்து ஓடுகிறாயா, இல்லை சேவகர்களை அழைத்துத் துரத்தட்டுமா  என?' எனக் கோபமாகக் கேட்டு விட்டு சேவகர்களை கூவி அழைத்தாள்.
அவர்கள் வருவதற்கு முன்னரே ' அழகிய பெண்ணே, தயவு செய்து  என் காதலை நிராகரித்துவிடாதே..... நான் உன்னை நெஞ்சார நேசிக்கிறேன். என்னை தயவு செய்து மணந்து கொண்டு என் காதல் ஏகத்தை நீக்கு' என்று மன்றாடத் துவங்க, அவர் மீது தோழிகள் கற்களை வீசி  அடிக்கத் துவங்கினார்கள். அப்படி கற்களை வீசியபோது அவர் வெண் குதிரை மீது தகாத இடத்தில் பெரிய பெரிய கற்கள் வீழ்ந்ததினால் அந்த குதிரையும் அங்கேயே மரணம் அடைந்து விழுந்தது.   அதற்குள் அங்கு ஓடி வந்த காவலாளிகள் அவரை அடித்து உதைத்து அனுப்பினார்கள். அவர்கள் அடித்ததில் உடலெல்லாம் படுகாயமுற்று ரத்தம் வழிந்த உடலுடன் அவர் மெல்ல தள்ளாடிக் கொண்டு அரண்மனை தோட்டத்தை விட்டு வெளியேறினார்.

 உடம்பெல்லாம் ரத்தம் வழிய வந்த தனது மகனை பார்த்து பதறியபடி 
ஓடி வந்து அவரை உள்ளே அழைத்துச் சென்றாள்  வகுளாதேவி

உடம்பெல்லாம் ரத்தம் வழிய வந்த தனது மகனை ஓடி வந்து அணைத்துக்  கொண்டு பதறியபடி அவரை உள்ளே அழைத்துச் சென்றாள்  வகுளாதேவி. ' என் மைந்தனே...உனக்கு என்ன ஆயிற்று? உடலெல்லாம் அடிபட்டு ரத்தக் காயமாகி உள்ளது....என்ன ஆயிற்று மகனே?...என்ன ஆயிற்று?..' .என பதறிக் கேட்டாள். அதைக் கேட்ட ஸ்ரீனிவாசர்  நடந்த அனைத்தையும் அவளிடம் கூறினார்.
அவர் உடல் காயங்களுக்கு  மருந்துகளை போட்டவாறே, அவர் கூறியதைக் கேட்டுக் கொண்டு இருந்த வகுளாதேவி கூறினாள் ' மகனே உன் மனது எனக்குப் புரிகிறது. ஆனால் நாம் எங்கே, அந்தப் பெண் எங்கே? அவள் ஒரு ராஜகுமாரி. நாமோ ஏழை வேடுவர்கள். ஆகவே எட்டாத கனிக்கு ஆசைப்பட்டு இப்படி உடலை புண்படுத்திக் கொண்டு வருவது முறையா? தயவு செய்து நான் கூறுவதைக் கேள். அவளை மறந்து விடு. உனக்கு நமது தகுதிக்கு ஏற்றப்  பெண்ணை நானே திருமணம் செய்து வைக்கிறேன்' என்று பலவாறாக அவருக்கு அறிவுரை செய்தாள். 
அப்போது மீண்டும் அவருக்கு தனது உண்மை அவதாரம் மனதில் வந்தது.  நாடகத்துக்கு ஏற்பவே அவருடைய அவதார நினைவு அவ்வப்போது  அவருக்கு வந்து கொண்டு அவரை வழி நடத்திச் செல்லும் என்பது விதி.  ஆகவீதான் இந்த தருமனத்திலும் அவர் நினைவு அவருக்கு வந்தது.  இனியும் தன் அவதாரத்தை அவள் நினைவில் இருந்து அதிக நாள் மறைத்து வைத்திருக்கலாகாது, அதை வெளிப்படுத்தும் தருணம் வந்து விட்டாலும் அதே சமயத்தில் இன்னும் சில நாட்கள் அது அவர்கள் இடையே ரகஸ்யமாகவே  வைத்திருக்கப்பட வேண்டும்  என்பதையும் அவர் உணர்ந்தார்.  ஏற்கனவே அவளிடம் வந்து சேர்ந்தபோது தான் யார் என்பதையும் அவர்களுடைய பூர்வ ஜென்மக் கதையையும் அவள் நினைவில் கொண்டு வந்தப் பின், அவற்றை அவள் நினைவில் இருந்து மறக்கடித்து வைத்து இருந்தார். ஆனால்  இப்போது அதை மீண்டும் வெளிப்படுத்தும் நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்தார். 
.................தொடரும்

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>