கிராம தேவதைகள் - 26
![]()
கறுப்பரின் ஒரு உருவம்.
ஒரு கிராமத்தில் உள்ள ஒரு சிலை
அரண்மனை சந்தனக் கருப்பு
[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]
திண்டுக்கல் மாவட்டத்தில் நாதம் என்ற ஊரில் உள்ளது இந்த ஆலயம். அந்த இடத்தை லிங்கம்மா நாயக்கர் என்பவர் ஆண்டு வந்தார். அவர் அடிக்கடி பல இடங்களுக்கும் சென்று அங்குள்ள நல்ல திட்டங்களைப் பார்த்து விட்டு வந்து தம்முடைய ராஜ்யத்திலும் அவற்றை செய்வார். அப்போது திருமயம் என்ற இடத்தை அழகன் நம்பி ராஜா என்பவர் ஆண்டு வந்தார். அவர் கர்வம் பிடித்தவர். அவர் ஆண்டு வந்திருந்த நாட்டில் அவரைத் தவிர வேறு எவரும் தலைபாகை அணியக் கூடாது, ரதத்தில் ஏறிச் செல்லக் கூடாது என்ற சட்டம் இருந்தது. அவர் நாட்டுக்கு விஜயம் செய்த லிங்கம்மா நாயகரை தலைப்பாகையை கயற்றுமாறும், தேரை விட்டு கீழே இறங்கிச் செல்லுமாறும் கூற அவர் அதை செய்ய மறுத்தார். மன்னனிடம் அவரை அழைத்துச் சென்றதும் இருவருக்கும் இடையே யார் சிறந்த மன்னன் என்ற வாக்குவாதம் நடந்தது. . ஆகவே நம்ம்பி ராஜா தான் ஒரு போட்டியை வைப்பதாகவும் அதில் லிங்கமா நாயக்கர் வெற்றி பெற்று விட்டால் தனது மகளான முத்து திருவை நாச்சியாரை அவருக்கு மணம் முடித்து தந்து அதனுடன் பல கிராமங்களையும் அவருக்கு தருவதாகக் கூறினார். அந்த சவாலை லிங்கமா நாயகர் ஏற்றுக் கொண்டார். போட்டிக்கு வருவதற்கு முன் தயார் செய்து கொள்ள அவருக்கு சில மாத காலம் அவகாசம் தந்தான்.
தன்னுடைய நாட்டுக்கு திரும்பிய லிங்கமா நாயகர் தனது அரண்மனை ஜோசியரான மன்னாடி பரம்பு நாயரிடம் அது பற்றி விவாதித்தான். அதற்கு முன்னால் அவருடைய அறிவின் திறமையை சோதனை செய்ய ஒரு தந்திரம் செய்தான். ஒரு அறையில் கர்பமுற்ற நாயை கட்டி வைத்து அதன் காலில் ஒரு கயிற்றை கட்டி அந்த கயிற்றை கதவுக்கு வெளியில் நின்ற ஜோதிடரிடம் தந்து அந்தக் கயிற்ருடன் கட்டப்பட்டு உள்ள கர்பிணி எத்தனை குழந்தைகளை பெற்று எடுப்பாள் என்றும், அவை ஆணா அல்லது பெண்ணாக இருக்குமா என்றும் கேட்க, அந்த ஜோதிடரும் அந்த கர்பிணிக்கு மொத்தம் நான்கு நாய்க்குட்டிகள் பிறக்கும் என்றும் அவற்றில் இரண்டு ஆணாக பிறக்கும் எனவும், அவற்றில் இரண்டு வெள்ளையாகவும், மற்றது கருப்பாகவும் இருக்கும் என்றார். அவர் கூறியது போலவே நடந்தது. ஆகவே நம்பி ராஜாவுடன் நடக்க உள்ள போட்டியில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என அவரிடம் கேட்க அவரோ கொட்டாரக்கா எனும் இடத்தில் நம்பூத்திரி குடும்பத்தை சேர்ந்த ஒருவர் வண்ணானாக உள்ளார் என்றும், அவருடைய பெயர் மந்தார பாலன் என்றும் அவரே அதற்கு உதவ முடியும் என்றும் கூற லிங்கம்மா நாயக்கரும் அவரை அழைத்து வருமாறு ஒருவரை அனுப்பினார்.
மன்னனின் அழைப்பை ஏற்று வந்த மந்தார பாலன் தான் அவருக்கு உதவினால் தனக்கு மன்னன் என்னக் கொடுப்பார் என்று கேட்க மன்னன் அவனையே அறுபத்து நான்கு கிராமங்களின் தலைவராக நியமிப்பதாகக் கூறினார். ஆகவே அதை ஏற்றுக் கொண்ட மந்தார பாலன் அவரை ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று அங்கு பூமியைத் தோண்டி அதில் உள்ள மந்திரக்கோலையும், மந்திரப் பானையும் வெளியில் எடுக்கச் சொல்லி அவற்றை தன்னுடன் எடுத்துக் கொண்டு செல்லுமாறு கூறினான்.
அதை எடுத்துக் கொண்டப் பின் போட்டிக்கு அவர்கள் சென்றனர். போட்டிக்கு வந்த லிங்கம்மா நாயக்கரிடம் நம்பி ராஜா காய்க்காத ஒரு வாழை மரம், திருமணம் செய்து கொள்ள விரும்பாத பெண், எண்ணையை எடுக்க முடியாத கருவி போன்றவற்றை கல்லாக மாற்றி அவற்றை முதலில் அவை என்னவாக இருந்ததோ அது போலவே மீண்டும் அவற்றை ஆக்குமாறு கூறினார்.
லிங்கம்மா நாயக்கரோ தன்னிடம் இருந்த மந்திர பானையில் இருந்த நீரை அவற்றின் மீது தெளித்து மந்திரக் கோலினால் அவற்றின் மீது சுற்ற வாழை மரம், பெண் என அனைத்தும் மீண்டும் பழைய உருவைப் பெற்று விட்டன. ஆகவே தான் கூறி இருந்தபடியே நம்பி ராஜா தனது மகளை அவருக்கு திருமணம் செய்து வைத்தார். நிறைய வரதட்ஷனை மற்றும் பல கிராமங்களையும் அவருக்கு கொடுத்து அனுப்பினார்.
லிங்கம்மா நாயக்கரோ தன்னிடம் இருந்த மந்திர பானையில் இருந்த நீரை அவற்றின் மீது தெளித்து மந்திரக் கோலினால் அவற்றின் மீது சுற்ற வாழை மரம், பெண் என அனைத்தும் மீண்டும் பழைய உருவைப் பெற்று விட்டன. ஆகவே தான் கூறி இருந்தபடியே நம்பி ராஜா தனது மகளை அவருக்கு திருமணம் செய்து வைத்தார். நிறைய வரதட்ஷனை மற்றும் பல கிராமங்களையும் அவருக்கு கொடுத்து அனுப்பினார்.
அது முதல் மந்தார பாலனை அனைவரும் கடவுளைப் போல கருதினார்கள். அவர் மரணம் அடைந்த பின், அவர் வாழ்ந்து வந்திருந்த அரண்மனைக்கு வெளியில் அவருக்காக ஒரு ஆலயம் அமைத்தனர். அந்த ஆலயத்தில் அவருக்கு சிலை வைத்து வணங்கி அரண்மனைக் கருப்பு எனப் பெயரிட்டனர். அவர் சிலையை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதிய வண்ணத்தினால் அலங்கரிக்கின்றனர். அவர் ராஜ்ஜியம் செய்து வந்திருந்த அனைத்து கிராமங்களில் இருந்தும் மண் கொண்டு வரப்பட்டு அவருடைய புதிய சிலை செய்யப்பட்டு பழைய சிலைக்கு பதிலாக புதிய சிலை வைக்கப்படுகின்றது. அது மட்டுமே அங்கு நடைபெறும் விழாவாகும்.
அவருடைய புதிய சிலையை வைக்கும் நாளன்று பலி தரப்பட்ட கோழியின் ரத்தத்தை பொங்கலுடன் கலந்து ஒரு சாமியாடியிடம் தருவார்கள். அதை அவர் வெகு தூரம் எடுத்துச் சென்று மண்ணில் புதைப்பார். அதன் பின் சிறிது நேரத்துக்குப் பின் அவர் மீண்டும் அங்கு செல்லும்போது பொங்கல் பூமிக்கு மேலே இருக்குமாம். அதை எடுத்து உருண்டையாகப் பிடித்து அதை அவர் ஆகாயத்தில் வீச அரண்மனை சந்தனக் கருப்பு ஆகாயத்திலேயே அதை பிடித்து உண்பாராம். அப்படி ஆகாயத்தில் வீசப்படும் உருண்டைகள் கீழே விழாதாம்.
அவர் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வாராம். அவருக்கு சிலர் பூட்டு மற்றும் சங்கிலிகளை காணிக்கையாக தருகின்றனர்.
-------------------------
பின் குறிப்பு:
சில ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 2009 ஆம் ஆண்டு நத்தத்தில் சந்தன கருப்பு ஸ்வாமியின் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. அந்த கும்பாபிஷேகத்தில் யாகசாலை அமைத்து பல்வேறு ஊர்களில் இருந்த நதிகளில் இருந்து - ராமேஸ்வரம், காசி கங்கை துங்கபத்திரை போன்றவை- புனித நீர் எடுத்து வரப்பட்டு கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்திற்கு முன்பாக 108 சங்குகளைக் கொண்டு சங்காபிஷேகம் நடந்தது- சாந்திப்பிரியா
-------------------------
பின் குறிப்பு:
சில ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 2009 ஆம் ஆண்டு நத்தத்தில் சந்தன கருப்பு ஸ்வாமியின் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. அந்த கும்பாபிஷேகத்தில் யாகசாலை அமைத்து பல்வேறு ஊர்களில் இருந்த நதிகளில் இருந்து - ராமேஸ்வரம், காசி கங்கை துங்கபத்திரை போன்றவை- புனித நீர் எடுத்து வரப்பட்டு கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்திற்கு முன்பாக 108 சங்குகளைக் கொண்டு சங்காபிஷேகம் நடந்தது- சாந்திப்பிரியா