சாந்திப்பிரியா
-III-
தான் செய்த தவறுக்கு மன்னிப்பைக் கேட்டவர் தன்னை தனிக் கடவுளாகப் பார்க்காவிடிலும், தன்னை தனித் தன்மை கொண்ட கடவுளாக மக்கள் பார்க்க தனக்கு அருள் புரியுமாறு பராசக்தியிடம் வேண்டிக் கொள்ள, அந்தப் பெண்ணும் மாயமாக மறைந்தாள். அங்கு பராசக்தி தோன்றி அவரை ஆசிர்வதித்தார். ஒரு பெண்ணிற்காக நான்கு திசைகளையும் நோக்கிப் படர்ந்த அவரது முகங்கள் நான்கு திசைகளிலும் பரவும் வேதங்களைப் பிரதிபலிக்கும் என்றும், இனி நான்கு வேதத்தின் அதிபதி அவராக இருப்பார் என்றும், எந்த ஐந்தாவது தலையினால் அவர் தவறு செய்து சாபம் பெற்றாரோ அது சிவபெருமானினால் சாப விமோசனம் பெற்று மீண்டும் தேவ லோகத்துக்கே சென்று விடும் என்றும், இனி பிரும்மாவை மக்கள் நான்முகனாக, நான்கு வேதங்களை பிரதிபலிப்பவராக பார்ப்பார்கள்' என்றாள். அது போலவே பின்னர் வேதங்களின் அதிபதியாக வேதமாதா காயத்திரி அமைய, அவளையே மணம் புரிந்து கொண்ட பிரும்மாவிற்கும் அவளால், காயத்திரி எனும் சரஸ்வதியினால் மட்டுமே பூமியில் பெருமை கிடைத்தது. இப்படியாகவே பிரும்மா பெற்று இருந்த சாபத்தினால் பிரும்மாவின் ஐந்தாவது தலை சிவபெருமானின் துணை அவதாரமான பைரவரினால் அழிந்தது. சிவபெருமான் மூலமே சாப விமோசனம் பெற்று தேவலோகத்தை அடைந்தது.
உஜ்ஜயினியில் ஒரு பைரவர்
ஆலயத்தில் பைரவர்
ஒவ்வொரு கிரகத்திலும் ஒவ்வொரு பைரவர் ஆதிக்கத்தில் உள்ளார்கள். ஆகவே அந்தந்த கிரகங்களினால் ஏற்படும் தோஷத்தைக் களைந்து கொள்ள இங்குள்ள பைரவர் ஆலயத்துக்கு வந்து அந்த கிரகத்திற்குரிய பைரவ காயத்திரி மந்திரத்தை ஜெபித்து வந்தால் துயரங்கள் விலகும்.
வெளியூரில் உள்ளவர்கள் கிரக தோஷத்தை விலக்கிக் கொள்ள இந்த ஷேத்திரபால பைரவரை வேண்டிக் கொண்டு அந்த காயத்திரி மந்திரத்தை ஜெபித்துக் கொண்டு இருந்தவாறு, முடிந்தபோது ஒருமுறை இந்த ஆலயத்துக்கு வந்து கால பைரவரை வணங்கி துதிக்கலாம். ஆனால் இந்த பிராண காயத்திரி மந்திரத்தை ஜெபிக்கும் முன்னர் நல்ல குருவிடம் தீட்ஷை எடுத்துக் கொண்டு செய்வது மிக்க நல்ல பலனைத் தரும்.
அந்தந்த காயத்ரி மந்திரத்தை ஜெபிக்கையில் இருவருடைய மந்திரத்தையும், அதாவது பைரவர் மற்றும் காயித்திரி இரண்டு மந்திரங்களையும் சேர்த்தே ஜெபிக்க வேண்டும். ஒவ்வொரு மந்திரமும் ஐந்து அல்லது ஆறு வரிகளில் உள்ளன.
ஸ்வேதப் பிள்ளையார் முன்னால் ஏற்றி
வைக்கப்பட்டு உள்ள வேண்டுதல் தீபங்கள்
வைக்கப்பட்டு உள்ள வேண்டுதல் தீபங்கள்
இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் விஷேஷமானது. இந்த ஆலயத்தில்தான் நாம் செய்யும் ஒவ்வொரு பூஜைக்கும் போட வேண்டிய பூக்கள், மாலை, நெய் அல்லது எண்ணை தீபம் எந்த பாண்டத்தில் ஏற்ற வேண்டும், அன்னதானத்தில் போட வேண்டிய பதார்த்தங்கள் - கூட்டு முதல், பொறியல் மற்றும் இனிப்பு வகை வரை - அனைத்தையும் விவரமாக குறிப்பிட்டு உள்ளார்கள் என்பது ஆச்சர்யமாக உள்ளது! இந்த ஆலயத்தில் ஒவ்வொரு நாளிலும் செய்யக் கூடிய சில பூஜைகள் வருமாறு:
இந்த ஆலயத்து பைரவருக்கு புனுகு பூசி பூஜிப்பது விசேஷமானது. ஒவ்வொரு வேண்டுதலுக்காகவும் பூஜை செய்யும்போது பைரவருக்கு புனுகு பூசி பூஜை செய்வதை முக்கியமாகக் கருதுகிறார்கள். அது போலவே பல வேண்டுதல்களை நிறைவேற்றும்போதும் பாவற்காய் அன்னம், பாவக்காயில் நெய் விளக்கு ஏற்றி வைப்பது, பாவக்காய் கூட்டு செய்து அன்னதானம் செய்வது போன்றதை செய்வதின் மூலம் பாவக்காயிற்கு முக்கியம் தந்து உள்ளார்கள். பாவக்காயிற்கு முக்கியத்துவம் தரப்பட்டு உள்ளத்தின் காரணம் நான் அது குறித்துக் கேட்ட பல பண்டிதர்களுக்கும் கூட சரிவரத் தெரியவில்லை. யாருக்கேனும் அது குறித்து தெரிந்தால் அதை வெளியிடலாம்.
எலுமிச்சை பழம், பாவற்காய்,
மற்றும் பூஷணிக் காய்
முதலியவற்றில் ஏற்றி வைக்கப்பட்டு
முதலியவற்றில் ஏற்றி வைக்கப்பட்டு
உள்ள வேண்டுதல் தீபங்கள்
ஆலயத்தின் அர்ச்சகர் தொலைபேசி
- முற்றும் -