வசந்தபுரா வல்லப ராயா ஆலயம்
சாந்திப்பிரியா
சாந்திப்பிரியா
சமீபத்தில் ஒரு அற்புதமான ஆலயத்துக்கு சென்றேன். பெங்களூரில் வசந்தபுராவில் உள்ள அதன் பெயர் 'வசந்தபுரா வல்லப ராயா'ஆலயம். இந்த ஆலயத்தின் சரியானப் பெயர் ''பூனில வசந்த நாயகி சமேத வசந்த வல்லபராய ஸ்வாமி ஆலயம்''என்பது. இந்த ஆலயம் 1000 வருடங்களுக்கு முந்தையது. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம். இந்த ஆலயத்தின் முன்னால் ஒரு ஹனுமார் ஆலயமும் அதை சேர்த்து கட்டப்பட்டு உள்ளது. அந்த இரண்டுக்கும் இடையில் கிராம தேவதைக்கு என என்ற சிறு ஆலயமும் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த தேவதையை மாரியம்மன் எனவும் காத்யாயினி தேவதை என்றும் சிலர் கூறுகிறார்கள் . இவற்றைத் தவிர வல்லப ராயா ஆலயத்தின் பக்கத்திலேயே பவானி சங்கர் என்ற பெயரில் ஈஸ்வரனுக்கும் ஒரு ஆலயத்தை அமைத்து உள்ளார்கள். இந்த சிவன் ஆலயத்தைப் பற்றி இரண்டு கருத்துக்கள் உள்ளன. மராட்டிய மன்னன் சிவாஜி ஆண்டு வந்த காலத்தில் அவர் தென் பகுதிகளுக்கு வந்து பவானி தேவியை தரிசித்ததான கதைகள் உண்டு. அவர் வந்து வணங்கியதாக கூறப்படும் காளிகாம்பாள் ஆலயம் சென்னையில் உள்ளது. அப்போது மன்னன் சிவாஜி இந்த வசந்தபுரா ஆலயப் பகுதியில் இருந்த காட்டுப் பகுதியில் சில காலம் தங்கி இருந்ததாகவும், அப்போது அவர்தான் பவானி தேவி (பார்வதியின் அவதாரம்) மற்றும் சிவனின் சிலைகளை இங்கு பிரதிஷ்டை செய்து ஆலயத்தைக் கட்டியதாகவும் ஒரு செய்தி உள்ளது.
வசந்தபுரா வல்லப ராயா ஆலய வரலாறு
வசந்தபுரா வல்லப ராய ஸ்வாமி வேறு யாரும் அல்ல. அவர் திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாசப் பெருமானே. அங்குள்ள ஸ்ரீனிவாசப் பெருமான் தனது திருமணத்தை திருப்பதி அருகில் முடிந்துக் கொண்டப் பின் அந்த காலத்து வழக்கப்படி திருமணம் ஆனா மறுநாள் செய்து வந்த மஞ்சள் நீராடுதலை செய்ய இந்த இடத்துக்கு வந்தாராம். அப்போது இந்த இடம் வனப் பிரதேசமாக இருந்து உள்ளது. அவருக்கு இங்கு எப்படி ஆலயம் அமைந்தது?
ஒரு சமயம் மாண்டவ்ய முனிவர் கங்கை நதிக் கரையில் இருந்த தமது ஆசிரமத்தை விட்டு வெளியேறி விஷ்ணுவை தரிசிக்க தென் பகுதிக்கு வந்தார். அவர் எங்கு சென்றார் என்பதை எவருக்கும் கூறவில்லை என்பதினால் அவருடைய சிஷ்யர்கள் கவலை அடைந்து அவரை பல இடங்களிலும் தேடி அலைந்தார்கள். தேடி அலைந்ததில் அவர் தற்போது வல்லபா ராயே ஆலயம் உள்ள இடத்தின் அருகில் இருந்த ஒரு வனத்தில் தங்கி உள்ளதை அறிந்து கொண்டு அவரிடம் அங்கு வந்து யாருக்கும் கூறாமல் ஏன் இங்கு வந்து விட்டீர்கள் எனக் கவலையோடு வினவினார்கள்.
மாண்டவ்ய முனிவர் கங்கையில் இருந்து பத்ரிநாத்திற்கு சென்று அங்கிருந்த விஷ்ணுவை வணங்கியதாகவும் அப்போது அவர் தனக்கு ஒரு பீஜாஷர மந்திரத்தை உபதேசித்ததாகவும் அதைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து திரும்பிய வழியில் விஷ்ணுவானவர் வடக்கில் பத்ரினாத்தில் உள்ளதைப் போலவே தெற்குப் பகுதியிலும் ஒரு மலைக் குன்றில் எழுந்தருளி உள்ளார் எனக் சில ரிஷி முனிவர்கள் கூறிய தகவலைக் கேட்டு சரி தென் பகுதியில் விஷ்ணுவை தரிசிக்கலாம் என்ற எண்ணத்தில் விஷ்ணுவைத் தேடி இங்கு வந்ததாகவும் கூறினார்.
மாண்டவ்ய முனிவர் முதலில் வந்து தங்கி இருந்த இடம் மேல்கோட்டையில் இருந்த ஒரு காட்டுப் பகுதி. அந்த பகுதியின் மலைக் குன்றில் அவர் தவத்தில் அமர்ந்து இருந்தபோது அவர் கனவில் தோன்றிய விஷ்ணு ஒரு குறிப்பிட்ட இடத்தைக் கூறி அங்கு உள்ள மலைப் பகுதியில் தான் ஸ்வயம்புவாக எழுந்துள்ளதாகவும், அங்கு வந்து தன்னை வணங்குமாறும் கூறினார். மாண்டவ்ய முனிவரும் அவரைத் தேடி விஷ்ணு கூறிய அந்த இடத்தில் இருந்த மலைப் பகுதியை அடைந்து விஷ்ணுவை தரிசித்தார். அதுவே தற்போது வல்லபா ராயே ஆலயம் உள்ள பகுதி. அவர் கூறிய இடத்தில் இருந்த சிலையை எடுத்து வழிபடலானார். மாண்டவ்ய முனிவர் எங்கு வந்தபோது வசந்தபுரா பெங்களுர் நகரின் பகுதி அல்ல. சுற்றிலும் காட்டுப் பகுதிகள் இருக்க அது தனிக் கிராமமாக இருந்ததாம். அந்தக் காட்டுப் பகுதிகளில் பல ரிஷி முனிவர்கள் வந்து தவத்தில் அமர்ந்து இருப்பார்களாம்.
மாண்டவ்ய முனிவருக்கு ஸ்வயம்புவாக காட்சி தந்த விஷ்ணுவானவர் திருமணம் ஆகி மஞ்சள் நீராட வந்தேன் என்ற செய்தியைக் கூறினாராம். திருமணம் ஆகி மஞ்சள் நீராட வந்த இந்த இடத்தில் வசந்த வல்லபராயா எனும் பெயரில் தான் தங்கி இருந்து பக்தர்களின் கஷ்டங்களைக் களைந்து ஆசி கூறிக் கொண்டு இருப்பேன் எனவும் கூறினாராம். அந்த மஞ்சள் நீராடும் வைபவத்திற்கு வந்த ஹனுமான், சிவன், பார்வதி போன்றவர்களும் அங்கு எழுந்தருளினார்கள். அந்த ஆலயம் இருந்த இடத்தில் ஐந்து தீர்த்தங்கள் இருந்துள்ளன. அவை வசந்த தீர்த்தா, சங்கர தீர்த்தா, தேவ தீர்த்தா போன்றவை. மற்ற இரண்டு தீர்த்தங்களின் பெயர் தெரியவில்லை. அந்த கதையைக் கேள்விப்பட்ட சோழ மன்னர்களே அந்த சிலையை எடுத்து ஆலயத்தை அமைத்து உள்ளார்கள். அதனால்தான் ஆலயம் ஒரு சின்ன குன்று போன்ற பகுதியில் வசந்தபுராவில் அமைந்து உள்ளது.
ஆலயம் மிகப் பெரிய பிராகாரத்துடன் அமைந்து உள்ளது. ஆலய நுழை வாயிலின் வெளியில் கருடாழ்வார் ஸ்ரீனிவாசப் பெருமானாக வந்து வல்லபராயாவாக காட்சி தரும் விஷ்ணுவை நோக்கி வணங்கியவாறு அமர்ந்து உள்ளார். ஆலயத்தின் உள்ளே நுழைந்தால் இடதுபுறக் கோடியில் ஒரு பெரிய சிலையாக ஹனுமான் தங்கத் தகட்டில் மின்னுகின்றார்.
இடதுபுறத்தை நோக்கியவாறு நின்ற நிலையில் உள்ள ஹனுமான் வாயில் சூரியனைப் போன்ற ஒரு பந்தை சிவப்பு நிறத்தில் வைத்துக் கொண்டு காட்சி தருகிறார். அவரை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல அத்தனை அருமையாக காட்சி தருகிறார்.
சிவன் ஆலயத்தில் உள்ள ஒரு படம்
வசந்தபுரா வல்லப ராயா ஆலய வரலாறு
வசந்தபுரா வல்லப ராய ஸ்வாமி வேறு யாரும் அல்ல. அவர் திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாசப் பெருமானே. அங்குள்ள ஸ்ரீனிவாசப் பெருமான் தனது திருமணத்தை திருப்பதி அருகில் முடிந்துக் கொண்டப் பின் அந்த காலத்து வழக்கப்படி திருமணம் ஆனா மறுநாள் செய்து வந்த மஞ்சள் நீராடுதலை செய்ய இந்த இடத்துக்கு வந்தாராம். அப்போது இந்த இடம் வனப் பிரதேசமாக இருந்து உள்ளது. அவருக்கு இங்கு எப்படி ஆலயம் அமைந்தது?
ஒரு சமயம் மாண்டவ்ய முனிவர் கங்கை நதிக் கரையில் இருந்த தமது ஆசிரமத்தை விட்டு வெளியேறி விஷ்ணுவை தரிசிக்க தென் பகுதிக்கு வந்தார். அவர் எங்கு சென்றார் என்பதை எவருக்கும் கூறவில்லை என்பதினால் அவருடைய சிஷ்யர்கள் கவலை அடைந்து அவரை பல இடங்களிலும் தேடி அலைந்தார்கள். தேடி அலைந்ததில் அவர் தற்போது வல்லபா ராயே ஆலயம் உள்ள இடத்தின் அருகில் இருந்த ஒரு வனத்தில் தங்கி உள்ளதை அறிந்து கொண்டு அவரிடம் அங்கு வந்து யாருக்கும் கூறாமல் ஏன் இங்கு வந்து விட்டீர்கள் எனக் கவலையோடு வினவினார்கள்.
மாண்டவ்ய முனிவர் கங்கையில் இருந்து பத்ரிநாத்திற்கு சென்று அங்கிருந்த விஷ்ணுவை வணங்கியதாகவும் அப்போது அவர் தனக்கு ஒரு பீஜாஷர மந்திரத்தை உபதேசித்ததாகவும் அதைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து திரும்பிய வழியில் விஷ்ணுவானவர் வடக்கில் பத்ரினாத்தில் உள்ளதைப் போலவே தெற்குப் பகுதியிலும் ஒரு மலைக் குன்றில் எழுந்தருளி உள்ளார் எனக் சில ரிஷி முனிவர்கள் கூறிய தகவலைக் கேட்டு சரி தென் பகுதியில் விஷ்ணுவை தரிசிக்கலாம் என்ற எண்ணத்தில் விஷ்ணுவைத் தேடி இங்கு வந்ததாகவும் கூறினார்.
மாண்டவ்ய முனிவர் முதலில் வந்து தங்கி இருந்த இடம் மேல்கோட்டையில் இருந்த ஒரு காட்டுப் பகுதி. அந்த பகுதியின் மலைக் குன்றில் அவர் தவத்தில் அமர்ந்து இருந்தபோது அவர் கனவில் தோன்றிய விஷ்ணு ஒரு குறிப்பிட்ட இடத்தைக் கூறி அங்கு உள்ள மலைப் பகுதியில் தான் ஸ்வயம்புவாக எழுந்துள்ளதாகவும், அங்கு வந்து தன்னை வணங்குமாறும் கூறினார். மாண்டவ்ய முனிவரும் அவரைத் தேடி விஷ்ணு கூறிய அந்த இடத்தில் இருந்த மலைப் பகுதியை அடைந்து விஷ்ணுவை தரிசித்தார். அதுவே தற்போது வல்லபா ராயே ஆலயம் உள்ள பகுதி. அவர் கூறிய இடத்தில் இருந்த சிலையை எடுத்து வழிபடலானார். மாண்டவ்ய முனிவர் எங்கு வந்தபோது வசந்தபுரா பெங்களுர் நகரின் பகுதி அல்ல. சுற்றிலும் காட்டுப் பகுதிகள் இருக்க அது தனிக் கிராமமாக இருந்ததாம். அந்தக் காட்டுப் பகுதிகளில் பல ரிஷி முனிவர்கள் வந்து தவத்தில் அமர்ந்து இருப்பார்களாம்.
மாண்டவ்ய முனிவருக்கு ஸ்வயம்புவாக காட்சி தந்த விஷ்ணுவானவர் திருமணம் ஆகி மஞ்சள் நீராட வந்தேன் என்ற செய்தியைக் கூறினாராம். திருமணம் ஆகி மஞ்சள் நீராட வந்த இந்த இடத்தில் வசந்த வல்லபராயா எனும் பெயரில் தான் தங்கி இருந்து பக்தர்களின் கஷ்டங்களைக் களைந்து ஆசி கூறிக் கொண்டு இருப்பேன் எனவும் கூறினாராம். அந்த மஞ்சள் நீராடும் வைபவத்திற்கு வந்த ஹனுமான், சிவன், பார்வதி போன்றவர்களும் அங்கு எழுந்தருளினார்கள். அந்த ஆலயம் இருந்த இடத்தில் ஐந்து தீர்த்தங்கள் இருந்துள்ளன. அவை வசந்த தீர்த்தா, சங்கர தீர்த்தா, தேவ தீர்த்தா போன்றவை. மற்ற இரண்டு தீர்த்தங்களின் பெயர் தெரியவில்லை. அந்த கதையைக் கேள்விப்பட்ட சோழ மன்னர்களே அந்த சிலையை எடுத்து ஆலயத்தை அமைத்து உள்ளார்கள். அதனால்தான் ஆலயம் ஒரு சின்ன குன்று போன்ற பகுதியில் வசந்தபுராவில் அமைந்து உள்ளது.
ஸ்ரீதேவி பூதேவியுடன்
ஸ்ரீனிவாசப் பெருமான்
ஆலய அமைப்புஆலயம் மிகப் பெரிய பிராகாரத்துடன் அமைந்து உள்ளது. ஆலய நுழை வாயிலின் வெளியில் கருடாழ்வார் ஸ்ரீனிவாசப் பெருமானாக வந்து வல்லபராயாவாக காட்சி தரும் விஷ்ணுவை நோக்கி வணங்கியவாறு அமர்ந்து உள்ளார். ஆலயத்தின் உள்ளே நுழைந்தால் இடதுபுறக் கோடியில் ஒரு பெரிய சிலையாக ஹனுமான் தங்கத் தகட்டில் மின்னுகின்றார்.
ஆலய சன்னதியில் உள்ள ஹனுமார்
ஸ்ரீதேவி பூதேவியுடன்
ஸ்ரீனிவாசப் பெருமான் - இன்னொரு காட்சி
பத்மாவதித் தாயார்
ஆலய விலாசம் :
Vasantha Vallabha Raya Swamy Temple
Vasantapura,
Near Uttarahalli ,
Bangalore - 560061
Vasantha Vallabha Raya Swamy Temple
Vasantapura,
Near Uttarahalli ,
Bangalore - 560061