Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

ஆகாஷபுரீஸ்வரர் ஆலயம்

$
0
0
ஆகாஷபுரீஸ்வரர் ஆலயம்
சாந்திபிரியா 

தஞ்சாவூரில் உள்ள காடுவெளி சித்தர் ஆலயம் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். இந்த ஆலயம் உள்ள இடத்தில்தான் காடுவெளி சித்தர் பிறந்தாராம். காடுவெளி சித்தர் பல மேன்மை வாய்ந்த சக்திகளைக் கொண்ட 152 சித்தர்களில் ஒருவர் ஆகும். காடுவெளியில் அவர் சிவபெருமானை துதித்து தவத்தில் இருந்தார். அவர் தவத்தை மெச்சிய சிவபெருமான் அவருக்கு காட்சி தந்து அஷ்டமா சித்திகளை அருளினாராம். அவை எளிதில் எவருக்கும் கிடைக்காத சக்திகள்.

இந்த ஆலயம் உள்ள வெட்ட வெளியில் பூராட நக்ஷத்திரத்தின் ஒளி படர்ந்து உள்ளது. காடுவெளி என்றால் பரந்த, திறந்த வெளி என்று பெயர். இந்த பரந்த வெளி அகண்டத்தின் முனைப் பகுதியான விளும்பில் உள்ளது. ஆகவேதான் காடுவெளி ஆலயம் அகண்டத்தின் விளும்பில் உள்ளது ஆகும். அங்கு ஆலயம் உள்ளதினால் சிவபெருமான் அங்கு வெட்ட வெளியில் ஒளிமயமான வெளிச்சத்தில் காட்சி தருகிறார்.

ஆலயங்கள் பஞ்ச பூதங்களான ஆகாயம், நீர், நெருப்பு, அகண்டம் மற்றும் காற்று போன்ற ஐந்து குணங்களில் ஒன்றைக் கொண்டவையாக அமைந்து இருந்தால் அவை மென்மையான ஆலயமாகும். இந்த ஆலயமும் ஆகாயத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது என்பதினால் விசேஷமான ஆலயம் ஆகும்.  இந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமானை பூராட நட்சத்திரம் வணங்கித் துதிப்பதான ஐதீகம் உண்டு. அதைப் போல ஆகாயத்தில் குடி உள்ள அனைத்து தேவ தேவர்களும், வாயு பகவானும், வாஸ்து பகவானும் பூராட நட்சத்திர தினங்களில் இங்கு வந்து சிவபெருமானை துதிப்பதான ஐதீகம் உண்டு. ஆகவேதான் இந்த ஆலயத்தின் மூல தெய்வமான சிவபெருமானை ஆகாஷபுரீஸ்வரர் என்று அழைக்கிறார்கள். அவர் மனைவியான பார்வதி இங்கு மங்களாம்பிகையாக எழுந்தருளி உள்ளார்.

இந்த ஆலயத்தின் மகிமை என்னவெனில் இங்கு காடுவெளி சித்தர் தவத்தில் இருந்தபோது சிவபெருமான் அவருக்கு காட்சி தந்தார். அப்போது காடுவெளி சித்தர் சிவபெருமானை துதித்து வணங்கும்போது அதற்கு தாம் இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்பதற்காக நந்தி தேவர் வெளியில் சென்று அமர்ந்து கொண்டாராம். அதனால் நந்தியின் சிலை ஆலய சந்நிதானப் பகுதியில் இல்லாமல் ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் காணப்படுகிறது.

பூராட நட்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் தமது நட்சத்திர பிறந்த நாளன்று இந்த ஆலயத்துக்கு வந்து வணங்கி தமக்கு வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் விலகவும், வாழ்க்கையில் மேன்மை அடையவும், பாபங்கள் விலகவும் சிவபெருமானை வேண்டித் துதித்து புனுகு மற்றும் ஜவ்வாது போன்ற வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்கிறார்கள். முக்கியமாக திருமணத் தடைகள் விலகவும் வேண்டுகிறார்கள். வீடு கட்டும் முன் இங்கு வந்து வாஸ்து பூஜையும் செய்கிறார்கள். அதனால் வீடு கட்டுவதில் ஏற்படும் தடங்கல் விலகும் என்பதும் நம்பிக்கை ஆகும்.

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>